Published:Updated:

`இந்திய அணியைத் தோற்கடிக்கத் திட்டம் ரெடி' - சவாலுக்குத் தயாராக நிற்கும் பாகிஸ்தான் பௌலர் ஹரீஸ்

Haris Rauf ( PCB )

இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை அக்டோபர் 23 ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹரீஸ் ராஃப் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி குறித்த தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

`இந்திய அணியைத் தோற்கடிக்கத் திட்டம் ரெடி' - சவாலுக்குத் தயாராக நிற்கும் பாகிஸ்தான் பௌலர் ஹரீஸ்

இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை அக்டோபர் 23 ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹரீஸ் ராஃப் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி குறித்த தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

Published:Updated:
Haris Rauf ( PCB )
'என்னுடைய முழுத்திறனையும் வெளிப்படுத்தினால், இந்திய பேட்டர்களால் என்னுடைய பந்துவீச்சை அவ்வளவு சுலபமாக எதிர்கொள்ள முடியாது' என பேசியிருக்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரீஸ் ராஃப்.

2022 டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை அக்டோபர் 23 ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியென்றால் எப்போதுமே பரபரப்பும் சுவாரஸ்யமும் தொற்றிக்கொள்ளும். வரவிருக்கும் மோதலும் அதற்கு விதிவிலக்கல்ல. அக்டோபர் 23 ஐ எதிர்பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் பேரார்வத்தோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹரீஸ் ராஃப் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி குறித்த தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

Team Pakistan
Team Pakistan
PCB

'இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டிகள் எப்போதுமே பெரும் அழுத்தம் மிக்கவைதான். கடந்த உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக மோதும்போது அழுத்தத்திற்குள்ளானேன். ஆனால், ஆசியக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிரானப் போட்டிகளில் எந்த அழுத்தத்தையும் உணரவில்லை. என்னுடைய முழுத்திறனையும் வெளிக்காட்ட வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. என்னுடைய முழுத்திறனையும் வெளிப்படுத்தினேன் எனில் இந்திய பேட்டர்களால் அத்தனை சுலபமாக என்னை எதிர்கொள்ள முடியாது. வரவிருக்கும் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டி நடைபெற இருக்கும் மெல்பர்ன் மைதானம் என்னுடைய சொந்த மைதானம் போன்றது. மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஆடியிருக்கிறேன். அங்குள்ள களச்சூழல் என்னவென்பது எனக்கு தெரியும். இந்தியாவிற்கு எதிராக எப்படி பந்து வீச வேண்டும் என்பதற்கான திட்டங்களை ஏற்கெனவே தயாரிக்கத் தொடங்கிவிட்டேன்.' என ஹாரிஸ் ராஃப் கூறியிருக்கிறார்.

கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றிருந்தது. சமீபத்தில், நடந்த ஆசியக்கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோற்றிருந்தது. சமீபகாலமாக பாகிஸ்தானுக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் சறுக்கல்களிலிருந்து மீளும் வகையில் அக்டோபர் 23 போட்டியை வெல்ல வேண்டும் என்பது இந்திய அணியின் எண்ணம். பாகிஸ்தான் பௌலர்களின் சவாலைத் தாண்டி இந்திய அணியின் எண்ணம் ஈடேறுமா?