Published:Updated:

விடைபெறும் பஞ்சாப் திருவள்ளுவர்... ஓய்வை அறிவித்த `டர்பனேட்டர்' ஹர்பஜன்!

Harbhajan singh
News
Harbhajan singh

இந்தியாவின் முதல் டெஸ்ட் ஹாட்ரிக்கினை வீழ்த்தியது, ஷோயப் அக்தரின் பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தது என ஹர்பஜன் நிகழ்த்திய மறக்கமுடியாத மேஜிக்குகள் ஏராளம்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களுள் ஒருவரான ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த அவர் தன் ஓய்வு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Harbhajan singh
Harbhajan singh

அதில், "அனைத்து நல்ல விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வரும். அதன்படி என் வாழ்விற்கு அனைத்தையும் அளித்த கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கிறேன். இந்த 23 ஆண்டு கால பயணத்தை இனிமை ஆகிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி" என்று உணர்ச்சிப்பூர்வமான குறிப்பிட்டுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் பிறந்தவர் ஹர்பஜன். 1998-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தன் 18-வது வயதில் அறிமுகமானவர் ஹர்பஜன். அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் அரங்கிலும் அறிமுகமானார். டெஸ்ட் ஃபார்மர்ட்டை பொறுத்தவரை சுமார் 103 போட்டிகளில் 417 விக்கெட்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 236 போட்டிகளில் மொத்தம் 269 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட்டில் இரண்டு சதங்களையும் விளாசியுள்ளார் ஹர்பஜன்.

Harbhajan singh
Harbhajan singh

இந்தியாவின் முதல் டெஸ்ட் ஹாட்ரிக்கினை வீழ்த்தியது, ஷோயப் அக்தரின் பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தது என ஹர்பஜன் நிகழ்த்திய மறக்கமுடியாத மேஜிக்குகள் ஏராளம். இதுமட்டுமல்லாமல் சர்ச்சைகளுக்கும் பேர் போனவர் அவர். ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் உடனான 'Monkeygate' சர்ச்சை, ஐ.பி.எல் போட்டியில் தன் சக வீரரான ஸ்ரீசாந்தைக் களத்திலேயே அறைந்தது முதலியவை அப்போது உலக கிரிக்கெட் அரங்கில் மிக பரபரப்பாகின.

2018-ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றதால் தமிழக ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமானார். ஒவ்வொரு ஆட்டத்திற்கு பின்பும் தமிழில் ட்வீட் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவரை ‘திருபஜன் சிங்’ என்று 'எல்லோ ஆர்மி' செல்லமாக அழைப்பதுண்டு.

குட் பை கிரிக்கெட்டர் ஹர்பஜன்!