Published:Updated:

Ashes: ஆட்டத்தையே மாற்றிய ரூட் + மலான் கூட்டணி... மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த இங்கிலாந்து!

ஜோ ரூட் - டேவிட் மலான் ( England Cricket )

ரூட்டும் மலானும் கூட்டணி சேர்ந்து அடித்த 159 ரன்கள் இங்கிலாந்துக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. வீழ்ச்சியிலிருந்து இங்கிலாந்து மீண்டிருக்கிறது.

Ashes: ஆட்டத்தையே மாற்றிய ரூட் + மலான் கூட்டணி... மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த இங்கிலாந்து!

ரூட்டும் மலானும் கூட்டணி சேர்ந்து அடித்த 159 ரன்கள் இங்கிலாந்துக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. வீழ்ச்சியிலிருந்து இங்கிலாந்து மீண்டிருக்கிறது.

Published:Updated:
ஜோ ரூட் - டேவிட் மலான் ( England Cricket )

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 425 ரன்களில் ஆல் அவுட் ஆக, 278 ரன்கள் பின்னடைவோடு இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டும் டேவிட் மலானும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டு வருகின்றனர். இன்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 220-2 என்ற நிலையில் இருந்தது.

நேற்றைய நாளில் அதிரடியாக ஆடி கடைசி ஒரு செஷனில் மட்டுமே சதமடித்த டிராவிஸ் ஹெட் ஸ்டார்க்குடன் இன்றும் பேட்டிங்கை தொடர்ந்தார். மீதமிருந்த 3 விக்கெட்டுகளை வைத்துக் கொண்டு ஆஸ்திரேலிய அணி முதல் செஷனில் 20 ஓவர்களை ஆடியிருந்தது. டிராவிஸ் ஹெட் நேற்றை மாதிரி அதிரடியாக ஆடாவிடிலும் ஒரு சில பவுண்டரிக்களையும் சிக்சரையும் அடித்து 150 ரன்களை கடந்திருந்தார். கடைசி விக்கெட்டாக மார்க் வுட் வீசிய ஒரு யார்க்கரில் ஸ்டம்பை பறிகொடுத்து அவுட் ஆனார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெட்
ஹெட்
ICC
ஆஸ்திரேலிய அணி 425 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியை விட 278 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. அதனால் இந்த 278 ரன்களை அடித்து அதன்பிறகு ஆஸ்திரேலியாவிற்கு ஒரு டார்கெட்டை செட் செய்ய வேண்டும் என்பது அசாத்தியமான விஷயமாக தெரிந்தது. ஆனால், கேப்டன் ஜோ ரூட்டும் டேவிட் மலானும் இதை சாத்தியமாக்கியிருந்தனர்.

இங்கிலாந்து அணியில் வழக்கம் போல ஹசீப் ஹமீதும் ரோரி பர்ன்ஸும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். முதல் இன்னிங்ஸில் முதல் பந்தில் ரோரி பர்ன்ஸே ஸ்ட்ரைக் எடுத்திருந்தார். ஆனால், அந்த முதல் பந்திலேயே ஸ்டார்க்கின் வெறித்தனமான டெலிவரி ஒன்றில் ஸ்டம்பை பறிகொடுத்து பர்ன்ஸ் வெளியேறியிருப்பார். அதனால் இந்த முறை அவர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. பர்ன்ஸுக்கு பதில் ஹசீப் ஹமீத் ஸ்ட்ரைக்கை எடுத்திருந்தார். முதல் பந்தை எதிர்கொள்வதிலிருந்து தப்பித்தால் அதன்பிறகு, ஸ்டார்க்கை சந்திக்காமலயே போய்விடுவாரா என்ன? அதே முதல் ஓவரில் ஸ்டார்க் வீசிய கடைசி பந்தில் பர்ன்ஸ் lbw ஆகியிருந்தார். ரிவியூவ் எடுக்கவே பந்து கொஞ்சம் மேலெழும்பி ஸ்டம்ப்பை மிஸ் செய்திருக்கும். ஸ்டார்க் கொஞ்சம் ஃபுல்லாகவே வீசியிருப்பார் ஆனாலும் பந்து ஸ்டம்ப்பை மிஸ் செய்திருக்கும். இந்த எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இன்றைய போட்டியில் முக்கிய பங்காற்றியது. ஒரு எக்ஸ்ட்ரா பவுன்ஸினால் விக்கெட் ஆபத்திலிருந்து தப்பித்த பர்ன்ஸ் இன்னொரு எக்ஸ்ட்ரா பவுன்ஸில் சிக்கி விக்கெட்டை விட்டிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கம்மின்ஸ்
கம்மின்ஸ்
ICC

