நேற்றைய லக்னோ மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் போட்டிக்குப் பிறகு விராட் கோலி, கவுதம் கம்பீர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சர்ச்சையைக் கிளப்பி பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இதுகுறித்து முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்பளே உள்ளிட்ட சில கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் 2008 ஆம் ஆண்டு நடந்த ஒரு விஷயத்தை மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “ விராட் கோலி நீங்கள் ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். விராட் மற்றும் கம்பீருக்கு இடையே என்ன நடந்ததோ அது கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல. 2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது ஸ்ரீ சாந்தை கன்னத்தில் அறைந்ததை நினைத்து இன்றளவும் வருத்தப்படுகிறேன். நான் செய்த தவறை நீங்களும் செய்து விடவேண்டாம்.
முன் உதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே இளம் வீரர்களுக்கு தவறான எடுத்துக்காட்டாக இருந்து விடாதீர்கள். நீங்கள் இருவரும் தங்களது கருத்து வேறுபாடுகளை விரைவில் தீர்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.