Published:Updated:

``தோனியின் அந்த ரன் அவுட், இன்னும் ரணமா இருக்குல்ல!'' - திரும்ப வா தல... விசில் போடுவோம்! #HBDDhoni

தோனி

காலி மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றாலும் சூப்பர் கிங்ஸ் அணி ஜெயிக்கிறதோ இல்லையோ, டிவி வழியாகத் தல தோனியின் ஒவ்வொரு இன்ச் அசைவுகளுக்கும் ஆரவாரம் செய்ய ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது யெல்லோ ஆர்மி.

``தோனியின் அந்த ரன் அவுட், இன்னும் ரணமா இருக்குல்ல!'' - திரும்ப வா தல... விசில் போடுவோம்! #HBDDhoni

காலி மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றாலும் சூப்பர் கிங்ஸ் அணி ஜெயிக்கிறதோ இல்லையோ, டிவி வழியாகத் தல தோனியின் ஒவ்வொரு இன்ச் அசைவுகளுக்கும் ஆரவாரம் செய்ய ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது யெல்லோ ஆர்மி.

Published:Updated:
தோனி
“போன வருஷம் வேர்ல்ட் கப் செமி ஃபைனல்ல தோனி ரன் அவுட் ஆகி தலையை ஆட்டிக்கிட்டே பெவிலியன் போவாருல்ல... அப்போ டிவியை ஆஃப் பண்ணதுதான். அதுக்கு அப்புறம் எந்த ஒரு கிரிக்கெட் மேட்சையும் பாக்கல” - கடந்த ஒரு வருடத்தில் மட்டும் எத்தனையோ பேர் இப்படி நேரடியாகவோ, சமூக வலைதளங்களிலோ சொல்ல கேட்டிருப்போம்.

இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா என்றால், தோனி கீப்பிங் கிளவுஸ் மாட்டிக்கொண்டு ஆடுகளத்தில் இறங்காமல் இருப்பது எப்படிப்பட்ட பெருந்துயரம் என்று தோனி ரசிகனிடம் கேட்டால் கதைகதையாய் சொல்லுவான்.

MS Dhoni and Yuvraj Singh in 2011 WC
MS Dhoni and Yuvraj Singh in 2011 WC
Twitter / ChennaiIPL

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஸ்ட்ரைக்ல இருக்குறது தல டா. மேட்ச் நமக்குத்தான்” - கடைசி ஓவரில் 30 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தாலும் தோனி ரசிகனின் கான்ஃபிடன்ஸ் லெவல் இதுதான். 2011 உலகக்கோப்பை வெற்றிக்குப் பின்னர், சுமார் 24 ஆண்டுகளாக ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் கனவுகளையும் சுமந்த சச்சின் டெண்டுல்கரை மொத்த அணியினரும் தங்களின் தோள்களில் தாங்கி வான்கடேவை சுற்றுவர். அதே போல 2019 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா ஜெயித்து மகேந்திர சிங் தோனியை மொத்த இந்திய அணியினரும் தோளில் சுமந்து லார்ட்ஸ் மைதானத்தைச் சுற்றுவார்கள் எனப் பல கனவுகளோடு இருந்தவர்களின் கனவு காலியானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாட்டுக்காக உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பதைத்தாண்டி தோனி விளையாடும் இந்தக் கடைசி உலக கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்று எவ்வளவு உழைத்திருப்பர் கோலி & கோ. இத்தனை கனவுகள் அடங்கிய 130 கோடி பேரின் மொத்த கனவையும் யாருமே எதிர்பார்க்காத அந்த ஒற்றை ரன் அவுட் சுக்கு நூறாக்கியது.

தோனி ரன் அவுட்
தோனி ரன் அவுட்
“நான் அன்று டைவ் செய்திருக்க வேண்டும்” என்று தோனியே அந்த ரன் அவுட்டுக்கு ஃபீல் செய்ய, இதுவும் கடந்துபோகும், அடுத்து ஒரு மேட்சில் தோனி இறங்குவதைப் பார்த்தால் மொத்த துக்கமும் பறந்துபோகும் என ஒவ்வொரு தோனி ரசிகனும் காத்திருந்தான்.

