Published:Updated:

RCB: விராட் கோலி, நன்றாகத்தான் விளையாடினார், ஆனாலும்... - தோல்வி குறித்து பேசிய டூ ப்ளெஸ்ஸி!

டூ ப்ளெஸ்ஸி

குஜராத்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பெங்களூர் அணியின் தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் டூ ப்ளெஸ்ஸி பேசியிருக்கிறார்.

Published:Updated:

RCB: விராட் கோலி, நன்றாகத்தான் விளையாடினார், ஆனாலும்... - தோல்வி குறித்து பேசிய டூ ப்ளெஸ்ஸி!

குஜராத்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பெங்களூர் அணியின் தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் டூ ப்ளெஸ்ஸி பேசியிருக்கிறார்.

டூ ப்ளெஸ்ஸி
நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் டூ ப்ளெஸ்ஸி தலைமையிலான பெங்களூர் அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொண்டது. 

இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி பெங்களூர் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. இதனால் பெங்களூர் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியுள்ளது. இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பெங்களூர் அணியின் தோல்வி குறித்து அணியின் கேப்டன் டூ ப்ளெஸ்ஸி பேசியிருக்கிறார்.

RCB
RCB

தோல்வி குறித்து பேசிய டூ ப்ளெஸ்ஸி, “ இது ஒரு ஏமாற்றமான தோல்விதான். விராட் கோலி நம்பமுடியாத வகையில் ஒரு அபாரமான சதத்தை அடித்திருந்தார். அதுதான் போட்டியில் எங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. விராட் இந்த சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். கில்லின் விக்கெட்டை நாங்கள் எடுத்திருக்க வேண்டும். போட்டிகளை வெற்றிகரமாக முடிப்பதில் நாங்கள் இன்னும் மேம்பட வேண்டும். 

நானும் விராட் கோலியும் 40 ரன்களுக்கும் குறைவான பார்ட்னர்ஷிப் அமைத்த போட்டியை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் டெத் ஓவர்களில் நாங்கள் சரியாகச் செயல்படவில்லை. கடந்த சீசனில் தினேஷ் கார்த்திக் நல்ல ஃபார்மிலிருந்து திறம்பட அந்தப் பணியைச் செய்திருந்தார். ஆனால், இந்த சீசனில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. வெற்றிகரமாக இருக்கும் அணிகளில் எல்லாம் நம்பர் 5,6,7 இல் பெரிய ஷாட்கள் ஆடக்கூடிய ஹிட்டர்கள் அதிகமாக இருப்பதை கவனிக்க முடிகிறது. எங்களுக்கு அந்த இடம் தொடர் முழுவதும் சரியாக அமையவில்லை" என டூப்ளெஸ்ஸி பேசியிருந்தார்.