Published:Updated:

பொல்லார்ட்டின் பவரும், சிமென்ஸின் சாதனையும்... மீண்டும் சாம்பியனான ஷாருக்கான் டீம்! #CPL

#CPL
#CPL

கரீபிய மைதானங்களில் இந்த 150+ யே டிஃபெண்ட் செய்வதற்கு போதுமான ஸ்கோர்தான். லூசியா அணி ஏற்கனவே 92 ரன்னையெல்லாம் டிஃபெண்ட் செய்திருக்கிறது என்பதால் எப்படியும் இந்தப் போட்டியில் ஏதாவது ட்விஸ்ட் இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த சீசனின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, தோல்வியையே சந்திக்காத அணியாக நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்.

பொல்லார்ட் தலைமையில் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் இந்த சீசன் முழுவதுமே பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தது. மற்ற அணிகள் எல்லாம் ஸ்லோ பிட்ச்சில் தடுமாறி திக்குமுக்காட ட்ரின்பாகோ மட்டும் பெரும்பாலான போட்டிகளை எந்தத் தடுமாற்றமும் இன்றி எளிதில் வென்றது. லூசியா அணி, கொஞ்சம் தட்டுத்தடுமாறி விளையாடியிருந்தாலும் அரையிறுதியில் வலுவான கயானா அணியை 55 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கி வெறித்தன வெற்றியைப் பெற்றிருந்தது. இதே அணிதான் பார்படாஸ்-க்கு எதிராக 92 ரன்னை டிஃபண்ட் செய்திருந்தது. நல்ல பவர்ஃபுல்லான பேட்டிங்-பெளலிங் லைன் அப்களை கொண்ட ஆல்ரவுண்டரான ட்ரின்பாகோ அணிக்கும் நல்ல பௌலிங் அட்டாக்கை கொண்ட லூசியா அணிக்கும் இறுதிப்போட்டி என்பதால் இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

ரஸல், நரேன், மார்கன் என மேட்ச் வின்னர்கள் அதிகம்... ஆனால், தினேஷ் கார்த்திக்?! LEAGUE லீக்ஸ் -2 #KKR

120+ ஸ்கோரே இந்த சீசனில் வெற்றிபெறக்கூடிய ஸ்கோராகத்தான் இருந்தது. ஆனால் முதலில் பேட் செய்த லூசியா அணியில் ஃப்ளெட்சர் பவர்ப்ளேயில் வெளுத்தெடுக்க லூசியாவின் ஸ்கோர் பவர்ப்ளே முடிவில் 60 ஆக இருந்தது. மார்க் டெயல் கொஞ்சம் நின்று ஆட, ஃப்ளெட்சர் ஓவருக்கு ஒரு பவுண்டரி என ரன்ரேட்டை விழாமல் பார்த்துக்கொண்டார். 9-வது ஓவர் வரை நல்ல அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த இந்தக் கூட்டணிக்கு ஃபவாத் அஹ்மத், பொல்லார்ட், அகில் ஹுசைன் என மூவரும் கட்டுக்கோப்பாக வீசி பவுண்ட்ரிக்களை இல்லாமல் செய்ய அங்கே இருந்து லூசியாவின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. பொல்லார்ட் மட்டும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். பெரிய ஸ்கோர் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட லூசியா 154-க்கு ஆல் அவுட் ஆனது.

#CPL
#CPL

கரீபிய மைதானங்களில் இந்த 150+ யே டிஃபெண்ட் செய்வதற்கு போதுமான ஸ்கோர்தான். லூசியா அணி ஏற்கனவே 92 ரன்னையெல்லாம் டிஃபெண்ட் செய்திருக்கிறது என்பதால் எப்படியும் இந்தப் போட்டியில் ஏதாவது ட்விஸ்ட் இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. அதேமாதிரி பவர்ப்ளேயில் சுனில் நரைன் இல்லாத குறையை அந்த அணி வெகுவாக அனுபவித்தது. 6 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இதன் பிறகு சிம்மன்ஸ் மற்றும் டேரன் பிராவோ இருவரும் கூட்டணி சேர்ந்தனர்.

கிட்டத்தட்ட 13-வது ஓவர் வரைக்குமே ஆட்டம் இங்கும் மெதுவாகவே சென்று கொண்டிருந்தது. 13 ஓவர்கள் முடிவில் 86 ரன்களை எடுத்திருந்தது டிரின்பாகோ. அடுத்த கியரை மாற்றுவதற்கு சரியான பௌலரை எதிர்பார்த்து காத்திருந்த இந்தக் கூட்டணிக்கு கிளென்னை அறிமுகப்படுத்தி வைத்தார் சமி. இந்த ஓவரில்தான் ஆட்டம் ட்ரின்பாகோ பக்கம் திரும்பியது. இரண்டு சிக்சர்கள் உள்பட இந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள். கிளென் ஒரு முழு நேர பௌலர் கிடையாது. இந்த சீசனில்தான் தனது முதல் ஓவரையே வீசியிருந்தார். முந்தைய மேட்ச்களில் இவரை ஒரு சர்ப்ரைஸாக சமி பயன்படுத்தியிருந்தாலும் இந்தப் போட்டியின் முக்கியமான கட்டத்தில் இரண்டு செட்டிலான அனுபவ வீரர்கள் இருக்கையில் அவரைக் கொண்டு வந்தது மிகப்பெரிய தவறாக அமைந்துவிட்டது. இந்தத் தவறு ட்ரின்பாகோவை நான்காவது முறையாக சாம்பியனாகவும் மாற்றிவிட்டது.

#CPL
#CPL

2015, 2017, 2018 ஆகிய ஆண்டுகளைத் தொடர்ந்து இந்த முறையும் கோப்பையை வென்றது ட்ரின்பாகோ. இந்த ஆட்டத்தில் டுவெய்ன் பிராவோ ஒரு பந்து கூட வீசவில்லை. சுனில் நரேன் அணியில் இல்லை... இருந்தும் டிரின்பாகோ இப்படி ஒரு வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் பொல்லார்டின் கேப்டன்சியே! கொல்கத்தா நைட் ரைடர்ஸின் உரிமையாளர்களான ஷாருக்கானும், ஜுஹி சால்வாவும்தான் டிரின்பாகோ நைட் ரைடர்ஸுக்கும் உரிமையாளர்கள். கரீபியன் லீக் முடிந்துவிட்டது. அடுத்து இந்தியன் பிரிமியர் லீகுக்காக காத்திருக்கிறார் ஷாருக்கான்!

வாழ்த்துகள் சாம்பியன்ஸ்!

அடுத்த கட்டுரைக்கு