Published:Updated:

"பலவற்றைக் கற்றுக்கொடுத்த விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கான சரியான நேரம் இது!"- இயான் மோர்கன்

இயான் மோர்கன்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

Published:Updated:

"பலவற்றைக் கற்றுக்கொடுத்த விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கான சரியான நேரம் இது!"- இயான் மோர்கன்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

இயான் மோர்கன்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான இயான் மோர்கன் 2006-ல் சர்வதேச அணிக்காக கிரிக்கெட்டில் அறிமுகமானபோது அவர் விளையாடியது அயர்லாந்து அணிக்காகத்தான். 2009 வரை அயர்லாந்து அணிக்காக விளையாடிய அவர், பின் அதே ஆண்டு மே மாதம் இங்கிலாந்து அணிக்காகக் களமிறங்கி விளையாடத் தொடங்கினார். இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  700 ரன்களையும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7701 ரன்களையும் எடுத்துள்ளார்.

 இயான் மோர்கன்
இயான் மோர்கன்

இவர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இதனிடையே, இயான் மோர்கன் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இருப்பினும் உள்ளூர் போட்டிகள், மற்றும் பிற நாடுகளின் லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், "அனைத்து விதமான  கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குப் பலவற்றைக்  கற்றுக்கொடுத்த விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கான சரியான நேரம் இது. 2005-இல் Middlesex அணியில் தொடங்கி SA20 லீகில் Paarl Royals அணிக்காக விளையாடியது வரை ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசித்தேன். எனது வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டபோது என் குடும்பத்தினரும், நண்பர்களும்தான் ஆதரவாக இருந்தனர்.

குறிப்பாக எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் இன்றைக்கு ஒரு நல்ல வீரராக இருப்பதற்குக் காரணமாக இருந்த சக வீரர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட முடிந்தது. அது வரும்காலங்களிலும்  தொடரும் என்று நம்புகிறேன். நான் களத்தில் விளையாடத்தான் ஓய்வு கொடுத்துள்ளேன். ஆனால் ஒரு வர்ணனையாளராகவோ, வல்லுநராகவோ கிரிக்கெட் விளையாட்டுடன் நான் தொடர்ந்து பயணிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.