Published:Updated:

`கிரிக்கெட்டில் நான் நல்ல கேட்சர் கிடையாது... ஆனால்..!' - வைரலாகும் கம்பீரின் ட்வீட்

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க எம்.பி-யுமான கெளதம் கம்பீர் ட்வீட் மீண்டும் வைராகியுள்ளது.

கம்பீர்
கம்பீர்

கெளதம் கம்பீர் 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 97 விளாசி இந்திய அணி கோப்பை பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். கம்பீர் பீல்டிங்கிலும் சிறப்பாகவே செயல்படக்கூடியவர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் சமூக செயல்பாடுகள், தோனி, அணி நிர்வாகத்தை விமர்சனம் செய்து அடிக்கடி லைம் லைட்டில் வந்துபோவார். இந்த நிலையில், தான் திடீரென பா.ஜ.க-வில் இணைந்தார். தேர்தலில் களமிறங்கினார் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிவிட்டார். அரசியல்வாதியானதும் நாட்டுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

கம்பீர்
கம்பீர்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் அமைச்சர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் ட்விட்டரில் பதிலடி கொடுத்து வருகிறார். களத்தில் மோதிக்கொள்வதுபோல் இவரும் அஃப்ரிடியும் ட்விட்டரில் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். கம்பீர் அஃப்ரிடியை ட்ரோல் செய்தது எல்லாம் வேற லெவல் ரகம்.

‘காஷ்மீர் இருக்கட்டும் கராச்சியை மறந்துட்டீங்களே!’- ட்வீட்டில் சிக்ஸர் அடித்த கம்பீர்

கடந்த நில நாள்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணிக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு குறித்து ட்வீட் செய்தார். `காஷ்மீர் இருக்கட்டும் கராச்சியை மறந்துட்டீங்களே'ன்னு கம்பீர் வீடியோவுடன் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் ஹிட் அடித்தது.

கம்பீர் ட்வீட்
கம்பீர் ட்வீட்

இந்த நிலையில் தற்போது கிரிக்கெட், அரசியல் தவிர்த்து ஒரு அப்பாவாக கம்பீர் ட்வீட் செய்துள்ளார். கம்பீருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, `கெளதம் கம்பீர் என்ற கிரிக்கெட்டர் கேட்சைத் தவறவிடுபவராக இருக்கலாம். ஆனால், அப்பாவாக அப்படி கிடையாது'' எனப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டுக்கு லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன. இந்த ட்வீட்டில் இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். இதில் சிலர், `கம்பீர் நீங்கள் உங்களையே ட்ரோல் செய்வதுபோல் இருக்கிறது' எனப் பதிவிட்டுள்ளனர்.