Published:Updated:

`நிறைய கிரிக்கெட் ஆடினால் தேர்வாளர் ஆகலாம்... கோச் அப்படியிருக்க வேண்டியதில்லை!’ - கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத அல்லது போதுமான கிரிக்கெட் விளையாடாத ஒருவர் வெற்றிகரமான பயிற்சியாளராக முடியாது என்பதில் உண்மை இல்லை.

சர்வதேசப் போட்டிகளில் விளையாடியது மட்டுமே பயிற்சியாளர்களுக்கான தகுதி கிடையாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். ``டி-20 போட்டிகளுக்கு நிறைய பேட்டிங் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். இது ஒரு வகையான கிரிக்கெட்தான். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத அல்லது போதுமான கிரிக்கெட் விளையாடாத ஒருவர் வெற்றிகரமான பயிற்சியாளராக முடியாது என்பதில் உண்மை இல்லை.

கிரிக்கெட்
கிரிக்கெட்

டி-20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் ஒரு பேட்டிங் பயிற்சியாளர் என்பவர் எவ்வளவு பெரிய இலக்கையும் எட்டிப்பிடிக்க உங்களை மனதளவில் தயார் செய்வதே அவரது தலையாய பணியாக உள்ளது.இந்த ஷாட்டை இப்படி ஆட வேண்டும் இந்தப்பந்தை இப்படி ஆட வேண்டும் என யாரும் உங்களுக்குச் சொல்லித் தர மாட்டார்கள். எந்தப் பயிற்சியாளர்களும் அதைச் செய்ய மாட்டார்கள்.

யாராவது ஒரு வீரரிடம் அதைச் செய்ய முயற்சி செய்கிறார்கள் என்றால் உண்மையில் அவரை ஒரு சிறந்த வீரராக்குவதை விடவும் அவருக்கும் தீங்குதான் விளைவிக்கிறார். நீங்கள் ஒரு வெற்றிகரமான பயிற்சியாளராக இருப்பதற்கு நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது முக்கியமல்ல. ஒருவேளை அது தேர்வாளர்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். பயிற்சியாளர்களுக்கு அல்ல” என கம்பீர் தெரிவித்துள்ளார்.

கம்பீர்
கம்பீர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பந்துவீச்சாளர்கள் பந்தை ஷைன் செய்வதற்கு எச்சிலைப் பயன்படுத்த தடை விதிக்க ஐசிசியின் ஆலோசனைக் குழு பரிந்துரைந்துள்ளது. இப்படி செய்தால் பந்துவீச்சின் சுவாரஸ்யம் குறைந்துவிடும். இது ரசிகர்களுக்குக் கொண்டாட்டத்தைக் கொடுக்காது. எனவே இதற்கான மாற்று ஏற்பாட்டை ஐசிசி பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு