Published:Updated:

`என் மகனுக்கு இன்னும் அவ்வளவு வயசாகல!’ - வைரல் வீடியோவும் தோனி அம்மாவின் பதிலும்

தோனி
தோனி

இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி தன் மகளுடன் விளையாடும் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது.

கொரோனா ஊரடங்கு காரணமாக எல்லோரும் வீட்டில் முடங்கியிருக்கின்றனர். இந்த லாக்டெளன் பல்வேறு வகையில் சிரமங்களை ஏற்படுத்தினாலும். குடும்பத்தினருடன் ஒன்றாக நேரத்தைச் செலவிடுவது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது மிகவும் குறைவு. அப்படியான நேரங்களிலும் அடுத்தடுத்த போட்டித் தொடர்கள், சினிமா படப்பிடிப்புகள் போன்ற சிந்தனைகள் அவர்களைச் சுற்றியிருக்கும். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த லாக்டெளன் காரணமாக எந்தச் சிந்தனையும் இல்லாமல் குடும்பத்தினருடன் இருக்கிறோம். இது தனிப்பட்ட முறையில் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக கங்குலி, மேரிகோம் உள்ளிட்ட விளையாட்டுப் பிரபலங்கள் கூறியிருந்தனர்.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

இந்த லாக்டெளன் காலத்திலும் மக்கள் தங்களுக்குப் பிடித்த பிரபலங்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளத்தில் அவர்களின் கணக்குகளை பின்தொடர்கின்றனர். சில விளையாட்டுப் பிரபலங்களும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் லைவ் சாட் செய்கின்றனர். சமீபத்தில் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி தன் மகளுடன் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இந்த வீடியோவை தோனியின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

’ஐ மிஸ் தோனி; அவர் மீண்டும் விளையாடினால்..?!’ - குல்தீப் யாதவ் சொல்லும் ஐடியா

தோனியைப் போலவே அவரின் மகள் ஷிவாவுக்குப் பெரிய ஃபேன் ஃபாலோயிங் பட்டாளமே இருக்கிறது. தோனி தன் செல்ல மகளுடன் விளையாடும் வீடியோவை ரசிகர்கள் கொண்டாட, தோனி ஹேட்டர்ஸ் இந்த வீடியோவில் இருக்கும் தோனியின் தோற்றத்தை கலாய்த்து மீம்ஸ்களை இறக்கினர். சால்ட் அன் பெப்பர் லுக்கில் தாடியுடன் இருக்கும் தோனியை சற்று கலாய்த்தனர்.

தோனி
தோனி

தோனியின் ஹேர்ஸ்டைலுக்கே பெரிய பேன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். தோனி இந்திய அணியில் அறிமுகமானபோது நீண்ட அளவில் முடியை வளர்ந்திருந்தார். 2010 உலகக்கோப்பை வெற்றிக்குப் பின்னர் அவரது ஹேர்ஸ்டைலில் மாற்றம் கொண்டுவந்தார். தாடியுடன் கூடிய லுக்கை கொஞ்சகாலம் தொடர்ந்தார். 2019 உலகக்கோப்பை தொடரின்போது க்ளீன் ஷேவ் லுக்கில் காணப்பட்டார். இந்த நிலையில்தான் தோனியின் சால்ட் அன் பெப்பர் லுக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள தோனியின் அம்மா தேவகி, ``தோனியின் புதிய தோற்றத்தைப் பார்த்தேன். அவருக்கு ஒன்றும் அவ்வளவு வயதாகவில்லை. எந்தவொரு தாய்க்கும் அவரின் குழந்தை வயதானவர்போல் தெரியமாட்டார். தோனி டி-20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா இல்லையா என்பது எல்லாம் எனக்குத் தெரியாது. முதலில் இந்தக் கொரோனா வைரஸ் தாக்கம் முடியட்டும். அவருக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு