Published:Updated:

``தோனி அந்த இடத்திற்கு வந்தால்தான் சரியாக இருக்கும்"- பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா

தோனி, டேனிஷ் கனேரியா

இதனைத் தொடர்ந்து BCCI அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Published:Updated:

``தோனி அந்த இடத்திற்கு வந்தால்தான் சரியாக இருக்கும்"- பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா

இதனைத் தொடர்ந்து BCCI அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தோனி, டேனிஷ் கனேரியா
நேற்று முழுவதும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்த பெயர் சேத்தன் சர்மா. தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் தொடர்பான வீடியோவில் BCCI-ன் தேர்வுக்குழு தலைவரான சேத்தன் சர்மா பேசிய பல விஷயங்கள் சர்ச்சையைக்  கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில் விராட் கோலிக்கும் அப்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கும் இடையே உள்ள பிரச்னை பற்றியும், வீரர்கள் ஊக்க மருந்தைப் பயன்படுத்தி வாய்ப்பைப் பெறுகின்றனர் என்றும் பேசியிருக்கிறார். இவை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து BCCI  அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டேனிஷ்  கனேரியா
டேனிஷ் கனேரியா

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டேனிஷ்  கனேரியா BCCI- ன் தேர்வுக்குழுத் தலைவராக தோனியை நியமிக்கலாம் என கருத்து  தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், `` இப்போது BCCI தலைவர் ரோஜர் பின்னி மற்றும் தலைமை செயலாளர் ஜெய் ஷா இருவரும் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும், புதிய தேர்வுக்குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கும் நேரம் வந்துவிட்டது.

அதனால் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தோனியை BCCI-ன் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கலாம். ஆனால்  BCCI அவரை தேர்ந்தெடுக்காததற்குக் காரணம், தோனி, `தனது பணியில் தலையிடாதீர்கள்!' என்று கூறிவிடுவார். தோனி இல்லை என்றால் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய  அஜித் அகர்கரயோ அல்லது அனைவரையும் நன்றாகக் கையாளக்கூடிய கௌதம் கம்பீரையோ BCCI-யின் தேர்வுக்குழுத' தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.