Published:Updated:

சச்சின்:`பல பேரின் முகமாக நின்று ஆடிய புலி!' ஒரு புகைப்படம் சொல்லும் வரலாறு!

சச்சின்

சச்சின் அடித்த ரன்களும் சதங்களும் பின்பொரு காலத்தில் வேறு யாராவது அடிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் யாராலும் இத்தனை காலம் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட முடியாது.

சச்சின்:`பல பேரின் முகமாக நின்று ஆடிய புலி!' ஒரு புகைப்படம் சொல்லும் வரலாறு!

சச்சின் அடித்த ரன்களும் சதங்களும் பின்பொரு காலத்தில் வேறு யாராவது அடிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் யாராலும் இத்தனை காலம் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட முடியாது.

Published:Updated:
சச்சின்

`பல பேரின் மொகமா நின்னு ஆடுற புலி தானே... சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெருமானே.!' என்ற வரிகளுக்கு நிகர் இந்தப் புகைப்படம். புகைப்படக் கலைஞர் அட்டுள் காம்ப்ளே எடுத்த இந்த புகைப்படம் 2013 தேசிய பிரஸ் ஃபோட்டோ கான்டஸ்டில் தலைசிறந்த புகைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் புகைப்படம் சச்சின் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட களமிறங்க டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து வெளியே வரும்போது எடுக்கப்பட்டது. இதை ஒரு சாதாரண புகைப்படமாக மட்டும் பார்க்க முடியாது, அவரது மொத்த கிரிக்கெட் வாழ்வை இந்த புகைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

Television to Mobile phones:

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பலரும் அவர் வெளியே வருவதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். முதலில் சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை ஆஃப் செய்துவிடுவோம் என்று சொல்லும் இந்திய ரசிகர்கள் பலர். அந்தக் காலம் முதல் தொடங்கிய அவரது கிரிக்கெட் கேரியர் மொபைல் போன்களில் போட்டோ எடுக்கும் காலம் வரை தொடர்ந்தது. இவ்வளவு காலம் கிரிக்கெட் களத்தில் ஒருவர் சிறப்பாக விளையாடினார் என்பது சச்சின் நிகழ்த்திய அதிசயங்களில் ஒன்று. இவர் அடித்த ரன்களும் சதங்களும் பின்பொரு காலத்தில் வேறு யாராவது அடிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் யாராலும் இத்தனை காலம் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட முடியாது.

Sachin Tendulkar
Sachin Tendulkar

Hope to the fans:

இந்த புகைப்படத்தில் சூரிய ஒளி சரியாக அவர் மீது வந்துவிழும். அவர் கிரிக்கெட் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒளியாகவே தெரிந்தார். பல பேர் கிரிக்கெட் பார்க்க ஒரு காரணமாக இருந்ததாக சச்சினைக் கூறுவார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் அவர் ரசிகர்களுக்கு தந்த அந்த வெளிச்சம். ஒவ்வொரு முறை சச்சின் அவுட்டாகும் போதும் தொலைக்காட்சி திரை மட்டும் இருட்டாகவில்லை. இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் இருட்டாகிவிடும் என்பதுதான் உண்மை. வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு நம்பிக்கை நாயகன்தான் சச்சின்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Adapting to the game:

இந்த புகைப்படத்தில் இருக்கும் வயதான ரசிகர்கள் சிலர் கையில் மொபைல் இன்றி கண்களால் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் காட்சியினைப் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லா வயது மக்களையும் ஈர்த்த ஒருவர்தான் சச்சின் டெண்டுல்கர். அந்த அனைத்து மக்களின் ஈர்ப்பு என்பது எளிதாகக் கிடைப்பதில்லை. காலத்திற்கேற்ப கிரிக்கெட் வெவ்வேறு வடிவங்களாக மாறியது. 24 வருடம் கிரிக்கெட் ஆடிய சச்சின் காலத்திற்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றிக்கொண்டே இருந்தார்.

சச்சின்
சச்சின்

"Sachin Sachin" :

சில புகைப்படத்தைப் பார்க்கும்போது நமக்கு ஒலி கேட்கும் என்பார்கள். அதுபோலத்தான் ஒரு முறை இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போதும் "சச்சின் சச்சின்" என்ற ரசிகர்களின் அன்பு கூச்சல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறை அவர் களமிறங்கும்போதும் இந்த ஒலிதான் பின்னணி இசை போல் ஒலித்துக்கொண்டிருக்கும். போன மேட்சில் சச்சின் commentators காக பேட்டி அளிக்கும்போதுகூட அது மைதானத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருந்தது. மேலும் இந்தப் புகைப்படம் அவரது சொந்த ஊர் மைதானமான வான்கடேவில் அமைந்தது இன்னொரு அழகான விஷயம். இன்னும் பல வருடங்கள் கழித்து அந்த புகைப்படத்தை பார்த்தாலும் இதே ஒலி கேட்கும் என்பதில் சந்தேகமில்லை.

எல்லாவற்றையும்விட இந்த புகைப்படம் தரும் உணர்வு எல்லையற்றது. ஒவ்வொரு ரசிகரும் அவர் கடைசியாக இந்திய அணிக்காக விளையாட வருவதைப் பார்க்க காத்துக்கிடந்தனர். இந்தியாவின் கண்கள் முழுவதும் அவர்மீதுதான் இருந்தது. சிலபேர் கண்களாலும் சிலபேர் கருவிகளாலும் இந்தத் தருணத்தைப் பார்க்க நாடு முழுவதும் ஏங்கிக் கிடந்தனர். எல்லாம் ஒரு பெயருக்காக, சச்சின் டெண்டுல்கர். அவர் விளையாடிய ஒவ்வொரு இன்னிங்சும் ரசிகரின் மனதில் காலத்திற்கு நிலைத்திருக்கும். அவர் இந்திய கிரிக்கெட்டிற்கு தந்த ஒளி காலத்திற்கும் அணையாது. இது வெறும் புகைப்படம் அல்ல. சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism