Published:Updated:

காட்டடி அதிரடி காம்போ.... 175 மரண அடி... தி நேம் இஸ் கிறிஸ் கெய்ல்! #Gayle175

கெய்ல்
கெய்ல்

30 பந்துகளில் எல்லாம் அதிரடியாக சதம் அடிக்க முடியுமா? முடியும் அது கிறிஸ் கெயிலால் மட்டுமே முடியும். அன்று நடந்த சம்பவத்தை நினைத்தால் இன்றும் அந்த அணியின் பெளலர்கள் கதறுவார்கள். அன்று கேலரியில் இருந்த ரசிகர்கள்தான் ஃபீல்டர்களாக இருந்தார்கள்.

ஒரு பேட்ஸ்மேன் பேட்டிங் ஆட வருவதைப் பார்த்து பெளலர்கள் கை கால்கள் உதறுமா? பந்துகள் எல்லாம் இவர் பேட்டில் பட்டாலே சிக்ஸர்களா பறக்குமா? 30 பந்துகளில் எல்லாம் அதிரடியாக சதம் அடிக்க முடியுமா? முடியும் அது கிறிஸ் கெயிலால் மட்டுமே முடியும். அன்று நடந்த சம்பவத்தை நினைத்தால் இன்றும் அந்த அணியின் பெளலர்கள் கதறுவார்கள். அன்று கேலரியில் இருந்த ரசிகர்கள்தான் ஃபீல்டர்களாக இருந்தார்கள்.

காட்டடி அதிரடி காம்போ.... 175 மரண அடி... தி நேம் இஸ் கிறிஸ் கெய்ல்! #Gayle175

2013-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் புனே வாரியர்ஸ் அணிக்கும் இடையில் இதே நாளில் நடைபெற்ற போட்டி அது. 2011-ம் ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ஓப்பனர் இல்லாமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்த அணியின் உரிமையாளர் மல்லையா கெயிலுக்கு போன் செய்கிறார் . ''எங்கள் அணிக்கு விளையாட வரமுடியுமா?'' என்று கேக்க உடனே ஓகே சொல்லி ஃபிளைட் பிடித்து அவசரமாக மறுநாள் மேட்ச் ஆட வருகிறார் கெயில். அன்றிலிருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் செல்லப்பிள்ளை ஆனார். அது 6 வருடங்கள் தொடர்ந்தது.

``ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டுடா... பாக்குறியா பாக்குறியா...'' எனச் சொல்லி அடித்தார் கிறிஸ் கெய்ல். ஏகே 47 துப்பாக்கியிலிருந்து வரும் குண்டு மழை போல் கெய்ல் சிக்ஸர் மழைகளாக அடித்துத் தள்ளினார்.

டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் சேஸிங் பிட்ச் என்பதைக் கருத்தில் கொண்டு பெளலிங்கைத் தேர்வு செய்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பாக கிறிஸ் கெய்லும், தில்ஷானும் ஓப்பனிங் இறங்கினார்கள். 1.2 ஓவர்கள் மட்டும் ஆடிய நிலையில் மழை குறுக்கிட ஆட்டம் 30 நிமிடங்கள் தடைபட்டது.

கெய்ல்
கெய்ல்

தில்ஷானை ஒரு எண்டில் நிற்கவைத்துவிட்டு அதிரடி வேட்டையைத் தொடங்கினார். இரண்டாவது ஓவரில் 5 பவுண்டரிகள் அடித்து ஆரம்பித்த அடி கடைசி ஓவர் வரை நிற்கவில்லை.

கெய்ல் சூறாவளியில் சீக்கி அஷோக் டிண்டா, ஈஸ்வர் பாண்டே, மிட்செல் மார்ஷ், அலி முர்தஸா என அனைத்து பெளலர்களும் சிக்கி சின்னாபின்னமாகினர். ஏன் ஒரு ஓவர் மட்டும் போட்ட ஆரோன் ஃபின்ச்சைக்கூட கெய்ல் சூறாவளி விட்டுவைக்கவில்லை.

மிச்செல் மார்ஷ் ஓவரில் 28 ரன்கள், அலி முர்தஸா ஓவரில் 28 ரன்கள், ஆரோன் ஃபின்ச் ஓவரில் 29 ரன்கள் என சிக்ஸரும், பவுண்டரியுமாய் மாறி மாறிப் பறந்தன.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் அன்றைக்கு கெய்லைத் தவிர அனைவரும் சப்போர்ட் ஆட்டம் தான் ஆடினார்கள். அவர்கள் வேலை சிங்கள் எடுத்து கெய்லுக்கு ஸ்ட்ரைக் கொடுப்பது மட்டும்தான்.

17 பந்துகளில் 50 ரன்கள், 30 பந்துகளில் 100 ரன்கள், 53 பந்துகளில் 150 ரன்கள் என சரவெடியாய் வெடித்துத் தள்ளினார். ஐபில்-ல் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்திருந்த யூசுஃப் பதானின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்தார் இந்த சூறாவளி மன்னன்.

66 பந்துகளைப் பிடித்தவர் 13 பவுண்டரிகள், 17 சிக்ஸர்கள் அடித்து 175 ரன்கள் எடுத்து ஐபில்-ல் மட்டும் அல்ல அனைத்து வகையான 20 ஓவர் போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற உலக சாதனையைப் படைத்தார் கிறிஸ் கெய்ல்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 263 ரன்கள் எடுக்க,பதிலுக்கு ஆடிய புனே வாரியர்ஸ் அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்து 130 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது.

கெய்ல்
கெய்ல்

கிறிஸ் கெய்ல் அன்று பேட்டிங்கில் மட்டும் அல்ல பெளலிங்கிலும் கலக்கினார். இறுதி ஓவரை வீசியவர் இரண்டு விக்கெட்களை எடுத்தார்.

ஆட்டம் முடிந்தததும் கிறிஸ் கெய்ல் ''இந்த ஆட்டத்தை எப்படி விவரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை . இன்றைய நாள் அனைத்தும் எனக்கு சாதகமாக அமைந்தது. நான் அடித்த ஒவ்வொரு பந்தும் மிடில் ஆஃப் தி பேட்டில் பட்டு பறந்து கொண்டே இருந்தது'' என்றார்.

புனேவின் பயிற்சியாளரான ஆலன் டொனால்டு அந்தப் போட்டியை இவ்வாறு குறிப்பிட்டார். ``அனைத்து வீரர்களின் முகத்திலும் பயத்தை மட்டுமே பார்த்தேன்.

அப்படியோர் ஆக்ரோஷமான ஆட்டத்தை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அடுத்த போட்டிக்கு இவர்களை எப்படித் தயார்படுத்துவேன் என்று எனக்கு பயம் வந்துவிட்டது’’ என வேதனையுடன் குறிப்பிட்டார். அந்த அளவுக்கு கெய்லின் பேட்டிங் தாக்கம் இருந்தது.

கெய்ல் களத்துக்கு வந்தால் கேலரியில்தான் ஃபீல்டர்களுக்கு இடம் என்பதை இந்த ஆட்டத்தில் மட்டும் அல்ல தன் ஒவ்வோர் ஆட்டத்திலும் நிரூபித்தவர் இந்த யுனிவர்ஸல் பாஸ்.

அடுத்த கட்டுரைக்கு