Published:Updated:

"இனி ஆண், பெண் இருவருக்கும் சம ஊதியம்!"- நியூசிலாந்து கிரிக்கெட்டின் அதிரடி ஒப்பந்தம்

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி

நியூசிலாந்தில் ஆண், பெண் கிரிக்கெட் வீரர்கள் ஐந்தாண்டுக் கால சம ஊதியம் பெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

"இனி ஆண், பெண் இருவருக்கும் சம ஊதியம்!"- நியூசிலாந்து கிரிக்கெட்டின் அதிரடி ஒப்பந்தம்

நியூசிலாந்தில் ஆண், பெண் கிரிக்கெட் வீரர்கள் ஐந்தாண்டுக் கால சம ஊதியம் பெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Published:Updated:
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி

இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் கோலோச்சி வரும் நிலையில் ஆங்காங்கே சில ஏற்றத்தாழ்வுகளும் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் கூட நடிகை டாப்ஸி திரைத்துறையில் ஆண், பெண்களுக்கு இடையே ஊதிய வேறுபாடு உள்ளது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் ஆண், பெண் வேறுபாட்டைக் களையும் விதமாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி நியூசிலாந்தில் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள் ஐந்தாண்டுக் கால சம ஊதியம் பெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அதன்படி, ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு போட்டிக்காக வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராக இனி பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் விளையாட்டு ரீதியிலாக ஒரே ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்படுவது உலக கிரிக்கெட் அரங்கில் இதுவே முதன் முறை.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்

"ஆண்களுக்கு இணையாக, சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பெண் வீராங்கனைகள் ஒரே ஒப்பந்தத்தில் அங்கீகாரம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு பெரிய முன்னேற்றம்" என்று நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் சோஃபி டிவைன் கூறியிருக்கிறார்.

நியூசிலாந்து கிரிக்கெட் (NZC) தலைமை நிர்வாகி டேவிட் வைட், "இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க உடன்பாட்டை எட்டியதற்காக வீரர்களுக்கும் முக்கிய சங்கங்களுக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்கள் விளையாட்டில் மிக முக்கியமான ஒப்பந்தம். பெண்கள் கிரிக்கெட் தொடர்ந்து வளர்ந்து வருவதால், இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது" என்றார்.

இந்தப் புதிய மாற்றத்தால் உள்நாட்டுப் பெண் வீராங்கனைகளின் ஒப்பந்த எண்ணிக்கை 54ல் இருந்து 72 ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!