Published:Updated:

GT v MI: வெளுத்து வாங்கிய மழை; நடுவர்கள் சோதனை; GT v MI போட்டியின் நிலவரம் என்ன?|Spot Report

GT v MI

திடீரென மைதானத்தில் மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Published:Updated:

GT v MI: வெளுத்து வாங்கிய மழை; நடுவர்கள் சோதனை; GT v MI போட்டியின் நிலவரம் என்ன?|Spot Report

திடீரென மைதானத்தில் மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

GT v MI
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் இரண்டாம் தகுதிச்சுற்று போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற தயாராக இருக்கும் நிலையில் அங்கே திடீரென மழை பெய்து வருவதால் போட்டி 8 நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. களத்தில் என்ன நடக்கிறது?
GT v MI
GT v MI

எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணி லக்னோவை வீழ்த்தி இரண்டாம் தகுதிச்சுற்றுக்கு தேர்வானது. குஜராத் அணி முதல் தகுதிச்சுற்றில் சென்னை அணியிடம் வீழ்ந்ததால் இரண்டாம் தகுதிச்சுற்றுக்கு வந்தது. குஜராத்தும் மும்பையும் மோதும் இந்தப் போட்டியில் வெல்லும் அணி சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஆட தகுதிப்பெறும். முக்கியமான இந்தப் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் திடீரென மைதானத்தில் மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது. ஆனால், திடீரென மாலை நேரத்தில் மேகமெல்லாம் திரண்டு மழை பெய்வது போன்ற சூழல் உருவானது. ஐந்தே முக்கால் மணிக்கு மைதான ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக கவரையும் பிட்ச்சில் விரித்தனர்.

ஆனால், சில நிமிடங்களில் கருமேகங்கள் விலகியதால் விரிக்கப்பட்டிருந்த கவரும் வெளியே எடுக்கப்பட்டது. ஆனால், அடுத்து ஒரு 20 நிமிடத்திலேயே மீண்டும் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்றும் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. சாரலாக தொடங்கிய மழை திடீரென இடியுடன் கூடிய பலத்த மழையாக மாறிப்போனது. ஒரு மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கிவிட்டே ஒய்ந்தது. மழை ஓய்ந்தாலும் கருமேகங்கள் சூழ்ந்தே இன்னும் காணப்படுகிறது. இந்நிலையில், நடுவர்கள் 7:20 மணிக்கு மைதான நிலவரத்தை சோதனையிடுவதாக அறிவித்தனர். இதனால் டாஸூம் தாமதமாகி போட்டியும் தாமதமாகியிருக்கிறது.

GT v MI
GT v MI

ஒருவழியாக மைதானத்தை சோதனையிட்ட நடுவர்கள் 7:45 மணிக்கு டாஸ் போடப்படும் என்றும் 8:00 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்றும் அறிவித்திருக்கின்றனர். இப்போதைக்கு மழை இல்லையென்றாலும் மேகங்கள் சூழ எப்போது வேண்டுமானாலும் மழை வெளுத்து வாங்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதனால் போட்டி முழுமையாக நடைபெறுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.