Published:Updated:

`அவர் எப்போது வந்து பேசுவார் தெரியுமா..?’ -தோனி கேப்டன்ஷிப் குறித்து சுவாரஸ்யம் பகிரும் ஹர்பஜன்

கேப்டன் தோனி, ஹர்பஜன்

நான் தோனியிடம், `நீங்கள் ஏன் இப்போது ஷ்ரதுல் தாக்கூரிடம் சென்று பேசக்கூடாது? அவரிடம் பந்துவீசும் ஆங்கிளை மாற்றச் சொல்லலாமே... குறைந்தபட்சம் அவரிடம் பேசி, ஃபீல்டரையாவது மாற்றலாமே’ என்று கேட்டேன்.

Published:Updated:

`அவர் எப்போது வந்து பேசுவார் தெரியுமா..?’ -தோனி கேப்டன்ஷிப் குறித்து சுவாரஸ்யம் பகிரும் ஹர்பஜன்

நான் தோனியிடம், `நீங்கள் ஏன் இப்போது ஷ்ரதுல் தாக்கூரிடம் சென்று பேசக்கூடாது? அவரிடம் பந்துவீசும் ஆங்கிளை மாற்றச் சொல்லலாமே... குறைந்தபட்சம் அவரிடம் பேசி, ஃபீல்டரையாவது மாற்றலாமே’ என்று கேட்டேன்.

கேப்டன் தோனி, ஹர்பஜன்

தோனியின் கேப்டன்ஷிப் குறித்து அனைவரும் அறிந்ததே. பல கட்டங்களில் இந்திய அணியின் வெற்றிக்கும் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கும் அவரது கேப்டன்ஷிப் காரணமாக அமைந்திருக்கிறது. இந்தநிலையில் இந்திய, சி.எஸ்.கே அணிகளின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன், தோனியின் கேப்டன்ஷிப் குறித்து பேசியுள்ளார்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

ESPNCricinfo ஊடகத்திடம் பேசிய ஹர்பஜன், தோனியின் தலைமையில் ஆடியது குறித்து பேசியுள்ளார். ``இப்படி செய், அப்படி செய் என்று சொல்லும் கேப்டன் தோனி கிடையாது. ஒரு வீரரால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய இடம் கொடுப்பவர். உங்களால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்யுங்கள் என்றுதான் சொல்வார்.

பல நேரங்களில் அவர் என்னிடம் வந்து பேசுவார். ஸ்டெம்புக்குப் பின்னால் நிற்கும்போதும், ஓவர்களுக்கு இடையிலும் என்னுடன் பேசுவார். அப்போது எல்லாம் பேட்ஸ்மேன் என்ன செய்கிறார், நாம் என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை கூறுவார். ஆனால் ஒருபோதும் நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லமாட்டார்” என்றார்.

தோனி - ஹர்பஜன்
தோனி - ஹர்பஜன்

மேலும் அவர் இது தொடர்பாக ஐ.பி.எல் போட்டியில் நடந்த விஷயத்தையும் நினைவுகூர்ந்தார். ``ஒருமுறை ஷ்ரதுல் தாக்கூர் ஓவரில் எதிரணி வீரர் அதிரடியாக ஆடினார். முதல் பந்தில் பவுண்டரி, அடுத்த பந்தில் சிக்ஸ் எனத் தெறிக்கவிட்டார். அப்போது நான் தோனியிடம், `நீங்கள் ஏன் இப்போது ஷ்ரதுல் தாக்கூரிடம் சென்று பேசக்கூடாது? அவரிடம் பந்துவீசும் ஆங்கிளை மாற்றச் சொல்லலாமே... குறைந்தபட்சம் அவரிடம் பேசி, ஃபீல்டரையாவது மாற்றலாமே’ என்று கேட்டேன்.

அதற்கு தோனி, `இப்போது நான் அவரிடம் சென்று எதாவது சொன்னால், அவர் இன்னும் குழப்பமடைந்துவிடுவார். அவர் அடிக்கட்டும்’ என்றார் கூலாக. நாங்கள் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டதால், அவர் அடிக்கட்டும் என்று விட்டுவிட்டார். ஆனால் எல்லாநேரத்திலும் அப்படி விடமாட்டார். சக வீரர்கள் வேறுவழியே தெரியாமல் இருக்கும்போது, அவர்களிடம் சென்று பேசுவார். அன்று தோனி என்னிடம் இப்படி சொன்னார், `தாக்கூருக்கு வேறு வழியே இல்லாமல் இருந்தால், அப்போது அவரிடம் சென்று பேசுவேன். இப்படிச் செய்யலாம் என எனது பரிந்துரையைச் சொல்வேன்’

அதுதான் தோனி, வீரர்களுக்கு ஐடியாவே இல்லாத போதுதான் இறங்குவார். மற்ற நேரங்களில் அவர்களின் திறன் மூலம் செயல்பட வைப்பார்” என்றார் ஹர்பஜன்.