Published:Updated:

IND vs NZ | நூலிழையில் வெற்றியைப் பறித்த சூரிய ஒளி... கடைசி செஷனில் நடந்தது என்ன?!

IND vs NZ
News
IND vs NZ ( AP )

போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாளில் இருந்தே கடைசி செஷனை முன்னதாவே முடிப்பது இப்போட்டியில் வழக்கமாயிருந்தது. அதுவே இன்று இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலாய் அமைந்தது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கெதிரான கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடைசி நாள், கடைசி செஷன் இந்தியாவின் வெற்றிக்கு தேவை ஒரே விக்கெட் என மிகப் பரபரப்பாக சென்ற இப்போட்டி, இறுதியாக போதிய வெளிச்சமின்மை காரணமாக டிராவில் முடிந்தது.
Tom Latham
Tom Latham
AP

நேற்றைய ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் குவிந்திருந்தது. கடைசி நாளான இன்று நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு தேவை இன்னும் 280 ரன்கள் இருந்ததால் இந்திய ஸ்பின்னர்கள் போட்டியை எப்படியும் முடித்து முடிவார்கள் என்பதே அனைவரின் கணிப்பாகவும் இருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால் முதல் இன்னிங்ஸை போலவே நியூசிலாந்து பேட்டர்கள் இந்திய பந்துவீச்சை மிக நேர்த்தியாக எதிர்கொண்டனர். அதிலும் நேற்று நைட்-வாட்ச்மேனாக களமிறங்கிய சோமர்வில் தன் விக்கெட்டை அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை. முதல் செக்ஷனின் முடிவில் இன்று ஒரு விக்கெட்டை கூட இழந்திருக்கவில்லை நியூசிலாந்து.

Indian team
Indian team
AP

லாதம் - சோமர்வில் கூட்டணியை உடனடியாக பிரித்து, நியூசிலாந்தின் முக்கிய பேட்டர்கள் அனைவரையும் இரண்டாவது செஷனுக்குள் இந்திய பௌலர்கள் வீழ்த்தியாக வேண்டும், இல்லையென்றால் போட்டி நிச்சயம் டிராவை நோக்கி சென்றுவிடும் என்ற நிலை ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் டிரா என்ற பேச்சிற்கே இடமில்லை என்பதுபோல இரண்டாவது செக்ஷனின் முதல் பந்திலேயே சோமர்வில்லின் விக்கெட்டைத் தூக்கினார் உமேஷ் யாதவ். சோமர்வில்லுக்கு எதிராக நீண்ட நேரமாக இந்திய பௌலர்களால் செயல்படுத்தப்பட்ட ஷார்ட் பால் பிளான் டீப்பில் நின்ற கில்லின் அற்புத கேட்சால் சக்சஸானது. புதிய பேட்டர் நியூசிலாந்தின் கேப்டன் வில்லியம்ஸன். அதன்பிறகு சுமார் இருபது ஓவர்களுக்கு இந்திய பௌலர்களால் எதிரணி விக்கெட் ஒன்றை கூட வீழ்த்த முடியவில்லை.

Axar Patel
Axar Patel
AP

இறுதியாக 55-வது ஓவரில் அஷ்வினின் பந்தில் போல்டாகி வெளியேறினார் லாதம். அடுத்த சில ஓவர்களில் டெய்லர் மற்றும் நிக்கோலஸ் ஆகியோர் ஆட்டமிழக்க, போட்டி இந்தியா பக்கம் திரும்பியது. வெற்றிக்கு வில்லியம்ஸன் மட்டும் தடையாய் நிற்க தேநீர் இடைவெளிக்கு முன்பு அவரையும் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் ஜடேஜா.

ஆட்டத்தின் இறுதி செஷன், வெற்றிக்குத் தேவை எதிரணியின் நான்கு விக்கெட்டுகள் என ஆட்டம் தொடங்கியபோது இந்திய அணிக்கு மற்றுமொரு எதிரியாய் உருவெடுத்தது சூரிய ஒளி. போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டியின் முதல் நாளில் இருந்தே கடைசி செஷனை முன்னதாவே முடிப்பது இப்போட்டியில் வழக்கமாயிருந்தது. அதுவே இன்று இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலாய் அமைந்தது.

ஆனால் இந்திய அணி வெற்றிக்காக போராடுவதில் உறுதியாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய பௌலர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாய் இருந்த பிலண்டலை அஷ்வின் போல்ட் செய்ய அடுத்த சில ஓவர்களிலேயே ஜேமிசன் மற்றும் சௌதியின் விக்கெட்டுகளை சாய்த்தார் ஜடேஜா.

இப்போது வெற்றிக்குத் தேவை ஒரு விக்கெட் மட்டுமே. ஆனால் நேரம் ஆக ஆக மைதானத்தில் வெளிச்சம் குறையத்தொடங்கியது. இதனால் அதிக ஓவர்களை வீச செய்ய, ஸ்பின்னர்களை மட்டுமே வீசவைத்து அட்டாக்கிங் மோடில் இருந்தார் கேப்டன் ரஹானே.

Rachin Ravindra saved the match for NZ
Rachin Ravindra saved the match for NZ
AP
ஆனால் இந்திய அணியின் அனைத்து திட்டங்களுக்கு எதிராகவும் ஒற்றை ஆளாய் நின்று போர்செய்தார் ரச்சின் ரவீந்திரா. இறுதி விக்கெட்டை வீழ்த்த இந்தியாவிற்கு கையில் இருந்த ஓவர்கள் 8. ஆனால் அதுவே முழுவதுமாக வீசப்படுமா எனத் தெரியவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு ஓவரின் முடிவிலும் நடுவர்கள் இருவரும் ஸ்டம்ப் அருகே வந்து ஆட்டத்திற்கான போதிய வெளிச்சத்தை சோதனை செய்தனர்.

இதனால் ஆட்டம் எந்த நொடியிலும் நிறுத்தப்படும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் வீசவேண்டிய குறைந்தபட்ச ஓவர்களை வீசியபோதும் இந்திய அணியால் நியூசிலாந்தின் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. கூடுதலாக 15 நிமிடங்கள் வரை விளையாட வாய்ப்பிருந்தும் ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டது. 91 பந்துகளைச் சந்தித்த ரச்சின் ரவீந்திரா 18 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து நியூசிலாந்தை தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றினார். தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதினை வென்றார் ஷ்ரேயாஸ் ஐயர்.