Published:Updated:

HBD Ajay Jadeja: வக்கார் யூனிஸை கதறவிட்ட முரட்டு ஃபினிஷர்... சச்சினின் முதல் ஓப்பனிங் பார்ட்னர்!

Ajay Jadeja

1994-ம் ஆண்டில் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் முதல் முறையாக ஓப்பனிங் இறக்கிவிடப்பட்டார் சச்சின். அந்த ஒரு முடிவு இந்திய கிரிக்கெட்டையே புரட்டிப்போட்டது. அப்போது சச்சினின் பார்ட்னராக இருந்தவர் அஜய் ஜடேஜா.

HBD Ajay Jadeja: வக்கார் யூனிஸை கதறவிட்ட முரட்டு ஃபினிஷர்... சச்சினின் முதல் ஓப்பனிங் பார்ட்னர்!

1994-ம் ஆண்டில் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் முதல் முறையாக ஓப்பனிங் இறக்கிவிடப்பட்டார் சச்சின். அந்த ஒரு முடிவு இந்திய கிரிக்கெட்டையே புரட்டிப்போட்டது. அப்போது சச்சினின் பார்ட்னராக இருந்தவர் அஜய் ஜடேஜா.

Published:Updated:
Ajay Jadeja

சச்சினைத் தாண்டி 90-களில் இந்திய கிரிக்கெட்டை ரசிக்கவைத்த மற்றுமொருவர் முக்கிய வீரர் அஜய் ஜடேஜா. ஒரு மெல்லிய புன்னகையோடு அவர் அரங்கேற்றிய பல சம்பவங்கள் அக்காலத்தின் உச்சபட்ச வீரர்களையே மிரள வைத்தன. அவற்றிற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் என்றைக்கும் இடம் உண்டு.

Ajay Jadeja
Ajay Jadeja

90-களின் முற்பகுதியில் இந்திய அணிக்குள் முதன்முறையாக இடம்பிடித்திருந்தார் ஜடேஜா. ஆனால், தொடக்கக் காலத்தில் நிரந்தர இடம் ஏதுமின்றி அணியில் மாற்று வீரராகவே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தார். அப்படிக் கிடைக்கின்ற வாய்ப்புகளில் கூட ஒரு நிலையான பேட்டிங் ஆர்டரில் அல்லாமல் மேலிருந்து கீழ்வரை ஒவ்வொரு முறையும் மாற்றி இறக்கப்பட்டார். ஆனால், எந்த ஒரு இடத்திலும் தவறவிடாமல் தன் இருப்பை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வந்தார் ஜடேஜா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு கட்டத்தில் அணியின் நிரந்தர ஒப்பனராகத் தொடர்ந்து இறக்கிவிடப்பட்டார் ஜடேஜா. 1994-ம் ஆண்டில் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் முதல் முறை ஓப்பனிங் இறக்கிவிடப்பட்டார் சச்சின். அந்த ஒரு முடிவு இந்திய கிரிக்கெட்டையே புரட்டிப்போட்டது. அப்போது சச்சினின் பார்ட்னராக இருந்தவர் அஜய் ஜடேஜா. ஒரு ஒப்பனராக சச்சினைவிட சீனியராக இருந்தாலும் அவருக்காக சப்போர்டிங் ரோலை ஆடத்தொடங்கினார்.

Ajay Jadeja
Ajay Jadeja

1996-ம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் - ஜடேஜா கூட்டணிதான் ஒப்பனிங் இறங்கியது. முதல் ஆட்டத்தில் ரன்கள் அடித்தாலும் அடுத்தடுத்த சில போட்டிகளால் சொதப்பியதால் லோயர் ஆர்டருக்கே மீண்டும் இறக்கப்பட்டார் ஜடேஜா.

ஆனால் அங்கேதான் ஜடேஜாவின் சரவெடி ஆரம்பமானது. வக்கார் யூனிஸுக்கு எதிரான அந்தச் சம்பவத்தை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism