Published:Updated:

`ரஞ்சி கோப்பையை தமிழகம் வெல்ல முக்கியப் பங்காற்றியவர்’ - முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் மரணம்

நமது நிருபர்

57 வயதான சந்திரசேகர், தமிழக அணியின் கேப்டனாகவும் தமிழக அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர்.

v b chandrasekhar
v b chandrasekhar

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் திடீர் மரணம் கிரிக்கெட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 57 வயதான சந்திரசேகர், தமிழக அணியின் கேப்டனாகவும் தமிழக அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர்.

இவர்தான் தோனியை அணிக்குள் கொண்டுவரும் யோசனையை அளித்தவர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட்டபோது, அதன் நிர்வாகத்தில் மிக முக்கியமானவராக இருந்தவர் சந்திரசேகர். இவர்தான் தோனியை அணிக்குள் கொண்டுவரும் யோசனையை அளித்தவர். சந்திரசேகர் தற்கொலை செய்துகொள்ளப்பட்டதாக தெரிகிறது.

1987-88-ல் தமிழக அணி ரஞ்சி கோப்பையை வென்றபோது, அதில் மிக முக்கியப் பங்காற்றியவர், சந்திரசேகர். இந்த தொடரின் கால் இறுதிப்போட்டியில் 160 ரன்களும் இறுதிப்போட்டியில் ரயில்வேஸ் அணிக்கு எதிராக 89 ரன்களும் அடித்து தமிழகம் வெற்றிபெற காரணமாக இருந்தவர் சந்திரசேகர்.

இராணி கோப்பையில் 56 பந்துகளில் இவர் அடித்த சதம், இந்திய அணிக்குள் அழைத்துவந்தது. முதல் தர கிரிக்கெட்டில் இதுதான் அப்போது குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம்.

v b chandrasekhar
v b chandrasekhar

தமிழக அணிக்காக சிறப்பாக விளையாடிய சந்திரசேகர். இந்திய அணியில் பெரிதாகத் தடம் பதிக்கவில்லை. 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாட மட்டுமே அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில், நியூசிலாந்துக்கு எதிராக 77 பந்துகளில் 53 ரன்கள் அடித்திருந்தார். 2004-2006-ம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர் சந்திரசேகர்.