டாஸை வென்றால் மேட்சை வெல்லலாம் என்கிற அகமதாபாத் பனிப்பொழிவு கொள்கைப்படி டாஸை வென்ற இங்கிலாந்து மேட்ச்சை வென்றிருக்கிறது. உலகின் நம்பர் ஒன் டி20 அணியான இங்கிலாந்தும், உலகின் நம்பர் 2 அணியான இந்தியாவும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இன்று முதல் டி20 போட்டியில் மோதின.
டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸ் ஆடும்போது பனிப்பொழிவு பேட்டிங்கிற்கு கைகொடுக்கும் என்பதால்தான் இந்த முடிவை எடுத்தார் கேப்டன் இயான் மோர்கன். இங்கிலாந்து டி20 போட்டிகளுக்காகவே பக்கா பேக்கேஜிங்கில் தயாரிக்கப்பட்ட ஒரு ப்ளேயிங் லெவனோடு களமிறங்கியது. ஜேஸன் ராய், ஜாஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, இயான் மார்கன், பென் ஸ்டோக்ஸ், சாம் கரண் என எல்லோருமே அதிரடியான ஆட்டக்காரர்கள். இவர்களுக்கு அடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டன், ஆதில் ரஷீத், மார்க் வுட் என இங்கிலாந்தின் ப்ளேயிங் லெவன் பட்டியலே பயம் தந்தது.
மாறாக இந்திய கேப்டன் கோலி அணியில் சில பரிட்சார்த்த முயற்சிகள் செய்திருந்தார். ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதில் தவானும், கேஎல் ராகுலும் ஒப்பனிங் இறங்கினார்கள். ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை கோலி களமிறக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு பொய்யானது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஷ்ரேயாஸே களமிறக்கப்பட்டார். ஃபுல் ஃபார்மில் இருந்த ரிஷப் பன்ட்தான் கீப்பர். இவருக்கு அடுத்து ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் பட்டேல், புவனேஷ்வர் குமார், யுவேந்திர சஹால் என ஆல்ரவுண்டர் ப்ளஸ் பெளலர்களோடு களமிறங்கியது இந்தியா.

ஆர்ச்சரின் முதல் ஓவரிலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராகுல் 1 ரன்னில் அவுட் ஆக, அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆனார். நான்காவது டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்ஸில் டக் அவுட் ஆன கோலி, தொடர்ந்து தனது இரண்டாவது சர்வதேச இன்னிங்ஸில் டக் அவுட் ஆகிறார். 5-வது ஓவரில் தவானும் காலி. டி20 வரலாற்றில் இந்தியாவின் இரண்டாவது குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோராக 22 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது இந்தியா.
ஷ்ரேயாஸ் எனும் ஒற்றை பேட்ஸ்மேன் இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார். 48 பந்துகளில் 67 ரன்களை ஷ்ரேயாஸ் அடிக்க, பன்ட் 21, பாண்டியா 19 என மற்ற இரண்டு பேட்ஸ்மேன்களின் டபுள் டிஜிட் ஸ்கோரால் தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 124 ரன்களை எடுத்தது இந்தியா.
பனிப்பொழிவு, மிகக்குறைவான டார்கெட் என எல்லாமே இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்க, இந்திய பெளலர்களை அடித்து வெளுப்பது என்கிற முடிவோடு களமிறங்கியது ராய் - பட்லர் கூட்டணி. ராய் வழக்கம்போல அதிரடி ஆட்டம் ஆட, பட்லர் கொஞ்சம் பக்குவ ஆட்டம் ஆட, பவர் ப்ளே ஓவர்களுக்குள் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் அடித்துவிட்டது இங்கிலாந்து.

28 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த பட்லரை வீழ்த்தினார் சஹால். அடுத்து 32 பந்துகளில் 49 ரன்கள் அடித்தநிலையில் ஜேசன் ராய் அவுட் ஆனபோது இங்கிலாந்தின் ஸ்கோர் 11 ஒவர்களில் 89. வெற்றிக்கு 35 ரன்களே என்கிற நிலையில் பேர்ஸ்டோ களமிறங்கி, தன்னை டெஸ்ட் போட்டிகளில் காலி செய்த அக்ஸர் பட்டேல், வாஷிங்டன் சுந்தரை எல்லாம் பழிதீர்த்தார். உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனான டேவிட் மலான் 24 ரன்கள், ஜானி பேர்ஸ்டோ 17 பந்துகளில் 26 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 16வது ஓவரில் வெற்றிபெற்றது.
எப்போதுமே சீரிஸை வென்றபிறகுதான் பரிட்சார்த்த முயற்சிகளில் இறங்குவார்கள். ஆனால், முதல் போட்டியிலேயே கோலி, ரோஹித்துக்கு ரெஸ்ட் கொடுத்தது தப்புக்கணக்காக முடிந்திருக்கிறது.
1 லட்சத்து 32 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதிகொண்ட அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று 67 ஆயிரம் ரசிகர்கள் வருகைதந்து போட்டியை கண்டுரசித்தார்கள். இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கயிருக்கிறது.28 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த பட்லரை வீழ்த்தினார் சஹால். அடுத்து 32 பந்துகளில் 49 ரன்கள் அடித்தநிலையில் ஜேசன் ராய் அவுட் ஆனபோது இங்கிலாந்தின் ஸ்கோர் 11 ஒவர்களில் 89. வெற்றிக்கு 35 ரன்களே என்கிற நிலையில் பேர்ஸ்டோ களமிறங்கி, தன்னை டெஸ்ட் போட்டிகளில் காலி செய்த அக்ஸர் பட்டேல், வாஷிங்டன் சுந்தரை எல்லாம் பழிதீர்த்தார். உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனான டேவிட் மலான் 24 ரன்கள், ஜானி பேர்ஸ்டோ 17 பந்துகளில் 26 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 16வது ஓவரில் வெற்றிபெற்றது.
எப்போதுமே சீரிஸை வென்றபிறகுதான் பரிட்சார்த்த முயற்சிகளில் இறங்குவார்கள். ஆனால், முதல் போட்டியிலேயே கோலி, ரோஹித்துக்கு ரெஸ்ட் கொடுத்தது தப்புக்கணக்காக முடிந்திருக்கிறது.
1 லட்சத்து 32 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதிகொண்ட அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று 67 ஆயிரம் ரசிகர்கள் வருகைதந்து போட்டியை கண்டுரசித்தார்கள். இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கயிருக்கிறது.