Published:Updated:

IPL 2022: தோனி, ரெய்னா, ஜடேஜா... சி.எஸ்.கே-வின் ஆல்-டைம் 11-ல் யாருக்கெல்லாம் இடம்?

IPL-CSK - Raina and Dhoni

சுமார் 14 வருடங்களாக தோனி என்னும் ஒற்றை கேப்டனுக்குக் கீழ் செயல்பட்டு வரும் இந்த மஞ்சள் படை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக தன்னை பரிணமித்து கொண்டிருக்கிறது. சி.எஸ்.கே அணிக்கு ஆல்-டைம் 11 என்று ஒன்று இருந்தால் அது எப்படி இருக்கும்?

Published:Updated:

IPL 2022: தோனி, ரெய்னா, ஜடேஜா... சி.எஸ்.கே-வின் ஆல்-டைம் 11-ல் யாருக்கெல்லாம் இடம்?

சுமார் 14 வருடங்களாக தோனி என்னும் ஒற்றை கேப்டனுக்குக் கீழ் செயல்பட்டு வரும் இந்த மஞ்சள் படை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக தன்னை பரிணமித்து கொண்டிருக்கிறது. சி.எஸ்.கே அணிக்கு ஆல்-டைம் 11 என்று ஒன்று இருந்தால் அது எப்படி இருக்கும்?

IPL-CSK - Raina and Dhoni

ஒவ்வொரு ஐ.பி.எல் தொடர் நெருங்கும்போதும் அத்தொடர் பற்றியான பேச்சுகள் ஒரு பக்கம் அதிகரிக்க தங்களது கடந்தகால பெருமைகளைப் பேசுவதும் ஒவ்வொரு அணி ரசிகர்களின் வழக்கம். ஐ.பி.எல் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை இத்தொடரின் மிக சிறந்த அணிகளுள் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸை சந்தேகமில்லாமல் கூறிவிடலாம்.

சுமார் 14 வருடங்களாக தோனி என்னும் ஒற்றை கேப்டனுக்குக் கீழ் செயல்பட்டு வரும் இந்த மஞ்சள் படை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக தன்னை பரிணமித்து கொண்டிருக்கிறது. சரி, சி.எஸ்.கே அணிக்கு ஆல்-டைம் 11 என்று ஒன்று இருந்தால் அது எப்படி இருக்கும் என்று யோசித்தோம்.
CSK
CSK

அணியின் முதல் வீரரைத் தேர்ந்தெடுக்க சிறு துளி யோசனையும் தேவை இல்லை. இத்தனை ஆண்டுகள் சென்னை அணியை தலைமையேற்று வழிநடத்தி இருக்கிறார் என்பது போய் தோனி என்றால் சி.எஸ்.கே, சி.எஸ்.கே என்றால் தோனி என்றாகிவிட்டது இந்த அணியுடனான அவரது பந்தம். அதுபோக ஐ.சி.சி-யின் ஆல்-டைம் 11-இல் இடம்பெற்று, ஐ.பி.எல்-யின் ஆல்-டைம் 11-யிலும் இடம்பெறக்கூடிய இந்த வீரர் சி.எஸ்.கே அணியில் எப்படி இடம் பெறாமல் போவார்.

தல வந்துவிட்டால் சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் பின்னாலேயே வந்துவிடுவார் அல்லவா! துரதிர்ஷ்டவசமாக இந்தாண்டு அணியில் அவர் இடம் பெறாமல் போய்விட்டாலும் சி.எஸ்.கே அணிக்காக அவராற்றிய பங்கிற்காக இந்த Mr.IPL-ஐ என்றென்றும் நினைவில் வைத்திருப்பான் சி.எஸ்.கே ரசிகன்.
Bravo and Jadeja
Bravo and Jadeja

இவர்களிருவரையும் அடுத்து இந்த ஆல்-டைம் அணியில் இரண்டு J-க்கள் உள்ளனர். ஒன்று RJ எனப்படக்கூடிய ரவீந்திர ஜடேஜா, இன்னொருவர் DJ என்கிற டுவைன் பிராவோ. இன்றைய தேதியில் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அரங்கில் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு மிகச்சிறந்த 3டி பிளேயர் என்று ரவீந்திர ஜடேஜாவை நிச்சயம் கூறிவிடலாம். மேலும் சுமார் பத்து வருட காலமாக சென்னை அணிக்காக இவர் ஆற்றிய பங்கு ஜடேஜாவை ஆல்-டைம் 11-க்குள் எளிதாக கொண்டுவந்து விடுகிறது. டுவைன் பிராவோவின் எண்களைச் சொல்லி குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை.

சி.எஸ்.கே-வின் ஆல்-டைம் 11-இல் இந்த நால்வரை தவிர்த்து வேறு யாரெல்லாம் உள்ளார்கள் என்பதை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.