Published:Updated:

சுற்றிவளைத்த ஆஸ்திரேலியா; போராடி டிரா செய்த டெய்ல் எண்டர்கள்; ஒயிட்வாஷைத் தவிர்த்த இங்கிலாந்து!

Anderson and Broad
News
Anderson and Broad ( England Cricket )

இந்த ஆஷஸ் தொடர் முழுக்கவுமே ஆஸ்திரேலியா மட்டுமே ஆதிக்கம் செலுத்தியது. இங்கிலாந்து நினைத்தை போல ஒரு செஷன் ஆட்டம் கூட நகர்ந்திருக்கவில்லை. ஆனால், இந்த போட்டி கொஞ்சம் வேறாக அமைந்திருந்தது.

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் டெரரான பௌலிங்கைப் போராடி சமாளித்து இங்கிலாந்து அணி போட்டியை டிரா செய்திருக்கிறது.

முதல் 3 போட்டிகளையும் தோற்றிருந்த நிலையில், இங்கிலாந்து இந்தத் தொடரில் ஒயிட்வாஷ் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த டிராவின் மூலம் இங்கிலாந்து ஒயிட்வாஷை தவிர்த்து கொஞ்சமேனும் கௌரவத்தைக் காப்பாற்றியிருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு டார்கெட் 388. நேற்றைய நாள் முடிவில் 30-0 என்ற நிலையில் இருந்தது. கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 358 ரன்களும் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும் தேவைப்பட்டது. இங்கிலாந்து தற்போது இருக்கும் நிலையில் வெற்றியை பற்றியெல்லாம் யோசிப்பதற்கு வாய்ப்பே இருந்திருக்கவில்லை. அதிகபட்சமாக டிராவை மட்டுமே குறிவைத்திருப்பார்கள். இதனாலயே ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிந்தது. ஆனால், தட்டுத்தடுமாறி போராடி ஒரு விக்கெட் மட்டும் எஞ்சியிருந்த நிலையில் போட்டியை டிரா செய்துவிட்டது.

ஓப்பனர்களில் ஒருவரான ஹசீப் ஹமீது சொதப்பினாலும் இன்னொரு ஓப்பனரான சக் க்ராலி நின்று அரைசதம் அடித்தார். இங்கிலாந்து ஓப்பனர் ஒருவர் சூழலை புரிந்துக் கொண்டு பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்ததே எதோ அதிசயம் நிகழப்போவதற்கான அறிகுறியாக தோன்றியது. ஆனால், முக்கியமான முதுகெலும்பு பேட்ஸ்மேன்களான மலானும் ஜோ ரூட்டும் இந்த முறை சொதப்பினர். மலான் 4 ரன்னில் லயனின் பந்தில் ஆட்டமிழக்க, ஜோ ரூட் 24 ரன்களில் போலண்ட்டின் பந்தில் அவுட் ஆனார். போலண்ட் மொத்தமாகவே 4 இன்னிங்ஸில்தான் பந்தே வீசியிருக்கிறார். இந்த 4 இன்னிங்ஸ்களில் மூன்று முறை ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்திவிட்டார். குட்லெந்தில் தொடர்ச்சியாக 4 மற்றும் 5 வது ஸ்டம்ப் லைனில் வீசி செட் செய்து ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தினார்.

டாப் ஆர்டர் மொத்தமும் காலியானவுடம் பொறுப்பு மொத்தம் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்ட்டோவின் மீது விழுந்தது. முதல் இன்னிங்ஸிலும் இப்படியான இக்கட்டான சூழலே நிலவியது. அந்த சமயத்தில் இருவருமே ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சிற்கு கவுண்டர் அட்டாக் கொடுத்து ஸ்கோரை வேகமாக உயர்த்தியிருந்தனர். ஸ்டோக்ஸ் அரைசதமும் பேர்ஸ்ட்டோ சதமும் அடித்திருந்தனர். இந்த இன்னிங்ஸ்கள்தான் இங்கிலாந்தின் மோசமான தோல்வியை தவிர்த்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Stokes
Stokes
England Cricket

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த இரண்டாம் இன்னிங்ஸிலும் டாப் ஆர்டர் மொத்தமும் காலியான பிறகு ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆடிய ஆட்டமே இங்கிலாந்தை காப்பாற்றியிருந்தது.

ஸ்டோக்ஸ் 123 பந்துகளையும் பேர்ஸ்ட்டோ 105 பந்துகளையும் எதிர்கொண்டிருந்தனர். இந்த 228 பந்துகள் அதாவது 38 ஓவர்கள் இதுதான் இங்கிலாந்திற்கி டிரா செய்வதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது.

ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருமே அவுட் ஆன பிறகுதான் உண்மையான பரபரப்பு தொற்றிக்கொள்ள தொடங்கியது. கடைசி 10.4 ஓவர்களை லீச், ப்ராட், ஆண்டர்சன் ஆகிய டெய்ல் எண்டர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. மூவரும் கீழ்வரிசை பேட்ஸ்மேன்களாக இருந்தாலும் மூவருமே இதேபோன்ற சூழல்களில் ஏற்கனவே ஆடிய அனுபவமுடையவர்கள் என்பதால் இவர்கள் மீது சிறு நம்பிக்கை இருந்தது. பந்தை சகட்டுமேனிக்கு ஸ்விங் செய்து கொண்டிருந்த பேட் கம்மின்ஸையும் புயல் வேகத்தில் வந்த ஸ்டார்க்கையும் இவர்கள் நன்றாகவே டிஃபன்ஸ் செய்திருந்தனர். கடைசி சில ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. இந்நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் வேகப்பந்து வீச்சை அம்பயர்கள் தவிர்க்குமாறு தெரிவித்தனர். இதனால் கடைசி சில ஓவர்களை ஸ்மித்தும் நேதன் லயனும் வீசினர். கம்மின்ஸையும் ஸ்டார்க்கையும் எதிர்கொள்வதற்கு ஸ்மித்தை எதிர்கொள்வது சௌகரியமான விஷயமே என தோன்றினாலும், ஸ்மித் இங்கே தனக்குள் புதைந்து கிடைக்கும் சுழல் சூறாவளியை வெளிக்கொணர்ந்து லீச்சை எட்ஜ் ஆக்கி ஸ்லிப்பில் கேட்ச் ஆக வைத்தார்.

England
England
Fox Cricket
இப்போது கடைசி 2 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்தது. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஒரே ஒரு விக்கெட் மட்டுமே தேவை. ஆண்டர்சனும் ப்ராடும் க்ரீஸில் நின்றனர். அவர்களுக்கு இந்த 2 ஓவரிலும் எப்படியும் சர்வைவ் ஆகினால் போதும்.

ஃபீல்டர்கள் எல்லாம் உள் வட்டத்திற்குள் பேட்ஸ்மேனை சுற்றி வட்டமடித்து நின்றனர். போட்டி உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது. ஸ்டோக்ஸ் தனது டீ சர்ட்டை இழுத்து முகத்தை மூடிக்கொண்டார். ஏறக்குறைய போட்டியை பார்த்த அனைவருக்குமே இதே உணர்வுதான் மோலோங்கியது. லயன் கடைசிக்கு முந்தைய ஓவரை வீசிவிட்டு செல்ல, ஸ்மித் கடைசி ஓவரை வீசினார். ஆண்டர்சன் ஸ்ட்ரைக்கில் இருந்தார். ஸ்மித் நன்றாக தூக்கி வீசி ஆண்டர்சனை எட்ஜ் ஆக்க முயல அனுபவ வீரரான ஆண்டர்சன் இந்த 6 பந்துகளையும் நன்றாகவே டிஃபண்ட் செய்து முடித்தார். பரபரப்பாக சென்ற போட்டி ஒரு வழியாக டிராவில் முடிந்தது. இங்கிலாந்து தோல்வியை தவிர்த்து ஒயிட் வாஷையும் தவிர்த்தது.

பரபரப்பாக சென்ற போட்டி ஒரு வழியாக டிராவில் முடிந்தது. இங்கிலாந்து தோல்வியை தவிர்த்து ஒயிட் வாஷையும் தவிர்த்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Australia
Australia
Cricket Australia

இந்த ஆஷஸ் தொடர் முழுக்கவுமே ஆஸ்திரேலியா மட்டுமே ஆதிக்கம் செலுத்தியது. இங்கிலாந்து நினைத்தை போல ஒரு செஷன் ஆட்டம்கூட நகர்ந்திருக்கவில்லை. ஆனால், இந்த போட்டி கொஞ்சம் வேறாக அமைந்திருந்தது. இத்தனை நாள் அடிவாங்கிக் கொண்டிருந்த இங்கிலாந்து கொஞ்சமேனும் திருப்பி அடிக்க முயன்றது. முதல் இன்னிங்ஸில் ஸ்டோக்ஸும் பேர்ஸ்ட்டோவும் ஆடிய ஆட்டம் ஆஸ்திரேலியாவை கொஞ்சம் கலக்கமடையவே செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை எட்டிய பிறகும் கம்மின்ஸ் டிக்ளேர் செய்யாமல் கொஞ்சம் தாமதப்படுத்தியதற்கு ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் கொடுத்த அடியே காரணம். அதேமாதிரி, கடைசியாக ஐந்தாவது நாளான இன்றும் தடுமாறினாலும் எப்படியோ போராடி ஆட்டத்தை டிரா செய்துவிட்டார்கள். பாசிட்டிவ்வாக ஒரு விஷயமும் நிகழாமல் இருந்த இங்கிலாந்துக்கு இந்த டிரா ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். இதை வைத்துக் கொண்டு கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்