Published:Updated:

கேட்சைத் தவறவிட்ட கம்ரான் குலாம், கன்னத்தில் அறைந்த ஹரிஸ் ரவூப்... பின்னனி என்ன? | Video

வைரலாகும் புகைப்படம்

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் லாகூர் குலாண்டர்ஸ் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் தனது சகவீரரான கம்ரான் குலாமை கன்னத்தில் அறைந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேட்சைத் தவறவிட்ட கம்ரான் குலாம், கன்னத்தில் அறைந்த ஹரிஸ் ரவூப்... பின்னனி என்ன? | Video

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் லாகூர் குலாண்டர்ஸ் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் தனது சகவீரரான கம்ரான் குலாமை கன்னத்தில் அறைந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published:Updated:
வைரலாகும் புகைப்படம்

தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டியில், நேற்று (திங்கள்கிழமை பிப்ரவரி 21) பெஷாவர் சல்மி மற்றும் லாகூர் குலாண்டர்ஸ் அணிகளுக்கு இடையான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் லாகூர் குலாண்டர்ஸ் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் பந்து வீச்சின் போது கிடைத்த எளிதான கேட்ச்சை கம்ரான் குலாம் தவறவிட்டார். பின்னர் அதே ஓவரில் ஹரிஸ் ரவூப் பந்து வீச்சில் கிடைத்த மற்றோரு கேட்சை ஃபவாத் அகமது சரியாகப் பிடித்து முகமது ஹரிஸின் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதையடுத்து, எதிர் அணியின் வீரரான முகமது ஹரிஸின் விக்கெட்டை வீழ்த்திய கொண்டாட்டத்தில் லாகூர் குலாண்டர்ஸ் அணியின் வீரர்கள் ஹரிஸ் ரவூப்பைக் கட்டி அணைத்து பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அப்போது ஹரிஸ் ரவூப்பை கட்டி அணைத்து பாராட்ட வந்த கம்ரான் குலாமை சட்டென்று அறைந்தார் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப். பின்னர் இறுதியாக இது குறித்து எந்தக் கோபமும் இன்றி சிரித்த குலாமை கட்டி அணைத்தார்.

என்னதான் இருந்தாலும் ஹரிஸ் ரவூப், சகவீரரான கம்ரான் குலாமை கன்னத்தில் அறைந்தது தவறான செயல் என்று சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. மற்றொறு தரப்பினர் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எனவே இதை பெரிய பிரச்னையாக கருத வேண்டாம் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இது தொடர்பான ட்வீட்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism