Published:Updated:

அச்சுறுத்திய விண்டீஸ் இளைஞர்கள்... அசத்திய இந்திய மிடில் ஆர்டர்..! #INDvWI

pant - rohit
News
pant - rohit

இந்த வருடம் முழுதும் சதங்களாக விளாசிக்கொண்டிருக்கும் ரோஹித் ஷர்மா, இந்தத் தொடரிலும் அதைச் செய்யத் தவறவில்லை . மூன்றாவது டி-20 போட்டியில் 34 பந்துகளில் 71 ரன்கள் அடித்து 'ஹிட்மேன் நான் மட்டும்தான்' என்பதை நிரூபித்தார் ரோஹித்.

உலகக் கோப்பைக்குப் பிறகு, ஒன் சைடு மேட்ச்களாகவே விளையாடிக்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணிக்குக் கடும் போட்டி அளித்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. தொடர் ஆரம்பிக்கும்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த அளவுக்கு போராடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தியா ஆதிக்கம் செலுத்தும் மற்றுமொரு தொடராக இருக்கப்போகிறது என்று எண்ணிக்கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு நிறைய ஷாக்கிங் மொமென்ட்களை அளித்துச் சென்று இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். இந்திய அணி சில போட்டிகளில் சறுக்கினாலும் சுதாரித்துக்கொண்டு முக்கியமான தருணங்களில் நன்றாக ஆடி 20 மற்றும் 50 ஓவர் தொடர்களைக் கைப்பற்றியிருக்கிறது. இந்தத் தொடர்களின் முக்கிய ஹைலைட்ஸ் இங்கே

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஹிட்மேயர் & பூரண்

முதல் ஒருநாள் போட்டியில், 'மரண பயத்தைக் காட்டிவிட்டார் பரமா' என்று சொல்லுமளவுக்கு இருந்தது ஹிட்மேயர் ஆட்டம். முதல் ஒருநாள் போட்டியில் 106 பந்துகளில் 139 ரன்கள் குவித்தார் இந்த இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர். இதில், 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடக்கம். இவர் அடிக்கும் சிக்ஸர்கள் பெரும்பாலும் 'செகண்ட் டையர்' என்று சொல்லப்படுகிற ரசிகர்கள் அமர்ந்திருக்கும் இரண்டாவது அடுக்கில் சென்று விழுந்தது. அதிலும் முதல் போட்டியில் ஜடேஜா பந்தில் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்துக்கு வெளியே சென்றது. 20 மற்றும் 50 ஓவர் தொடரில் 21 சிக்ஸ்ர்கள் அடித்து சிக்ஸர் மன்னனாக உருவெடுத்துள்ளார் ஹிட்மேயர்.

Pooran
Pooran

வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 2 ஆண்டுகளாக நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது . அதில் சில வீரர்கள் அட்டகாசமாக உருவெடுத்து வருகிறார்கள் அவர்களில் ஒருவர் நிகோலஸ் பூரண். இந்தத் தொடரில் இந்திய அணியை ஆட்டிப் பார்த்துவிட்டார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் 47 பந்துகளில் 75 ரன்களைக் குவித்தவர், மூன்றாவது போட்டியில் 64 பந்தில் 89 ரன்களைக் குவித்து இந்திய அணிக்குக் கடினமான இலக்கை செட் செய்தார். அவர் அடிக்கும் ஓவ்வொரு ஷாட்டும் அவ்வுளவு அற்புதமாக இருக்கிறது. ஆட்டத்தில் செட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல், விரைவாகவே வேகமெடுத்து ஆடி பவுண்டரி, சிக்ஸர்களை மழையாகப் பொழிந்துவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஷாய் ஹோப்

உலகக் கோப்பைத் தொடரில் ஷாய் ஹோப்பின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால், தொடர் முழுவதும் சொதப்ப வெஸ்ட் இண்டீஸ் அணி படும் தோல்வி அடைந்தது. அவுட் ஆஃப் பார்மில் இருந்த ஹோப் இந்தத் தொடரின் மூலம் பார்க்கு திரும்பியிருக்கிறார். இவர் ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடி, மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அடித்து ஆடும் வாய்ப்பை தொடர் முழுவதும் ஏற்படுத்தி கொடுத்தார் .

hope
hope

3 போட்டிகளிலும் அட்டகாசமாக ஆடி 1 சதம், 1 அரைசதம் உட்பட மொத்தம் 222 ரன்களைக் குவித்துள்ளார். அதிரடி ஆட்டக்காரர்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில், சேற்றில் முளைத்த செந்தாமரை போல நிலைத்து நின்று ஆடும் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். இவர் களத்தில் இருப்பது மற்ற இளம் வீரர்கள், தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியாக இருக்கிறது.

கே.எல்.ராகுல்

ஷிகர் தவானுக்கு அடிபட அவருக்கு மாற்றாக ரோஹித்துடன் களமிறக்கியவர் ஒரு கலக்கு கலக்கிவிட்டார். இவர் ஆடிய ஆட்டம், 20 ஓவர் போட்டிகளில் ஷிகர் தவானின் இடத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பல பூக்கள் இருக்கும் தோட்டத்தில் தனித்துத் தெரியும் ரோஜாபோல், மத்த பேட்ஸ்மேன்கள் ஆடுற ஷாட்ஸ்களுக்கு மத்தியில் இவரது ஷாட்கள் தனித்துத் தெரிகின்றன. கிரிக்கெட்டில் elegant பேட்ஸ்மேன் என்று கூறுவார்கள். அது ராகுலுக்கு நன்றாகவே பொருந்தும்.

kl rahul
kl rahul

20 ஓவர் தொடரில் இவர் அடித்த 2 அரைசதங்கள், இந்திய அணி தொடரைக் கைப்பற்ற உதவியது. மூன்றாவது டி-20 போட்டியில் 91 ரன்கள் அடித்து சதத்தை வெறும் 9 ரன்களில் தவறவிட்டார். அந்த கன்சிஸ்டென்ட்டான ஆட்டம், நிச்சயம் இனி அவருக்கு நிரந்தர இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

50 ஓவர் தொடரிலும் சதம், அரை சதம் என கலக்கி, அந்த ஃபார்மட்டிலும் ஓப்பனருக்கான போட்டியில் தவானோடு தொடர்கிறார் கே.எல். மூன்றாவது ஒருநாள் போட்டியில் பிளிக் ஷாட் மூலம் இவர் அடித்த சிக்ஸ், தொடர் முழுவதும் அடித்த கவர் டிரைவ் பவுண்டரிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்தன.

பன்ட் & ஷ்ரேயாஸ்

அடுத்த உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு மிடில் ஆர்டரைப் பலப்படுத்தும் வகையில், பன்ட் மற்றும் ஷ்ரேயாஸுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான போட்டிகளில் இந்தியாவின் முதல் 3 பேட்ஸ்மேன்களே நன்றாக ஆடிவிடுவதால் மிடில் ஆர்டர்க்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால், முக்கியமான போட்டிகளில் நம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை. அதைக் களையும் வகையில், முதல் ஒருநாள் போட்டியில் 80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட பன்ட் மற்றும் ஷ்ரேயாஸ் சேர்ந்து பொறுப்பாக ஆடி 110 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டனர். பன்ட் மற்றும் ஷ்ரேயாஸ், முறையே 70 மற்றும் 71 ரன்கள் எடுக்க, இந்திய அணி ஒரு நல்ல ஸ்கோரை எட்டியது.

shreyas iyer
shreyas iyer

முதல் போட்டியில் பொறுமை என்றால் இரண்டாவது போட்டியில் அதற்குத் தலைகீழ் திருப்பமாக அதிரடியைக் கையில் எடுத்தனர் இருவரும். 2 ஓவர்களில் மட்டும் 55 ரன்கள் அடித்து அணி 387 என்ற இமாலய இலக்கை எட்ட உதவினர். இவர்கள் இதே மாதிரியான ஆட்டத்தைத் தொடர்ந்தால், எதிர்காலத்தில் இந்திய அணிக்கு வலுவான மிடில் ஆர்டர் அமைந்துவிடும்.

ரோஹித் ஷர்மா

இந்த வருடம் முழுதும் சதங்களாக விளாசிக்கொண்டிருக்கும் ரோஹித் ஷர்மா, இந்தத் தொடரிலும் அதைச் செய்யத் தவறவில்லை. மூன்றாவது டி-20 போட்டியில் 34 பந்துகளில் 71 ரன்கள் அடித்து 'ஹிட்மேன் நான் மட்டும்தான்' என்பதை நிரூபித்தார் ரோஹித்.

rohit
rohit

50 ஓவர் போட்டிகளில் எப்போதெல்லாம் சதம் அடிக்கிறாரோ அப்போதெல்லாம் ரசிகர்கள் இன்னைக்கு இரட்டை சதத்தை அடித்துவிடுவாரா என்றுதான் எதிர்பார்க்கின்றனர். அந்த அளவுக்கு நம்பிக்கையை விதைத்துவிட்டார். 2வது போட்டியில் 138 பந்துகளில் 17 பவுண்டரிகள், 5 சிக்ஸ்ர்கள் என வாணவேடிக்கை காட்டி 159 ரன்களை எடுத்தவர், மேன் ஆஃப் தி சீரிஸ் அவார்டையும் தட்டிச் சென்றுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் இதுவரை 8 முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார் ஹிட்மேன். கடந்த 7 வருடங்களாக இந்தியா சார்பில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்தவர் என்ற சாதனையைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

விராட் கோலி

இந்த யுகத்துக்கான தன்னிகரற்ற வீரர் என்பதை விராட் கோலி மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். 2 வருடத்துக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் பௌலர் வில்லியம்ஸ் செய்த நோட் புக் செலிபிரேஷனை ஞாபகம் வைத்து, வில்லியம்ஸின் ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர் விளாசியவர் அவருக்கு உரிய ஸ்டைலில் நோட் புக் செலிபிரேஷனை திருப்பிக் கொடுத்தார் .

பொல்லார்ட் பந்தில் பிளிக் ஷாட்டில் சிக்ஸ் அடித்து பொல்லார்ட் ஸ்டைலிலே அவரை திரும்பி பார்ப்பது என, இந்த சீரிஸில் மீண்டும் தனது ஆக்ரோஷ செயல்பாடுகளை மைதானத்தில் காட்டினார் 'உன்ன இவ்ளோ அக்ரஸ்ஸிவா பார்த்து எவ்ளோ நாளாச்சு அருணாச்சலம்..!' என்று ரசிகர்களைக் கொண்டாட வைத்தார் என்றே சொல்லலாம் .

Virat Kohli
Virat Kohli

50 பந்துகளில் 6 பவுண்டரிகள் , 6 சிக்ஸர்கள் 94 ரன்கள் அடித்து களைகட்டியது கோலியின் முதல் டி-20 இன்னிங்ஸ். கோலியின் சிறந்த டி-20 இன்னிங்ஸ் என்று இதையும் சொல்லலாம். 3வது டி-20 போட்டியில் 29 பந்தில் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உட்பட 70 ரன்கள் அடித்து 'I am the only one super one' என்று மறைமுகமாகச் சொல்லிருப்பார். 50 ஓவர் போட்டிகளில் முதல் 2 போட்டிகளில் சறுக்க, சுதாரித்துக்கொண்டு 3வது போட்டியில் 85 ரன்கள் அடித்து சேசிங் கிங் என்பதை நிரூபித்தார்

குல்தீப் ஹாட்ரிக் விக்கெட்கள் எடுத்தது, ஜடேஜா - ஷர்துல் தாக்கூரின் கடைசி நேர டென்ஷன் சேசிங் எனப் பல நினைவுகளை கொடுத்திருக்கிறது இந்தத் தொடர். அடுத்து இலங்கையுடன் டி-20 போட்டிகளும் ஆஸ்திரேலியாவுடன் 50 ஓவர் போட்டிகளும் அடுத்தடுத்து ஆடக் காத்திருக்கிறது இந்தியா.