Published:Updated:

டி20 கிரிக்கெட்: `அது அடித்து ஆடுவதற்கான லைசென்ஸ்!’ - கங்குலி ஷேரிங்க்ஸ்

சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

113 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள கங்குலி 311 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் முதலில் கொல்கத்தா அணிக்கும் பின்னர் புனே அணிக்கும் டி20 போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டார் என்பது குறிபிடதக்கது.

இந்திய கிரிக்கெட் அணியில் குறிப்பிடதக்க கேப்டன்களில் முக்கியமானவர் கங்குலி. அந்நிய மண்ணில் இந்திய அணியை பலமுறை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என நீண்ட காலம் இந்திய அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்த கங்குலி, தற்போது பிசிசிஐ தலைவர். இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை மனதில் வைத்து தொடர்ந்து பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பிசிசிஐ தலைவர் கங்குலி
பிசிசிஐ தலைவர் கங்குலி

தற்போதைய கிரிக்கெட் காலத்தை, டி20 கிரிக்கெட் காலம் எனலாம். டி20 கிரிக்கெட் போட்டிகளின் தாக்கத்தை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கூட காண முடிகிறது. ஆனால், டி20 போட்டிகளைப் பொறுத்தவரை, கங்குலி ஐ.பி.எல் தொடரில் மட்டுமே அதிக போட்டிகளில் விளையாடினார். இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வாலுடன் நேரலை உரையாடலில் பங்கேற்றார் கங்குலி.

Dada Opens With Mayank

#DadaOpensWithMayank, என ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளை மயங்க் கேட்க, அதற்கு கங்குலி தனது பதில்களைத் தெரிவித்தார், தினேஷ் கண்ணன் என்ற ரசிகர், `நீங்கள் இந்தக் காலகட்டத்தில் பிறந்திருந்தால், உங்கள் ஆல்-ரவுண்டர் திறன்களைக் கொண்டு ஒரு டி20 போட்டிக்கான பவர் பிளேயராக உங்களை அடையாளம் காண்பீர்களா அல்லது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்களா?” என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த கங்குலி, ``டி20 போட்டிகள் மிகவும் முக்கியமானவை என்றுதான் நான் சொல்லுவேன். நான் எனது ஆட்டத்தை மாற்றி இருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். காரணம், அது அடித்து ஆடுவதற்கான லைசென்ஸை வழங்குகிறது. நான் டி20 போட்டிகளில் விளையாடுவதை விரும்புவேன். ஐபிஎல் தொடரில் முதல் 5 தொடர்களில் விளையாடி இருக்கிறேன். அப்போது எல்லாம் மகிழ்ச்சியுடன் விரும்பி தான் ஆடினேன்” என்றார். 113 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள கங்குலி 311 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் முதலில் கொல்கத்தா அணிக்கும் பின்னர் புனே அணிக்கும் டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.

தொடர்ந்து நாட்வெஸ்ட் தொடரின் வெற்றி தொடர்பாகப் பேசிய கங்குலி, ``அது ஒரு சிறந்த மொமென்ட். அதுபோன்று ஒரு போட்டியை, அப்படி வென்ற பிறகு கொண்டாட்டம் அதை விட பெரியதாகத்தான் இருக்கும். நான் விளையாடியதில் அது சிறந்த போட்டி எனலாம்” என்றார். கங்கிலியின் அந்தக் கொண்டாட்டத்தை மறக்க முடியுமா?

அடுத்த கட்டுரைக்கு