Published:Updated:

`தோனியின் ஓய்வு முடிவு பற்றிக் கேட்காதீர்கள்'- தனது விமர்சனத்தை முன்வைத்த சேவாக்

சேவாக்

தோனியின் ஓய்வு முடிவு குறித்துப் பலரும் அடிக்கடி கேள்விகளை எழுப்பி வருவதற்கு, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Published:Updated:

`தோனியின் ஓய்வு முடிவு பற்றிக் கேட்காதீர்கள்'- தனது விமர்சனத்தை முன்வைத்த சேவாக்

தோனியின் ஓய்வு முடிவு குறித்துப் பலரும் அடிக்கடி கேள்விகளை எழுப்பி வருவதற்கு, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

சேவாக்
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் குறித்து தினந்தோறும் பேசி வந்தாலும் மறுபுறம் தோனியின் ஓய்வு குறித்துதான் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு எந்த ஒரு சர்வதேசப் போட்டிகளிலும் கலந்துகொள்ளாத தோனி 2020 ஆம் ஆண்டு அனைத்துவித சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். பின்னர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த தோனியிடம் பலரும் ஐபிஎல்லில் இருந்து எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியை முன்வைத்திருந்தனர். 

தோனி
தோனி

இதற்கு சென்ற வருட ஐபிஎல் தொடரின் போது பதிலளித்திருந்த தோனி சென்னையில் விளையாடிய பிறகுதான் ஓய்வு பெறுவேன் எனக் கூறியிருந்தார். இதனால் பலரும் இந்த வருட ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலிருந்தே தோனியின் ஓய்வு குறித்துப் பேசிவருகின்றனர். 

இந்நிலையில் சென்னை மற்றும் லக்னோ போட்டியில்  டாஸ் போடும் நிகழ்வின்போது நெறியாளர் டேனி மோரிசன்,  'உங்களின் கடைசி சீசன் என்பதால் ரசிகர்கள் வெகுவாக திரண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சியா?..' என்ற கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு தோனி நீங்கள்தான் இது என்னுடைய கடைசி சீசன் என்று முடிவெடுத்துவிட்டீர்கள்” என்று ஜாலியாகக் கூறி சிரித்திருந்தார். இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. 

தோனி, சேவாக்
தோனி, சேவாக்

இந்நிலையில் தோனியின் ஓய்வு முடிவு குறித்துப் பலரும் அடிக்கடி கேள்விகளை எழுப்பி வருவதற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.  இதுகுறித்து பேசிய சேவாக், “ஏன் தோனியிடம் அவரது ஓய்வு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இது அவருடைய சீசனா? இல்லையா? என்பது குறித்து ஒரு வீரரிடம் ஏன் கேட்கிறீர்கள். தோனி ஓய்வு பெற வேண்டுமா இல்லையா என்பது குறித்து அவரே முடிவு செய்வார். அப்படி இது அவருடைய கடைசி சீசனாக இருந்தால், அவரே அந்த முடிவை அறிவிக்கட்டும். நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பது சரியல்ல”  என்று சேவாக் தெரிவித்திருக்கிறார்.