உணவு இடைவேளை முடிந்த பிறகு கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் இந்த சம்பவம் நடந்திருந்தது. ஓவர் தி விக்கெட்டில் வந்து நல்ல வேகத்தில் நல்ல லெந்த்தில் வீசப்பட்ட ஒரு பந்து, பர்ன்ஸ் எதிர்பார்த்ததை விட மேலெழும்பவே எட்ஜ் ஆகி கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆகியிருந்தார். பர்ன்ஸ் 13 ரன்களில் அவுட் ஆகவே நம்பர் 3 இல் டேவிட் மலான் இறங்கியிருந்தார்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரைக்கும் இங்கிலாந்தின் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் பிரத்யேகமான வியூகங்களுடனும் மேட்ச் அப்களுடன் களமிறங்கி அதை சரியாக செயல்படுத்தியும் கொண்டிருந்தனர்.

பர்ன்ஸ் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆகியிருந்தாலும், அவர் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த போது லெக் ஸ்லிப்பை அட்டாக் செய்திருப்பார்கள். முதல் இன்னிங்ஸில் பர்ன்ஸ் அவுட் ஆகிய விதத்தையும் அவரின் ட்ரிகர் மூவ்மெண்ட்டையும் வைத்து பார்த்தால் இந்த ஃபீல்டுக்கான லாஜிக் புரியும்.

அதேமாதிரி, ஹசீப் ஹமீத் ரொம்பவே பொறுமையாக நிதானமாக கைகள் கட்டப்பட்ட தன்மையோடு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை லீவ் செய்துகொண்டே இருப்பார். முதல் இன்னிங்ஸில் ஹசீப்பே பொறுமையிழந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பேட்டை விட்ட போதுதான் அவரின் விக்கெட் கிடைத்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவரை லீவ் செய்ய விடாமல் பந்தை ஆட வைத்துவிட வேண்டும் என்பதில் ஆஸியினர் தெளிவாக இருந்தனர். ஹசீப் இன்றைக்கு 4 பவுண்டரிகளை அடித்திருப்பார். நான்குமே ஸ்டார்க்கின் பந்தில் அடிக்கப்பட்டன. அந்த நான்கில் ஒன்று ஸ்டார்க்கின் முதல் ஸ்பெல்லில் ஒரு ஷார்ட் பாலில் வந்தது. மீதமுள்ள மூன்று பவுண்டரிக்களும் ஸ்டார்க்கின் இரண்டாவது ஸ்பெல்லின் முதல் இரண்டு ஓவர்களில் வந்தவை. இந்த மூன்று பவுண்டரிக்களில் இரண்டு பவுண்டரிக்கள் ஃபைன் லெக்கில் வந்தவை. இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் ஓவர் தி விக்கெட்டில் வந்து வலது கை பேட்ஸ்மேனுக்கு வீசும்போது நேச்சுரல் ஆங்கிளாக பந்து மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி வெளியேதான் செல்லும். இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான லைன். ஸ்லிப் வைத்து அட்டாக் செய்யும் போது விக்கெட் விழுவதற்கான வாய்ப்பும் அதிகம். ஆனால், இப்படி வீசினால் ஹசீப் அந்த பந்துகளை அழகாக லீவ் செய்துவிடுவார். ஆடவே மாட்டார்.

ஸ்டார்க்
ஸ்டார்க்
ICC

அவரை ஆட வைப்பதற்காக லெக் ஸ்டம்ப் லைனை பிடித்து உடம்புக்குள் ஸ்ட்ரைட்டாக வீசினார். ஸ்டார்க் எதிர்பார்த்ததை போல இந்த பந்துகளை ஹசீப் ஆடினார். பவுண்டரிக்களை அடித்தார். ஆனால், அதே லெக் ஸ்டம்பில் வீசப்பட்ட பந்தில் மீண்டும் பேட்டை விட்டு எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச்சும் ஆனார். இரண்டு பவுண்டரிக்களை வீசி வலை விரித்து ஸ்டார்க் ஒரு விக்கெட்டை பெற்றுக் கொடுத்தார்.

மேட்ச் அப்களிலும் இந்த இன்னிங்ஸில் கம்மின்ஸ் அதிக ஈடுபாடு காட்டினார். இடது கை பேட்ஸ்மேனான டேவிட் மலான் 9 வது ஓவரில் க்ரீஸிற்குள் வந்தார். ஆஃப் ஸ்பின்னரான நேதன் லயனை கம்மின்ஸ் அப்போதே பந்துவீச அழைத்துவிட்டார். அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கையில் இவ்வளவு சீக்கிரம் ஸ்பின்னரை அறிமுகப்படுத்தியது சிறிய சர்ப்ரைஸாக இருந்தது. அதேமாதிரி, கொஞ்ச நேரத்தில் நம்பர் 4 ஜோ ரூட் க்ரீஸிற்குள் வந்தார். அவர் வந்தவுடன் நேதன் லயனை கட் செய்துவிட்டு, ஹேசல்வுட் ஒரு முனையிலும் கம்மின்ஸ் ஒரு முனையிலும் வீசியிருப்பர்.

ஆஷஸ் போட்டிகளில் ஜோ ரூட்டின் விக்கெட்டை இந்த இருவரும் இணைந்து 15 முறை வீழ்த்தியிருக்கின்றனர். கடைசி ஆஷஸில் மட்டும் ஜோ ரூட் ஆடிய 9 இன்னிங்ஸ்களில் 6 முறை வீழ்த்தியிருக்கின்றனர்.

இந்த டேட்டாதான் ரூட் உள்ளே வந்தவுடன் ஹேசல்வுட், கம்மின்ஸ் ஜோடி சேர காரணமாக அமைந்தது.

ஜோ ரூட் - மலான் இருவரும் கூட்டணி சேர்ந்த போது இங்கிலாந்து 61-2 என்ற நிலையில் இருந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதே பெரிய சவாலாக இருக்கும் போல தோன்றியது. ஆனால், இந்த கூட்டணி அதையெல்லாம் மாற்றி இங்கிலாந்தை எழுச்சியுற செய்தது.

ஆஸ்திரேலியாவின் திட்டங்கள், மேட்ச் அப்கள் ஆகியவை தொடக்கத்தில் ரூட்-மலான் கூட்டணியை கொஞ்சம் சிரமப்படுத்தினாலும், கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்த பிறகு இருவரும் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கூட்டணி முதல் 10 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தனர். ஆனால், அந்த தொடக்க நிதானத்துக்கு பிறகு ஓவருக்கு சீராக 4 ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் அணியின் ஸ்கோரும் வேகமாக உயர தொடங்கியது. மலானுக்காக கொண்டு வரப்பட்ட லயனால் அவரை பெரிதாக சிரமப்படுத்தவே முடியவில்லை.

