Published:Updated:

ஆஷஸ் - ஒரு பத்திரிகையாளரால் தொடங்கிய மாபெரும் தொடர்!

Ashes 2021-22
News
Ashes 2021-22 ( AP )

1877 மார்ச் முதல் 1882 வரை நடந்த எட்டு போட்டிகளில் நான்கில் ஆஸ்திரேலியாவும், இரண்டில் இங்கிலாந்தும் வென்றன. இரண்டு போட்டிகள் டிரா ஆனது. 'நடந்த எட்டு போட்டிகளில் ஏழு போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்ததால் ஆஸ்திரேலியா வெற்றி பெறுகிறது' என்பதாக சமாளித்தது இங்கிலாந்து.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஒருமித்து எதிர்நோக்கிக் காத்திருந்து பார்க்கும் டெஸ்ட் தொடர் எதுவென்றால் அது ஆஷஸ் தான். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு என்றுமே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆக்ரோஷமான பேட்டிகள், நொடிப்பொழுதில் மாறும் ஆட்டத்தின் போக்கு, அசத்தலான ரசிகப் படைகள், வீரர்களுக்குள் ஏற்படும் முட்டல் மோதல்கள் என ஆஷஸ் என்றாலே அலப்பறை தான். சுமார் நூற்றாண்டு பாரம்பரியம் வாய்ந்த ஆஷஸ் தொடர் நடப்பதற்கு காரணம் ஒரு ஆங்கிலேய பத்திரிக்கையாளர் தான் தெரியுமா!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

"எங்கள் நாட்டின் சூரியன் என்றுமே அஸ்தமனம் ஆகாது" என்று மிகவும் இறுமாப்புடன் வலம் வந்தது இங்கிலாந்து. காலனித்துவத்தால் பாதி உலகத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது அந்நாடு. கிரிக்கெட்டை மற்ற நாடுகளுக்கு பிரபலப்படுத்த, தங்களது கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி அடிக்கடி விளையாடியது இங்கிலாந்து. ஆனால் யாரும் எதிர்பாராமல் இங்கிலாந்து அணியை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது ஆஸ்திரேலியா. 1877 மார்ச் முதல் 1882 வரை நடந்த எட்டு போட்டிகளில் நான்கில் ஆஸ்திரேலியாவும், இரண்டில் இங்கிலாந்தும் வென்றன. இரண்டு போட்டிகள் டிரா ஆனது. 'நடந்த எட்டு போட்டிகளில் ஏழு போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்ததால் ஆஸ்திரேலியா வெற்றி பெறுகிறது' என்பதாக சமாளித்தது இங்கிலாந்து.

இதற்கு மேல் அவமனாப்பட முடியாது என ஆஸ்திரேலியாவை இங்கிலாந்துக்கு ஆட அழைத்தது. WG.Grace இந்த ஆட்டத்தில் ஆடுவார் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பிறகு ஆடிய இங்கிலாந்து அணி 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்த ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் சாம்யூல் ஜோன்ஸ் எனும் வீரர் சிறப்பாக விளையாடினாலும் அவரை வேண்டுமென்றே ரன் அவுட் செய்து அப்பீல் செய்தார் WG.Grace. அதற்கு அம்ப்பயர், "நீங்கள் சொன்னால் அவுட் தான் சார்" என்று கூறி அவுட் கொடுத்தார். இங்கிலாந்தில் அப்போது கிரேஸின் செல்வாக்கு அந்த அளவுக்கு இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதான் ஆஸ்திரேலிய - இங்கிலாந்து தொடரில் நடந்த முதல் சர்ச்சை. அம்ப்பயரிடம் எவ்வளவோ வாக்குவாதம் செய்தாலும் இங்கிலாந்து அணிக்கு சாதகமாகத்தான் அம்ப்பயரிங் இருந்தது. இது, ஆஸ்திரேலிய அணிக்கு வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்க, 85 என்ற எளிய இலக்கை டிஃபண்ட் செய்து 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. கிரேஸ் இருந்தாலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாமல் சொந்த நாட்டிலேயே மண்ணைக் கவ்வியது இங்கிலாந்து.

The Ashes
The Ashes
AP

சொந்த நாட்டிலே இங்கிலாந்து தோல்வியுற்றதும், அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையான ஸ்போர்டிங் டைம்ஸ், "ஆகஸ்ட் 29, 1882 அன்று ஓவல் மைதானத்தில் இறந்த ஆங்கில கிரிக்கெட்டின் அன்பான நினைவாக, நாம் நண்பர்கள் சார்பாக துக்கம் அனுபவிக்கிறோம். இங்கிலாந்து கிரிக்கெட் எரியூட்டப்பட்டு அந்த சாம்பல் (Ashes) ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது" என்று எழுதினார். ஆஸ்திரேலிய அணி எடுத்துச்சென்ற ஆஷஸை மீட்பது தான் அப்போதைய இங்கிலாந்தின் தலையாய பணியாக இருந்தது.

1883-ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா புறப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை உணர்ந்து கிரேஸ் போன்ற மூத்த வீரர்கள் ஜகா வாங்கினாலும், ஐவோ பிளைக் தலைமையில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. ஆஸ்திரேலியா போவதற்கு முன்பே இலங்கைக்கு அருகே வரும் போது

Ashes 2021-22
Ashes 2021-22
AP

அவர்களின் கப்பல் சேதமுற, ஃப்ரெட் மார்லி என்னும் இங்கிலாந்து வீரரின் விலா எலும்புகள் முறிந்தன.

இவ்வளவு சிக்கல்களுடன் ஆஸ்திரேலியாவை அடைந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி எளிதாக 9 விக்கெட் வித்தியாசதீதில் வெற்றி பெற்றது. இருந்தாலும் இங்கிலாந்து அணி கேப்டன் "நாங்கள் கங்காருவின் குகைக்குள் சென்று அதை வீழ்த்தத் தான் வந்திருக்கிறோம்" என்று கூறினார். அதற்கு ஆஸ்திரேலிய அணியோ, "நாங்கள் கொண்டு வந்த ஆஷஸ் கொண்டு வந்தது தான். அதை யாரும் மீட்க முடியாது" என்று கூற இரண்டாம் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

தற்போது போல மழை வந்தால் பிட்ச்சை மூடுவது எல்லாம் அப்போது கிடையாது. இங்கிலாந்து ஸ்பின்னர் அசத்த, ஆஸ்திரேலிய அணிக்கு இன்னிங்ஸ் தோல்வியை வழங்கியது இங்கிலாந்து. முதன் முதலில் ஆடுகளத்தை சேதப்படுத்துகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது இந்தத் ஆட்டத்தில் தான். இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்துக்கு மாற்றப்பட்டது. இருந்தாலும் 153 என்ற இலக்கை எடுக்க முடியாமல் 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது ஆஸ்திரேலியா. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்றது.

இதுவரை ஏதோ டாக்குமெண்டரி படம் பார்த்தது போல் இருக்கிறதா? இனி ரொமான்டிக் பக்கத்துக்கு போவோம். டைட்டானிக் போன்ற கதைகளில் கூட காதல் இருந்தால் தானே ஹிட் அடிக்கும். ஆஷஸ் வரலாற்றில் இல்லாமல் போகுமா என்ன? இங்கிலாந்து கேப்டன் ஐவோ பிளைக் வெற்றி பெற்றதும் ஜேனட் என்ற பெண் தன்னுடைய வாசனை திரவிய குப்பியில் பெயில்ஸ் ஒன்றை எரித்து அதன் சாம்பலை அதில் நிரப்பி அஸ்தியை எடுத்துச் செல்லுங்கள் என்று கொடுத்தார். ஜேனட்டுக்கு உதவியாளராக வந்தவர் ஃப்ளாரன்ஸ் மர்பி. ஆஸ்திரேலியாவின் மிக கீழ்நிலையில் இருந்தவர் ஃப்ளாரன்ஸ். ஆனால் பிளைக் இங்கிலாந்தின் மிக உயரிய பதவிகளை வகித்தவர். பாராளுமன்றம் சென்றவர். இந்த இருவருக்கும் மெல்ல காதல் மலர, ஐவோ பிளைக் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து ஃப்ளாரன்ஸை திருமணம் செய்து கொண்டார்.

தன் மனைவி கொடுத்த ஆஷஸ் கோப்பையை காலம் முழுக்க பொக்கிஷமாக வைத்திருந்தார் ஐவோ பிளைக். அவர் மரணித்த பின்பு அந்த கோப்பை நிரந்தரமாக லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்போது வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்படும் கோப்பை ஃப்ளாரன்ஸ் கொடுத்த கோப்பையின் மாதிரி வடிவமே. காதல் கதையில் தொடங்கிய ஆஷஸ் தொடரின் 72வது தொடர் தான் வரும் நாளை ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது.