Published:Updated:

ஜெயித்தாலும் தோற்றாலும் பிடித்த வேலையை கடைசி வரை செய்துகொண்டே இருந்தவர்! #HBDWasimJaffer

Wasim Jaffer

போதுமான புகழ் போதுமான பணம் எதுவும் கிடைக்காவிடிலும் தன்னால் இயன்ற வரை கிரிக்கெட் ஆடி ஓய்ந்தவர்.

ஜெயித்தாலும் தோற்றாலும் பிடித்த வேலையை கடைசி வரை செய்துகொண்டே இருந்தவர்! #HBDWasimJaffer

போதுமான புகழ் போதுமான பணம் எதுவும் கிடைக்காவிடிலும் தன்னால் இயன்ற வரை கிரிக்கெட் ஆடி ஓய்ந்தவர்.

Published:Updated:
Wasim Jaffer

'நாம ஜெயிக்கிறோம், சம்பாதிக்குறோம், தோக்குறோம், ஒண்ணுமே இல்லாம போறோம். இதையெல்லாம் தாண்டி நாம இஷ்டப்பட்ட வேலைய செய்றோங்றது எவ்ளோ பெரிய பாக்கியம்' கோலிவுட்டின் ஆகச்சிறந்த இயக்குனரான பாலு மகேந்திராவின் இந்த வரிகளுக்கு பொருந்திப்போகும் ஒரு கிரிக்கெட் முகத்தைத் தேடினால் நம் முன் வாசிம் ஜாஃபரின் பெயர் வந்து நிற்பதற்கு வாய்ப்பு அதிகம்.

Wasim Jaffer
Wasim Jaffer

ஜாஃபரும் அப்படித்தான். போதுமான புகழ் போதுமான பணம் எதுவும் கிடைக்காவிடிலும் தன்னால் இயன்ற வரை கிரிக்கெட் ஆடி ஓய்ந்தவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்திய கிரிக்கெட்டின் உயிர்நாடி என ரஞ்சி தொடரை சொல்வார்கள். அந்த ரஞ்சி தொடருக்கான முக்கியத்துவத்தை ஜாஃபரைவிட வேறு யாரும் அடுத்த தலைமுறைக்கு கடத்தியிருப்பதாகத் தெரியவில்லை. 1996 சீசனில் தொடங்கிய அவரின் ரஞ்சி பயணம் கிட்டத்தட்ட 2020 வரை நீண்டிருக்கிறது. இடையில் இந்திய அணிக்காக ஆடியிருக்கிறார். இந்திய அணியிலிருந்து ட்ராப் செய்யப்பட்டிருக்கிறார். சொந்த அணியான மும்பை அணி ஓரங்கட்ட தொடங்கியது. 35 வயதுக்கு மேல் புதிய அணியைத் தேடி செல்ல வேண்டியிருந்தது.

ஆனால், எந்த இடத்திலுமே ஜாஃபர் உள்ளூர் தொடர்களில் ஆடுவதை நிறுத்தவே இல்லை. ஒவ்வொரு ரஞ்சி போட்டியில் ஜாஃபர் கால்பதிக்கும் போதும் அவரின் ஆட்டம், ஐ.பி.எல் ஐ தாண்டி இந்திய கிரிக்கெட்டின் உயிர்நாடியான உள்ளூர் தொடர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இளம் வீரர்களுக்கு உரக்க எடுத்துக்கூறியது.