மலான்
மலான்
ICC

அவ்வபோது ஒன்றிரண்டு நல்ல டெலிவரிக்களை வீசினாரே தவிர அவருக்கு 400 வது விக்கெட்டை பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு ஒரு டெலிவரியை லயன் வீசவே இல்லை. மலானும் க்ரீஸுக்குள் காலை ஊன்றி Back Foot லும் டவுன் தி க்ரவுண்ட் இறங்கி வந்தும் அழகாக ஸ்பினனை எதிர்கொண்டார். இன்னொரு பக்கம் ஜோ ரூட் அவருக்கு ஸ்பின்னை எதிர்கொள்வதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. காலேவிலும் சேப்பாக்கத்திலும் இரட்டை சதங்களை அடித்தவர். இங்கே லயனை மிக எளிதாக எதிர்கொண்டார்.

இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 1500 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் ஜோ ரூட் செய்திருந்தார்.
ஜோ ரூட்
ஜோ ரூட்
ICC

வேகப்பந்து வீச்சில் மலான்-ரூட் இருவருமே சில பந்துகளை பேடில் வாங்கியிருந்தனர். ஆனால், மேலே குறிப்பிட்டிருந்த அந்த எக்ஸ்ட்ரா பவுன்ஸ் காரணமாக தப்பித்திருந்தனர்.

ரூட்டும் மலானும் சீராக ரன்கள் சேர்க்க தொடங்கிய போது ஆஸ்திரேலியா தங்கள் பிடியை கொஞ்சம் இலகுவாக்கியதை போல இருந்தது. அக்ரசிவ்வான ஃபீல்ட் செட்டப்கள் டிஃபன்ஸிவ்வாக மாறியிருந்தன. முதல் இன்னிங்ஸில் பெரும்பாலான சமயங்களில் 3 ஸ்லிப்பை வைத்து கம்மின்ஸ் அட்டாக் செய்திருப்பார். சில சமயங்களில் ஒரு ஸ்லிப்பை மட்டும் நீக்கியிருப்பார். ஆனால், இப்போது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் ஒரு ஸ்லிப்பை மட்டும் வைத்து அட்டாக் செய்து கொண்டிருந்தார். இந்த ஃபீல்டுக்கு ஏற்ற வகையில் பௌலர்களும் டைட்டாக வீசாமல் கொஞ்சம் இடம் கொடுத்து வீசிக்கொண்டிருந்தனர். போதாக்குறைக்கு எதோ காயம் காரணமாக ஹேசல்வுட் பாதியிலேயே வெளியேறியும் இருந்தார். இன்றைக்கு வெறும் 8 ஓவர்களை மட்டுமே அவர் வீசியிருந்தார். இதெல்லாம் ரூட்-மலான் கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. செட்டில் ஆன பிறகு ரொம்பவே சௌகரியமாக ஆட தொடங்கிவிட்டனர். மூன்றாம் நாள் முடிவில் ரூட் 158 பந்துகளில் 86 ரன்களையும் மலான் 177 பந்துகளில் 80 ரன்களையும் அடித்து நாட் அவுட்டாக இருந்தனர். இங்கிலாந்து அணி 220-2 என்ற நிலையில் இருக்கிறது. இன்னும் 58 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருக்கின்றது.

ரூட் - மலான்
ரூட் - மலான்
England Cricket

டிராவிஸ் ஹெட் சதமடித்த போதே போட்டி மொத்தமாக ஆஸ்திரேலியா பக்கம் சென்றுவிட்டது. இங்கிலாந்து இந்த போட்டியில் அவ்வளவுதான் என்றே தோன்றியது. ஆனால், இன்றைக்கு ரூட்டும் மலானும் கூட்டணி சேர்ந்து அடித்த 159 ரன்கள் இங்கிலாந்துக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. வீழ்ச்சியிலிருந்து இங்கிலாந்து மீண்டிருக்கிறது. நான்காம் நாளில் ரூட் + மலான் கூட்டணி எப்படி ஆடப்போகிறது என்பதை பொறுத்தே இந்த போட்டியின் முடிவு அமையும். பரபரப்பான கடைசி இரண்டு நாள்கள் காத்திருக்கின்றன.