Published:Updated:

`பொறாமையா...இல்லவே இல்ல; ஆஸ்திரேலியாவின் குணம்!’ -அஷ்வினுடன் மனம்திறந்த ஹர்பஜன் சிங்

அஷ்வின் - ஹர்பஜன்
அஷ்வின் - ஹர்பஜன்

``பலரும் நான் ஏதோ பொறாமையில் செயல்படுகிறேன் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள்ளட்டும். நான் உங்களிடம், (அஷ்வின்) சொல்ல விரும்புவது இதுதான்...” - ஹர்பஜன்

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியதும் லாக்டெளன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் களத்தில் விளையாடிய வீரர்கள் பலரும் வீட்டிலே லாக் ஆனார்கள். பலரும் இந்த நேரத்தில் தங்களை சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் ஆக்ட்டிவாக வைத்திருந்தனர். இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் முக்கியமானவர்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

இன்ஸ்டாகிராமில் ‘ReminiscewithAsh’என லைவ்வின் பல்வேறு நபர்களிடம் பேசி வருகிறார் அஷ்வின். அண்மையில் திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடமும் கிரிக்கெட், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எனப் பல விஷயங்கள் குறித்து பேசினார். தற்போது அவர் ஹர்பஜன் சிங் உடன் நடத்திய லவ் உரையாடல் செம ஹிட் அடித்திருக்கிறது.

`2011 உலகக்கோப்பை.. யுபிஎஸ்சி நேர்காணல்.. கொரோனா!’ -அஷ்வின், திருப்பூர் ஆட்சியரின் `லைவ்’ உரையாடல்

அஷ்வின் இந்திய கிரிக்கெட் அணிக்குள் வந்த பின்னர்தான் ஹர்பஜன் சிங் ஓரங்கட்டப்பட்டார் என்ற பேச்சு பொதுவாகவே இருக்கும். இந்த நிலையில்தான் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின்போது ஹர்பஜன் இதுதொடர்பாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.

`பொறாமையா...இல்லவே இல்ல; ஆஸ்திரேலியாவின் குணம்!’ -அஷ்வினுடன் மனம்திறந்த ஹர்பஜன் சிங்

அவர், ``பலரும் நான் ஏதோ பொறாமையில் செயல்படுகிறேன் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளட்டும். நான் உங்களிடம், (அஷ்வின்) சொல்ல விரும்புவது இதுதான். தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் சிறந்த ஆஃப்- ஸ்பின்னர் நீங்கள்தான். ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் சிறப்பாகச் செயல்படுகிறார். வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் அவரது ஆட்டம் சிறப்பானதுதான்” என்றார்.

பின்னர் உரையாடல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் எடுத்த ஹாட்ரிக் விக்கெட் பக்கம் சென்றது. அதில் கில்கிறிஸ்ட் விக்கெட், தவறான முடிவால் வழங்கப்பட்டது எனக் குற்றச்சாட்டு வைக்கப்படுவது உண்டு. இது தொடர்பாக ஹர்பஜன் பேசுகையில், ``ஆஸ்திரேலியா எப்போதும் சிறந்த வீரர்களை உருவாக்கும். ஆனால் அவர்களால் தோல்வியை ஏற்க முடியாது. அவர்கள் பந்துவீசும் போது அனைத்துமே விக்கெட் என்பார்கள்... அதுவே அவர்கள் பேட் செய்தால் நாட் அவுட் என்பார்கள்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

பெரும்பாலும் அம்பயர் முடிவுகளில் அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆட்டம் இப்படித்தான் இருக்கிறது. 2008 -ம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பல மோசமான முடிவுகள் வந்தன. அது குறித்தும் பல காலம் மக்கள் பேசினார்கள்.

இப்போதும் ட்விட்டரில் சிலர், கில்கிறிஸ்ட் நாட் அவுட் எனப் பதிவிடுகிறார்கள். சரி.. அது நாட் அவுட் என்றே வைத்துக்கொள்வோம். அதனால் என்ன? நான் அவரை பலமுறை ஆட்டமிழக்க வைத்திருக்கிறேன். அந்தப் பந்தில் நாட் அவுட் என்றால் அடுத்த பந்தில் ஆட்டமிழக்க வைத்திருப்பேன்” என்றார்.

கொரோனா தொடர்பாகப் பேசிய ஹர்பஜன், `கொரோனா மனிதர்களுக்குச் சில பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. வீட்டிலே இருக்காமல் பணத்தின் பின்னால் ஓடினோம். பெரும் ஆசைகளுடன் வாழ்ந்தோம். கொரோனா மூலம் பணம் முக்கியமில்லை என்பதை உணர்ந்திருக்கிறோம்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

நான் இதுவரை சம்பாதித்ததை எனது வாழ்நாளில் செலவு செய்திட முடியாது. நாம் பிறர் மீது அன்புடனும் அரவணைப்புடன் இருக்க வேண்டும். கொரோனா காலம் முடிந்த பின்னர் பஞ்சாப் சென்று காய்கறிகள், கோதுமை பயிரிட்டு விவசாயம் பார்க்க இருக்கிறேன். அதை ஏழைகளுக்கு வழங்குவேன். பணத்தைத் தேடி அலைந்தது போதும் என்றே கருதுகிறேன். உதவி செய்வதில்தான் திருப்தி கிடைக்கும் என உணர்ந்து கொண்டேன்” என்றார் உருக்கமாக.

அடுத்த கட்டுரைக்கு