Published:Updated:

`அஃப்ரிடியுடன் இனிமேல் எந்தத் தொடர்பும் கிடையாது!’- கொதிக்கும் ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்
News
ஹர்பஜன் சிங்

இந்தியா குறித்தும் நமது பிரதமர் குறித்தும் அவதூறு கருத்துகளைத் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடியுடன் இனிமேல் எந்தத் தொடர்பும் கிடையாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்துவதுண்டு. அவருக்கு இந்தியாவில் இருந்து கவுதம் காம்பீர் உள்ளிட்ட வீரர்கள் கண்டனம் தெரிவிக்கும் சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன. சமீபத்தில் அஃப்ரிடியின் தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி அளிக்குமாறு யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் கூறியிருந்தது சர்ச்சையானது.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

இந்தநிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்து அஃப்ரிடி கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்தநிலையில், ஷாகித் அஃப்ரிடியின் கருத்துக்கு ஹர்பஜன் சிங் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி அவர் அளித்துள்ள பேட்டியில், ``உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், தனது தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்ட உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மனிதாபிமான அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அதற்காக நாங்கள் குரல்கொடுத்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாடுகளின் எல்லைகளைக் கடந்து, மதம், மொழி, சாதிகளைக் கடந்து நாம் கொரோனாவுக்கு எதிராகப் போரிட வேண்டும் என்று நமது பிரதமர் கூட கூறியிருந்தார். மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கிலேயே நாங்கள் நினைத்து உதவி செய்தோம். நான் இப்போது சொல்ல விரும்புவதெல்லாம், இனிமேல் அஃப்ரிடியுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அவர் (அஃப்ரிடி) நமது நாட்டைப் பற்றியும் நமது பிரதமரைப் பற்றியும் அவதூறு கிளப்பும் வகையில் பேசிக்கொண்டிருக்கிறார்.

அஃப்ரிடி
அஃப்ரிடி

அவர் அவரது நாட்டிலேயே இருந்துகொள்ள வேண்டும். எல்லைமீறி பேசக் கூடாது. நமது நாட்டைப் பற்றிப் பேச எந்த உரிமையும் இல்லை. நான் இந்த நாட்டில் பிறந்தவன். 20 ஆண்டுகள் இந்த நாட்டுக்காக விளையாடி பல்வேறு வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறேன். இந்த நாட்டுக்காக நான் என்ன செய்தேன் என எவரும் கேள்வி எழுப்ப முடியாது. இன்றோ அல்லது நாளையே இந்த நாட்டுக்கு சேவை செய்யும் சூழல் ஏற்பட்டால், ஏன் எல்லையில் கூட சென்று சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல், அஃப்ரிடிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் எம்.பியுமான கவுதம் காம்பீரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காம்பீர், ``20 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தில் 7 கோடி பேர் ராணுவத்தில் இருப்பதாகச் சொல்கிறார் 16 வயதான ஷாகித் அஃப்ரிடி. இருந்தும் 70 ஆண்டுகளாக காஷ்மீருக்காக கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

அஃப்ரிடி, இம்ரான் கான் மற்றும் பஜ்வா போன்ற காமெடியன்கள் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்குவதற்காக இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக விஷத்தை உமிழ்வார்கள். ஆனால், பாகிஸ்தானுக்கு காஷ்மீர் கிடைக்கப்போவதில்லை’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.