Published:Updated:

GTvDC: “இந்தத் தோல்விக்கு நானேதான் காரணம்”- தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

“நான் முகமது ஷமிக்காக வருந்தி அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்”- ஹர்திக் பாண்டியா

Published:Updated:

GTvDC: “இந்தத் தோல்விக்கு நானேதான் காரணம்”- தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா

“நான் முகமது ஷமிக்காக வருந்தி அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்”- ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா
நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும்- குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இந்தப் போட்டியில் டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குஜராத் அணிக்கு எதிரான தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்திருந்தது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு, ``இந்தப் போட்டியின் தோல்விக்கு நான்தான் காரணம்" என்று  குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.  

GTvDC
GTvDC

இதுகுறித்து பேசிய அவர், “அவர்களின் மிகச்சிறந்த பந்துவீச்சால் எங்களால் இலக்கை எட்ட முடியவில்லை. என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். ஆனால் பயனடைய முடியாமல் போயிற்று. இந்தத் தோல்விக்கு நான்தான் காரணம். நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்னுடைய தோல்வியாகவே இதனை பார்க்கிறேன். ஒரு அணியின் கேப்டனாக நான் இந்த ஆட்டத்தை வெற்றியோடு முடித்திருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். 

மேலும் பேசிய ஹர்திக், “ நான் முகமது ஷமிக்காக வருந்தி அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். முகமது ஷமியின் சிறந்த பந்து வீச்சால்தான் டெல்லி அணியை  எளிதான இலக்கிற்குள் கட்டுப்படுத்தினோம். அவர் வீசிய பந்துவீச்சுக்கு நாங்கள் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும். இந்த போட்டியில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டு அடுத்தப் போட்டியில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்”  என்றும்  தெரிவித்திருக்கிறார்.