இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாரடைப்பின் காரணமாக மறைந்தார். இந்நிலையில், தற்போது தனது தந்தையின் உணர்ச்சிகரமான தருணங்களை நினைவுகூரும் வகையில் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹர்திக்.
அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா தனது தந்தையின் அறைக்குள் நுழைந்து, அவரை ஆச்சரியப்படுத்தும்படி அவரின் முன் சென்று அவரை அன்புடன் கட்டி அணைத்துத் தழுவுகிறார். நெகிழ்ச்சி மிகுந்த இந்த வீடியோவைப் பகிர்ந்த ஹர்திக் பாண்டியா "இது போன்றதொரு ஆச்சர்யத்தை நீங்களுக்கு எனக்குத் தருவீர்கள் என ஏங்குகிறேன்" எனக் குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவின் இந்தப் பதிவு காண்போரின் இதயங்களை நெகிழச் செய்து வருகிறது. இந்தப் பதிவைப் பார்த்த ஒரு நபர் 'ஒவ்வொரு அப்பாவும் அந்த அன்பான அணைப்புக்குத் தகுதியானவர்’ என்றும் மற்றொருவர் ‘உலகின் நேர்மையான அன்பு இது’ என்றும் கமென்ட் செய்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது இந்தப் பதிவு. தந்தைக்கு நிகர் எப்போதும் தந்தைதான்.