Published:Updated:

`உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான்!' - கங்குலியைக் கலாய்த்த மகள்

இந்திய அணி வெற்றிபெற்ற பிறகு கோப்பை வழங்கும் நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் கங்குலி.

கங்குலி - சனா
கங்குலி - சனா

பிசிசிஐ தலைவர் என்ற அதிகாரமிக்க பதவியைப் பெற்ற சில தினங்களிலேயே இந்திய அணியில் சீர்திருத்தங்களைச் செய்யத் தொடங்கிவிட்டார் `தாதா' கங்குலி. முதல் வேலையாக பல ஆண்டுகளாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்துவந்த இந்திய அணியை அதிலும் விளையாட வைத்து வெற்றி கண்டுள்ளார் கங்குலி.

கங்குலி
கங்குலி

வரலாற்றின் முக்கிய நிகழ்வான இந்தப் போட்டிக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் வீரர்கள் சச்சின் உட்பட பலரையும் அழைத்து பிரமாண்ட தொடக்க விழா நடத்திக்காட்டினார். அவர் நினைத்தது போலவே கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மூன்றே நாள்களில் வங்கதேசத்துக்கு எதிரான இந்தப் பகலிரவு டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

`மூன்றே விநாடிகள்!' - பதவியேற்ற ஒரேவாரத்தில் கோலியை சம்மதிக்க வைத்த கங்குலி

இப்போது அதுவல்ல சம்பவம். இந்திய அணி வெற்றிபெற்ற பிறகு கோப்பை வழங்கும் நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் கங்குலி. அதில் கங்குலியின் போஸை கலாய்க்கும் விதமாக அவரின் மகள் சனா கங்குலி தந்தையின் புகைப்படத்துக்கு கீழே, ``உங்களுக்கு இது பிடிக்கவில்லையா?'' என கமென்ட் பதிவிட்டார்.

கங்குலி - சனா
கங்குலி - சனா

உடனே கங்குலியும், ``நீ மிகவும் கீழ்படியாமல் இருக்கிறாய். அதுதான்" என தன் பங்கிற்கும் கலாய்த்தார். உடனே தந்தைக்கு பதிலளித்த சனா, ``உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான்" என்று சிரித்த ஈமோஜியுடன் பதிவிட்டார். தந்தை மகளின் இந்த ஜாலி உரையாடல் ஒரு சில நிமிடங்களில் வைரலானது.

`எந்த சமரசத்துக்கும் இடமில்லை.. என் வழியிலேயே அனைத்தும்'- முதல் நாளிலேயே சாட்டையை சுழற்றும் கங்குலி!