Published:Updated:

ஸ்டோக்ஸ் இல்லா இங்கிலாந்து; பௌலிங்கில் மிரட்டும் பாகிஸ்தான் - எப்படியிருக்கும் 2வது டெஸ்ட்? #EngVsPak

ஸ்டோக்ஸின் இடத்தில் யாரை கொண்டு வரப்போகிறார்கள் என்பது பெரிய கேள்வி. ஒருவேளை பட்லரிடமிருந்து விக்கெட் கீப்பீங் கிளவுஸை வாங்கி, ரொம்ப நாள்களாக வாய்ப்புக்காக காத்திருக்கும் பென் ஃபோக்ஸிடம் கொடுத்துவிட்டு பட்லரை ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்று சவுத்தாம்ப்டனில் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் நடைபெற்ற மான்செஸ்டரை விட சவுத்தாம்ப்டனில் ஸ்விங் அதிகம் இருக்கும் என்பதால் இந்தப் போட்டியிலும் பௌலர்களின் கைதான் ஓங்கியிருக்கும். முதல் போட்டியில் பெரிதாக சோபிக்காமல் போன ஆண்டர்சன் குறித்து ரிட்டையர்மென்ட் சர்ச்சை சுற்றிக்கொண்டிருக்கிறது. இப்போதைக்கு ஓய்வு குறித்த எண்ணம் இல்லை என ஆண்டர்சன் சொல்லிவிட்டதாலும், கேப்டன் ரூட்டும் ஆண்டர்சன் மீது நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்திருப்பதாலும் அவருக்கு இந்தப் போட்டியிலும் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்கலாம். ஒருவேளை ஆண்டர்சனுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாம் என நினைத்தால் மார்க் வுட்டிற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

Ben Stokes
Ben Stokes
AP

கடந்த போட்டியில் சொதப்பியிருந்தாலும் பென் ஸ்டோக்ஸ் எப்போதும் ஒரு மேட்ச் வின்னர். விண்டீஸ்களுக்கு எதிராக முதல் டெஸ்ட்டில் தோற்றவுடன் இரண்டாவது டெஸ்ட்டில் எப்படி வெறித்தனமாக விளையாடினார் என்பது அனைவருக்கும் தெரியும். நிச்சயம் அவர் இல்லாத ப்ளேயிங் லெவன் இங்கிலாந்துக்குப் பெரும் பின்னடைவாகத்தான் இருக்கப்போகிறது. ஸ்டோக்ஸின் இடத்தில் யாரை கொண்டு வரப்போகிறார்கள் என்பது பெரிய கேள்வி. ஒருவேளை பட்லரிடமிருந்து விக்கெட் கீப்பீங் கிளவுஸை வாங்கி, ரொம்ப நாள்களாக வாய்ப்புக்காக காத்திருக்கும் பென் ஃபோக்ஸிடம் கொடுத்துவிட்டு பட்லரை ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறக்கலாம்.

பட்லர் கடந்த டெஸ்ட்டில் அரைசதம் அடித்து தன் மீது இருந்த ப்ரஷரை குறைத்திருக்கிறார் என்றாலும் இன்னமும் ஒரு தரமான டெஸ்ட் இன்னிங்ஸ் பட்லரிடமிருந்து வரும்போதுதான் அவரை முழுமையான டெஸ்ட் வீரராக ஏற்றுக்கொள்ள முடியும். கேப்டன் ஜோ ரூட்டும் களத்தில் நின்று, நிலைத்து ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Joe Root
Joe Root
ENGLAND CRICKET

பாகிஸ்தானைப் பொறுத்தவரைக்கும் டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு செஷனிலும் இங்கிலாந்து காட்டும் ஆதிக்கத்தை அசைத்து பார்த்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பட்லர் - வோக்ஸ் இருவரின் கூட்டணி மட்டுமே பாகிஸ்தான் பௌலர்களின் கையை மீறிப் போனது. அந்த பார்ட்னர்ஷிப் மட்டும்தான் ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்புவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. ஷாஹீன் அஃப்ரிடி, அப்பாஸ், யாஸின், நஸீம் என ஒரு நல்ல பௌலிங் படை கேப்டன் அசார் அலிக்கு கிடைத்திருக்கிறது. சரியான நேரத்தில் சரியான பௌலர்களிடம் பந்தைக் கொடுத்தார் எனில் இங்கிலாந்தின் பேட்டிங் லைன் அப்பை இந்த முறையும் ஆட்டம் காண வைத்துவிடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பௌலர்களும் தொடக்கத்தில் இருக்கும் அக்ரஷனையும் பந்தில் காட்டும் வேரியேஷன்களையும் ஆட்டத்தின் கடைசி நிமிடம்வரை தக்கவைக்க வேண்டும். பேட்டிங்கில் ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் இருவரை மட்டுமே நம்பி இல்லாமல் இவர்களைச் சுற்றி இன்னும் கூடுதலாக ஒன்றிரண்டு பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டும்.

பாபர் அசாம்
பாபர் அசாம்
PCB
கொடுங்கனவு `வாசிம் அக்ரம்’; `கடினம்’ ஜாகீர்கான்; முரளிதரன் ஸ்பெஷல்! - சங்ககாரா ஷேரிங்ஸ்
3 மேட்ச் கொண்ட டெஸ்ட் சீரிஸ்களில் முதல் போட்டியில் தோல்வியுற்றப் பிறகு மீண்டு வந்து இதற்கு முன் ஒரே ஒரு முறை மட்டும்தான் தொடரை வென்றுள்ளது பாகிஸ்தான்.

90-களின் தொடக்கத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான அந்த நிகழ்வுக்குப் பிறகு அப்படி ஒரு சாதனையை பாகிஸ்தான் நிகழ்த்தியதில்லை. இந்த முறை ஒரு தரமான பௌலிங் லைன்அப்போடு இங்கிலாந்து சென்றிருக்கும் பாகிஸ்தானுக்கு மீண்டும் அப்படியொரு சாதனை வசப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு