Published:Updated:

`ஓப்பனிங்; கெஞ்சல்; 5 இன்னிங்ஸ்!'-சச்சின் பகிர்ந்த நாஸ்டால்ஜியா

விக்கெட்டை பறிகொடுக்கக்கூடாது என்பதில்தான் அப்போது இருந்த அனைத்து அணிகளும் குறிக்கோளாக இருந்தன. நான், சற்று மாற்றி யோசித்தேன்.

Sachin
Sachin

`காட் ஆஃப் கிரிக்கெட்’ என்ற பெருமை சச்சினுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. பல்வேறு தடைகளைக் கடந்துதான் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 24 ஆண்டுக்கால கிரிக்கெட் பயணத்தில் 100 சதங்களை எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையைட் தன் கைவசம் வைத்துள்ளார். இந்திய அணி பேட்டிங் என்றாலே, சச்சின் ஒருமுனையில் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் இந்தியா தாண்டி உலக கிரிக்கெட் ரசிகர்களிடம் இருக்கும். ஆனால், முதன்முதலாக தொடக்க வீரராகக் களமிறங்குவதற்கான வாய்ப்பு எளிதாகக் கிடைக்கவில்லை என்கிறார், சச்சின்.

Sachin in early's days
Sachin in early's days

ஆரம்பக் காலகட்டத்தில், 4 மற்றும் 5-வது வீரராகத்தான் சச்சின் களமிறக்கப்பட்டார். பின்னர், தொடக்க வீரராகக் களமிறங்கி, அந்த பொசிஷனுக்கு புதிய அர்த்தம் கொடுத்தார் எனலாம். முதன்முறையாக தொடக்க வீரராகக் களமிறங்கிய அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார், சச்சின் டெண்டுல்கர்.

கடந்த 1994-ம் ஆண்டு, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில்தான் தொடக்க வீரராக முதல்முறையாகக் களம் கண்டார். அவரின் வாழ்க்கையை மாற்றிய போட்டியும் அதுதான். ''எனக்கு ஒருவாய்ப்பு கொடுங்கள் எனக் கெஞ்சினேன்'' என்று தன்னுடைய தொடக்க காலகட்டத்தை நினைவுகூர்கிறார் சச்சின். சமூக வலைதளமான லிங்க்டு இன்-னில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னுடைய ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ளார். ``நான் தொடக்க வீரராகக் களமிறங்கி, எதிரணியின் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

ஆரம்பத்தில், `ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறங்கக் கெஞ்சிய சச்சின், தான் ஒய்வுபெறும்போது, தொடக்க ஆட்டக்காரராக ஒய்வுபெற்றார்.

ஆனால், எனக்கு ஒருவாய்ப்பு கொடுங்கள் என்று கெஞ்ச வேண்டியிருந்தது. `அந்த முயற்சியில் ஜொலிக்க முடியாவிட்டால், மீண்டும் வாய்ப்பு கேட்க மாட்டேன்' என்று கூறியிருந்தேன். 1994-ம் ஆண்டு, நியூசிலாந்துக்கு எதிரான போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. அதில்தான், முதன்முதலில் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்டேன். `விக்கெட்டை இழந்துவிடக் கூடாது என்பதுதான் அன்றைய சூழலில் எல்லா அணிகளின் முக்கிய குறிக்கோள்.

Sachin
Sachin

நான் களத்தில் இறங்கி வேறு மாதிரி யோசித்தேன். தொடக்க ஆட்டம் முதலே பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து ஆடவேண்டும் என முடிவுசெய்தேன். எனக்கு வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியில், தொடக்க வீரராக 49 பந்துகளில் 82 ரன்களை எடுத்தேன். இதனால் அடுத்த முறை வாய்ப்பு கேட்கவேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை.

ஆனால், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கெஞ்ச வேண்டியிருந்தது. அதில் தோற்றால், மீண்டும் வாய்ப்பு கேட்க மாட்டேன் என்று கூறியிருந்தேன்.
சச்சின்

அவர்களே என்னைத் தொடக்க வீரராகக் களமிறக்கினர். இதன்மூலம் நான் சொல்ல நினைப்பது, `தோல்வியைக்கண்டு அஞ்சிவிடக்கூடாது’ என்பதுதான். மிடில் ஆர்டரில் இருந்து தொடக்க வீரராகச் சென்ற பிறகு, சச்சின் டெண்டுல்கர் முதல் சதத்தைக் கடப்பதற்கு 5 இன்னிங்ஸ் அவர் காத்திருக்கவேண்டி இருந்தது.

Sachin
Sachin

தொடக்க வீரராக இறங்கி முதல் 5 போட்டிகளில், 82, 63, 40, 63, 73 என்று அடித்து ஆடினார். பிறகு, கொழும்பில் சிங்கர் ட்ராபியில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் சதத்தை எடுத்தார். சச்சின் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்கள் உட்பட 18,426 ரன்களைக் குவித்துள்ளார். ஆரம்பத்தில், ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறங்கக் கெஞ்சிய சச்சின், தான் ஓய்வுபெறும்போது, தொடக்க ஆட்டக்காரராக ஓய்வுபெற்றது குறிப்பிடத்தக்கது.