Published:Updated:

2K kids: தோனி... கோலி... ரோஹித்... சச்சின் - கேம்பஸ் கிரிக்கெட் பல்ஸ்!

தோனி
பிரீமியம் ஸ்டோரி
தோனி

- கிறிஸ்டினா ராஜாத்தி

2K kids: தோனி... கோலி... ரோஹித்... சச்சின் - கேம்பஸ் கிரிக்கெட் பல்ஸ்!

- கிறிஸ்டினா ராஜாத்தி

Published:Updated:
தோனி
பிரீமியம் ஸ்டோரி
தோனி

‘உங்க ஃபேவரைட் கிரிக்கெட்டர் யாரு? ஏன்?’னு சென்னை பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கேம்பஸ்ல சில கேங்ஸ்கிட்ட கேட்டோம். போட்டிபோட்டு அவங்க சொன்ன பதில்கள் இங்கே...

2K kids: தோனி... கோலி... ரோஹித்... சச்சின் - கேம்பஸ் கிரிக்கெட் பல்ஸ்!

கேப்டன் கூல்... தோனி!

“எங்களுக்கு கிரிக்கெட்னு சொன்னாலே தோனிதான்’’ - ‘வெறித்தனம் வெறித் தனம்’னு ஆரம்பிச்சாங்க தோனி பக்தர்கள். ‘`ஒரு பிளேயராகவும் சரி, அணியின் கேப்டனாகவும் சரி

10 வருஷத்துக்கும் மேல நம்ம இந்திய அணியை அவரோட ஸ்டைல்லயே கொண்டு போனாரு. ஐ.பி.எல்-ல சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கேப்டனா இருக்கறதால அவருக்கும் நமக்கும் ரொம்ப நெருக்கமான தொடர்பு இருக்குற மாதிரி தோணும். இக்கட்டான நிலையில கண்ணுலயும் முகத்துலயும் எந்தப் பதற்றத்தையும் காட் டாம, ரொம்ப கூலா சமாளிப்பாரு. ‘ஒரு சிறந்த தலைவன் என்பவன், தான் இல்லாத போதும் தன் கூட்டம் சரியான பாதையில் செல்ல வழிவகுக்க வேண்டும்’னு ஒரு பழமொழி இருக்கு. இதற்கு மிகச் சரியான உதாரணம் தோனி. `தோனி ஃபினிஷஸ் ஆஃப் இன் ஸ்டைல்... இந்தியா லிஃப்ட்ஸ் தி வேர்ல்டு கப் ஆஃப்டர் 28 இயர்ஸ்...’னு ரவிசாஸ்திரி சொன்ன கமென்ட்ரி... காதுல ஒலிச்சுகிட்டே இருக்கும். உங்களையும் உங்க ஹெலிகாப்டர் ஷாட்டையும் ரொம்ப மிஸ் பண்றோம் கேப்டன் கூல்!”

2K kids: தோனி... கோலி... ரோஹித்... சச்சின் - கேம்பஸ் கிரிக்கெட் பல்ஸ்!

ரன் மெஷின்... விராட் கோலி!

`` ‘கண்ணுல திமிரு’னு பாட்டுப் போட்டுக்கிட்டே ஒரு குரூப் வந்தாங்க. அவங்க வந்த வேகத்துலயே தெரிஞ்சிடுச்சு, கோலியோட ஃபேன்ஸ்னு. “இவரை உலகமே ‘ரன் மெஷின்’னு சொல்லுது. இவரை எல்லாரும் அடுத்த சச்சின்னு சொல் வாங்க. ஆனா, எங்களுக்கு இவருதான் ‘முதல் கோலி’. கிரிக்கெட் ஆடணும்னு வெறியோட இருக்குறவங்களப் பார்த்திருப்போம். ஆனா, வெறியோட கிரிக்கெட் ஆடலாம்னு எங்களுக்குக் காட்டினது கோலிதான். கப் இல்லைன்னா என்ன... உங்களுக்கு நாங்க இருக்கோம் புரோ!’’

2K kids: தோனி... கோலி... ரோஹித்... சச்சின் - கேம்பஸ் கிரிக்கெட் பல்ஸ்!

ஹிட்மேன்... ரோஹித் ஷர்மா!

“‘புல் ஷாட்’னு சொன்னாலே ஹிட் மேன் ரோஹித் ஷர்மாதான் ஞாபகத்துக்கு வருவார்’’னு ஆரம்பிச்சாங்க அடுத்த கேங். ‘`வாழ்க்கைல எல்லாருக்கும் ஒரு கோல்டன் வாய்ப்பு கிடைக்கும், அதைச் சரியா பயன்படுத்திக்கிட்டா வாழ்க்கையே வேற லெவல்தான்னு சொல்லுவாங்க. அதுக்கு நாங்க பார்த்த உதாரணம், ரோஹித்தான். பவுலரா உள்ள வந்தாரு, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனா ரோல் மாத்திவிட்டாங்க, கடைசியில ஓப்பனிங் பேட்ஸ் மேனா ஆகிட்டார். இப்படி, கிடைச்ச ஒவ்வொரு வாய்ப்பையும் பயன் படுத்தி இன்னிக்கு பெஸ்ட் ஓப்பனிங் பேட்ஸ் மேனா இருக்காருனு நாங்க சொல்றதைவிட அவரோட ரெக்கார்ட்ஸே சொல்லும். அதிக ஐ.பி.எல் கோப்பை ஜெயிச்ச கேப்டன்னு தலைமைப் பண்பி லும் அவரோட தடத்தைப் பதிச்சிருக்காரு!”

