Published:Updated:

"தோனியாக இருந்தால் பாராட்டியிருப்பார்கள், ரோஹித் என்பதால் யாரும் கண்டுகொள்ளவில்லை!"- சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மா

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதே இல்லை என்று கூறியிருக்கிறார்.

Published:Updated:

"தோனியாக இருந்தால் பாராட்டியிருப்பார்கள், ரோஹித் என்பதால் யாரும் கண்டுகொள்ளவில்லை!"- சுனில் கவாஸ்கர்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதே இல்லை என்று கூறியிருக்கிறார்.

சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மா

சென்னையில் நடைபெற்ற குவாலிபையர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 172 ரன்கள் எடுத்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு தோனியின் கேப்டன்சிதான் காரணம் எனப் பலரும் பாராட்டினர்.

அதேபோல் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 182 ரன்கள் எடுத்து லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது குவாலிபயர் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ரோஹித்தை யாரும் பெரிதாகப் பாராட்டவில்லை என்றும், அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை என்றும் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகக் கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். உதாரணத்திற்கு இந்தப் போட்டியில் ஆயுஷ் பதோனி பந்து வீசும் போது ஆகாஷ் மத்வால் ஸ்டம்பின் வலது பக்கத்திலிருந்து ஓடி வந்து விக்கெட் எடுத்திருப்பார். அதுவே நிக்கோலோஸ் பூரான் பேட்டிங் செய்யும்போது ஸ்டம்பின் இடது பக்கத்திலிருந்து ஓடி வந்து அவருடைய விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

தோனி
தோனி

இதற்குக் காரணம் ரோஹித் சர்மாதான். எந்தப் பந்து வீச்சாளரும் இப்படி ஒவ்வொரு பந்துக்கும் மாறி மாறி வந்து வீசமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்களின் பந்துவீச்சைப் பாதித்து விடும். ஆனால் இடது கை பேட்ஸ்மேன் வந்தவுடன் இப்படி ஒரு மாற்றத்தை மத்வால் செய்து அந்த விக்கெட்டை வீழ்த்தினார். ரோஹித் சர்மாவின் இந்தத் திட்டத்திற்கு அவரை யாரும் பாராட்டவே இல்லை. இதுவே இப்படி ஒரு விஷயத்தை தோனி செய்திருந்தால் எல்லோரும் தோனியால்தான் இந்த விக்கெட் கிடைத்தது என்று பாராட்டி இருப்பார்கள். ஆனால் ரோஹித் சர்மா என்பதால் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவும் இல்லை, பாராட்டவும் இல்லை" என்று ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார்.