ஆனால், நடந்ததோ வேறு. ஆம், அதன்பிறகு நடந்த எந்த ஒரு போட்டியிலும் தோனி விளையாடவில்லை. அந்த ரன் அவுட்டையும் மறக்க முடியாமல், தோனி இல்லாத டீமையும் ஏற்க இயலாமல் சென்று வருடம் தோனி ரசிகர்களுக்கு மறக்க வேண்டிய ஆண்டாக அமைந்தது. எந்த நேரத்திலும் தோனி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம் என்ற பயம் ஒருபக்கம் இருக்க, அப்படி எதுவும் நடப்பதற்குள் ஒரு போட்டியிலாவது தோனி சேர்க்கப்பட வேண்டும் என்று பிசிசிஐ மீதான கோபம் ஒருபுறம் இருக்க, தோனியை மிஸ் செய்த அவரது அத்தனை ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருத்த ஒன்றே ஒன்று ஐபிஎல் 2020.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தோனி என்ற பேரரசன் சென்னை சூப்பர் கிங்ஸை ஆட்சி செய்யும் காலத்தில் யெல்லோ ஆர்மியின் உறுப்பினராக இருப்பதற்கு நாமெல்லாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதே சிஎஸ்கே பேன்ஸின் அசைக்க முடியாத எமோஷனல் ஃபீல். என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே-வுக்கு நிகராக, சரி எக்ஸ்ட்ராவாக ஒரு கப் அடித்திருந்தாலும், சிஎஸ்கே என்ற சொல்லை கேட்டவுடன் ஏற்படும் ஓர் உணர்வை எந்த ஐபிஎல் அணியின் ரசிகனாலும் நிச்சயம் உணர முடியாது. 12 ஆண்டுகளாக ஒரே கேப்டனின் கீழ் விளையாடினால் அந்த டீம் எந்த அளவுக்கு செதுக்கப்பட்டிருக்கும், அந்த அணியினருக்குள்ளான புரிதல் எப்படிப்பட்டதாக இருக்கும்?

சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் இந்திய சிமென்ட்ஸ் சீனிவாசனிடம் தோனிபற்றி கேள்வி கேட்கப்பட்டது. ''இந்த ஆண்டு அல்ல, 2021-லும் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் தோனிதான்'' என்று விமர்சகர்களின் வாயை அடைத்தார் சீனிவாசன்.
MS Dhoni
MS Dhoni
iplt20.com

ஏப்ரல் மாதத்தைக் காலண்டரில் குறித்து வைத்துக்கொண்டு தல தரிசனத்துக்காகக் காத்துக்கிடந்தான் ஒவ்வொரு சென்னை அணி ரசிகனும். போதாக்குறைக்கு இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்கு எப்போதுமே பூட்டியிருக்கும் அந்த மூன்று மஞ்சள் கேலரிகளும் திறக்கப்படும் என்ற அறிவிப்பைக் கேட்டு யெல்லோ ஆர்மியின் கடைக்குட்டி மெம்பரும் குஷியானான். ஏனென்றால் சாதாரண ப்ராக்டீஸ் ஆட்டத்துக்கு ஸ்டேடியத்தை நிறைக்கும் அன்புக்கூட்டம் இது.

ஆனால், நாம் ஒன்று நினைக்க, கொரோனா ஒன்று நினைத்து மொத்த நாட்டையே வீட்டில் உட்கார வைத்ததால் தோனியைக் களத்தில் காண ரசிகர்களுக்கு இன்னும் சிறிது காலம் பொறுமை தேவைப்படுகிறது. சாக்ஷியின் இன்ஸ்டா பக்கத்தில் மகள் ஸிவாவுடன் தனது பைக்கில் பறப்பது போலவும், பந்தை தூக்கிப்போட்டு விளையாடுவது போலவும் தோனியின் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகின. அதில் வெள்ளை தாடியுடன் காட்சியளித்த தோனியைக் கண்டவுடன் கோடானுக்கோடி ரசிகர்களுக்கு தங்களின் ஆஸ்தான சூப்பர் ஹீரோவுக்கு வயது ஆகிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆம், நாற்பதை நெருங்கிவிட்டார் தோனி!

Chennai Super Kings | Dhoni
Chennai Super Kings | Dhoni

இங்கு தோனியின் ரசிகனும் சிஎஸ்கேவின் ரசிகனும் வெவ்வேறல்ல. இரண்டும் ஒன்றோடு ஒன்று ஊறிப்போன பந்தம். அதை யாராலும் பிரிக்க முடியாது. யாருக்குத் தெரியும் இன்னும் உறுதி செய்யப்படாத இந்த வருட ஐபிஎல் கேப்டன் தோனிக்கு கடைசித் தொடராகக்கூட இருக்கலாம். அப்படி ஒருவேளை ரசிகர்கள் யாரும் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றால் சூப்பர் கிங்ஸ் அணி ஜெயிக்கிறதோ இல்லையோ, டிவி வழியாகத் தல தோனியின் ஒவ்வொரு இன்ச் அசைவுகளுக்கும் ஆரவாரம் செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது யெல்லோ ஆர்மி.

பிறந்தாள் வாழ்த்துகள் தல தோனி. திரும்ப வா... விசில் போடுவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism