16 வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
CSK அணியின் கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் எனப் பல கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கூறிவரும் நிலையில் தோனி தலைமையிலான CSK அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் அதன் ரசிகர்கள் உள்ளனர்.சென்ற வருட ஐபிஎல் தொடரின் போது, சென்னையில் விளையாடிய பிறகுதான் ஓய்வு பெறுவேன் என தோனியும் அறிவித்திருந்தார்.

நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றது. மைதானம் முழுக்க மஞ்சள் நிற உடையில் குவிந்திருந்தனர்.
இதுகுறித்து தோனியிடம் கேட்டப்போது, "என்னை வழியனுப்பி வைக்க தான் மஞ்சள் நிற உடையில் ரசிகர்கள் வந்திருக்கிறார்கள், அதற்கு நன்றி. அடுத்த முறை இவர்களில் பலரும் கொல்கத்தா ஜெர்சி அணிந்து வருவார்கள்” என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தோனி தனது ஓய்வு குறித்து சூசகமாக பேசியுள்ளதாக பலரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தோனியை புகழ்ந்து ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் “சச்சின் அவுட் ஆன பிறகு டிவியை ஆப் செய்த ஒட்டுமொத்த இந்தியாவையும் இறுதிவரை மேட்ச் பார்க்க செய்த இளைஞன் (இன்றும்). தோனி என்ற ஒற்றைப் பெயரே இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறது. உன் ஓய்வறிந்து நீ குவித்த கோப்பைகளும் கண்ணீர் வடிக்கும்!” என ஜெயக்குமார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.