2K kids: தோனி... கோலி... ரோஹித்... சச்சின் - கேம்பஸ் கிரிக்கெட் பல்ஸ்!

ஆல்ரவுண்டர்... ரவீந்திர ஜடேஜா!

பல குரூப்ஸும் தங்களோட ஃபேவரைட் கிரிக்கெட்டர்ஸ் பத்தி பேசும்போது அமைதியா இருந்த அந்த ஒரு குரூப், தங்களோட டர்ன் வந்ததும் துள்ளிக் குதிச்சிட்டு வந்தாங்க. ‘`பேட்டிங், பௌலிங் மட்டுமல்ல... ஃபீல்டிங்கும் ஒரு அணியோட வெற்றிக்கு முக்கியம்னு நிறைய முறை நிரூபிச்சிருக்கிறவர் எங்க ஜட்டூ. ஆல்ரவுண்டரா உள்ளே வந்து, அவருக்குனு டீம்ல இடம் பிடிச்சு, இன்னிக்கு அவரு இல்லாத டீமே இல்லைங்கிற எண்ணத்தை உருவாக்கி, யுவராஜ் சிங் இல்லைங்கிற ஏக்கத்தையும் போக்கிட்டாரு. ‘அவரு ஒரு துண்டு துக்கடா பிளேயர்'னு வந்த விமர்சனத்தையெல்லாம், ‘வாள் தூக்கி நின்னான் பாரு... வந்து சண்டபோட்ட எவனுமில்ல’னு அடிச்சு நொறுக்கினவரு எங்க ஜட்டூ!”

2K kids: தோனி... கோலி... ரோஹித்... சச்சின் - கேம்பஸ் கிரிக்கெட் பல்ஸ்!

செம ஸ்டைலிஷ்... ஜஸ்ப்ரித் பும்ரா!

“ஸ்டைலிஷ் கிரிக்கெட்டர் யார்னு கேட்டா, பலரும் பேட்ஸ்மேன்களைத்தான் சொல்லுவாங்க. ஆனா, எங்களைக் கேட்டா பும்ராவைதான் சொல்லுவோம்’’ - அவரோட பௌலிங் ஸ்டைலை செஞ்சு காட்டிக்கிட்டே சொன்னது பும்ரா படை. ‘`பெரும்பாலும் ஸ்பின் பௌலர்ஸையே கொண்டு களம் இறங்கின இந்திய அணிக்கு வரப்பிரசாதமா வந்தாரு பும்ரா. கபில் தேவ், ஜஹீர்கான் மாதிரி மிரட்டிவிடுற பௌலர்ஸ் இனி இந்திய அணிக்குக் கிடைக்கிறது சந்தேகம்னு நம்ம அப்பா, அம்மாக்கள் எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம். ஆனா, 2019-ம் உலகக் கோப்பையில பும்ரா வீசிய யார்க்கர் பந்தைப் பாத்தப்போ 70’ஸ், 80’ஸ் கிட்ஸுக்கும் அவர் ஃபேவரைட் ஆகிட்டாரு!”

2K kids: தோனி... கோலி... ரோஹித்... சச்சின் - கேம்பஸ் கிரிக்கெட் பல்ஸ்!

ரெக்கார்டு மேன்... சச்சின் டெண்டுல்கர்!

“இன்னிக்கு நிறைய பேரு நிறைய பழைய ரெக்கார்ட்ஸை உடைச்சு புதுசா பல ரெக்கார்ட்ஸ் பண்ணிட்டு வர்றாங்க. புது ரெக்கார்ட்ஸ் பண்றது என்னவோ வெவ்வேறு நாட்டுல இருந்து வெவ்வேறு பிளேயர்ஸா இருக்கலாம். ஆனா, அவங்க உடைக்கிற எல்லா ரெக்கார்ட்ஸும் இவரு ஒருத்தரோடது தான்; அது எங்க சச்சின்தான்” - பன்ச் டயலாக்கோட ஆரம்பிச்சாங்க, 90'ஸ் கிட்ஸ் ரத்தம் ஓடும் 2கே கிட்ஸ் சிலர். “சச்சினோட ஆட்டத்துக்கு இருக்குற ஈர்ப்பு சக்தி காந்தத் துக்கே இருக்குமான்னு தெரியலை. கிரிக்கெட் ஒரு மதம்னு சொன்னா, அதுக்கு சச்சின்தான் கடவுள்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism