நேற்று நடைபெற்ற போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.

தோனி தலைமையினை சிஎஸ்கே அணி நேற்றைய போட்டியில் சிறப்பாக ஆடியிருந்தது. தோனியின் கேப்டன்ஷியும் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் நடுவர்கள் சிலர் தோனியிடம் பந்து வீச தாமதமாவது குறித்து அடிக்கடி ஆலோசனை செய்து வந்தனர். இந்த விஷயம் குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய பிராட் ஹாக், “ தோனி நடுவர்களுடன் நான்கு நிமிடம் விவாதத்தில் ஈடுபட்டு அவர்களை கவர்ந்ததால் பதிரனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு பந்து வீச வருவதற்கு கால அவகாசம் கிடைத்தது. ஆனால் நடுவர்கள் இதுபோன்ற சமயங்களில் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சம்பவத்தை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கக் கூடாது. தோனி ஒரு சில திட்டங்களைப் பயன்படுத்தி தனக்கு தேவையானதைப் பெற்றுக்கொள்கிறார். நேற்றைய போட்டியில் பீல்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சுழற்சி முறையில் வீரர்களைப் பயன்படுத்தியது என அதிக நேரத்தை சிஎஸ்கே அணி எடுத்துக்கொண்டது" என்று கூறியிருக்கிறார்.