Published:Updated:

``தோனியை விமர்சித்திருக்கிறேன்; ஆனா இப்போ Hat's off!” - கம்பீர்

ராணுவ தளபதி பிபின் ராவத், தோனிக்கு தனியாக எந்தப் பாதுகாப்பும் தேவை இல்லை, அவர் இந்த நாட்டு மக்களை காக்கும் பணியில் இருப்பார் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

கம்பீர்
கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது 2 மாதம் ஓய்வில் இருக்கிறார். ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் என்னும் பதவியில் இருக்கும் அவர் இந்த ஓய்வின்போது ராணுவ பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடிவு செய்தார். இதற்கான க்ரீன் சிக்னல் பிசிசிஐ மற்றும் இந்திய ராணுவத்திடம் இருந்து கிடைக்க, தயாரானார் தோனி.

தோனி
தோனி
AP

காஷ்மீரில் பாராசூட் ரெஜிமென்டில் தோனி தனது பயிற்சியை மேற்கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. அவர் இருக்கும் படைப்பிரிவின் பணிகளை அவர் திறம்படச் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி காஷ்மீரில் ரோந்துப்பணி உள்ளிட்ட பல்வேறு ராணுவ பணிகளில் அவர் ஈடுபடவுள்ளார்.

வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை அவர் இந்த படைப்பிரிவுடன் இணைந்து ராணுவ சேவையில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் கடந்த வியாழக்கிழமை வெளியானது முதல் தோனியின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

ராணுவ தளபதி பிபின் ராவத்
ராணுவ தளபதி பிபின் ராவத்

இந்த நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத், தோனிக்கு தனியாக எந்தப் பாதுகாப்பும் தேவை இல்லை, அவர் இந்த நாட்டு மக்களைக் காக்கும் பணியில் இருப்பார் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். தோனியின் பணிகள் குறித்து என்.டி.டி.வி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த தளபதி பிபின் ராவத் இதை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், ``ஒரு இந்தியக் குடிமகன் ராணுவ உடையை அணிய வேண்டும் என்றால், அந்த உடைக்கான பணியை அவர் செய்யத் தயாராக இருக்க வேண்டியது மிக அவசியம். தோனி தனது அடிப்படையான பயிற்சிகளை சிறப்பாக மேற்கொண்டு உள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை அவர் திறம்படச் செய்வார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.

ராணுவ உடையில் தோனி
ராணுவ உடையில் தோனி

இன்னும் சொல்லப்போனால் அவரால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும். காரணம் அவர் 106 பிராந்திய ராணுவ வீரர்களுடன் இருக்கிறார். அது ஒரு மிகச் சிறந்த படைப்பிரிவு. தகவல்கள் கொண்டு சேர்ப்பது, நிலையான பாதுகாப்பை உறுதி செய்வது அந்தப் படைப்பிரிவின் பணி. தோனியும் இந்தப் பணிகளைச் செய்வார்.

அவருக்கு நாங்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நாங்கள் என்றுமே நினைக்கவில்லை. அவர் மக்களைக் காக்கும் பணியை செய்து, கொடுத்த பணிகளைச் சிறப்பாக முடிப்பார்” என்றார். மேலும், தோனி ரோந்துப் பணிகள், பாதுகாப்புபணிகளில் ஈடுபடுவார். அதன்பின்னர் ராணுவ வீரர்களுடனே தங்கி இருப்பார் என்றும் தெரிவித்தார்.

கம்பீர்
கம்பீர்

இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தோனியின் இந்த செயல்களை வெகுவாக பாராட்டியுள்ளார். ஏ.பி.பி ஊடகத்துக்கு பேசிய அவர், ``நான் எப்போதும் சொல்வதுண்டு, ராணுவ உடையை சும்மா அணிந்தால் மட்டும் போதாது. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று. இன்று தோனி நாட்டு மக்களுக்கு, ராணுவ உடைக்கு, தான் அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டியுள்ளார். காஷ்மீர் பகுதியில் அவர் ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என்பேன். காரணம் இது பல இளைஞர்களை ராணுவத்தில் சேர ஊக்கப்படுத்தும்.

`தோனி லெஜெண்ட்; நானே அவரின் பெரிய ரசிகன்!’ - யுவராஜ் தந்தையின் திடீர் யூ டர்ன்

ராணுவ உடையில் ஏதாவது செய்ய வேண்டும் என நான் எப்போதும் அவரை விமர்சனம் செய்ததுண்டு. ஆனால், தான் ராணுவ விஷயத்தில் சீரியஸாகதான் இருக்கிறார் என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்திவிட்டார். ஹேட்ஸ் ஆஃப் தோனி” என்றார்.

தோனி பற்றி கம்பீர் சொன்னதைப் படிச்சோம். இப்போ தோனி பத்தி தோனியே சொன்னதைப் படிக்கலாமா? 2005ம் ஆண்டில், மிக அதிகமாக 23 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்த கையோடு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் வந்திருந்தார். அப்போது நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சிக்ஸர் பதில்களாக சொன்னார். கடைசியாக கேட்ட கேள்விக்கு மட்டும் உஷாராகி 'நோ கமென்ட்ஸ்' சொல்லி நம்மை க்ளீன் போல்டு ஆக்கிவிட்டார். அப்படியென்ன கேள்வி அது?

உங்களுக்கான APPAPPO ஹோம்பேஜ்ல இந்த 2005 பேட்டி ரெடியா இருக்கு! இப்பவே பதிவு பண்ணா 51 ரூபாய்க்கான கட்டுரைகளை இலவசமா படிக்கலாம்!

APPAPPO APP இன்ஸ்டால் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்கள் -> http://bit.ly/Dhoni2005