Published:Updated:

பென் ஸ்டோக்ஸின் இரண்டு தவறுகள்... செம ஹேப்பி ஹோல்டர்... `நியூ நார்மல்' கிரிக்கெட் எப்படி? #ENGVsWI

#ENGVsWI
#ENGVsWI ( ENGLAND CRICKET )

ஹோல்டர், விக்கெட் எடுத்த குஷியில் சில தடவை சக வீரர்களைக் கட்டியும் பிடித்தார். இந்த விஷயத்தில் ஸ்டோக்ஸும் இங்கிலாந்து வீரர்களும் கொஞ்சம் உஷாராகவே இருந்தனர்.

கொரோனா களேபரங்களுக்கு இடையே 117 நாள்களாக நடக்காமல் இருந்த கிரிக்கெட்டுக்கு ரெஸ்யூம் பட்டனை அழுத்திவிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் பலத்த முன்னெரிச்சைக்கைகளுடன் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெற்றிகரமாகத் தொடங்கி இரண்டு நாள்கள் முடிவடைந்துள்ளன.

கொரோனா பாதிப்புக்குப் பிறகு நடைபெறும் முதல் கிரிக்கெட் போட்டி என்பதால் சின்னச் சின்ன விஷயங்களில்கூட பாதுகாப்பு காரணங்களுக்காகப் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மிக முக்கியமாக மைதானத்தில் பார்வையாளர்களே இல்லாமல் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி என்ற வரலாற்று சிறப்பை பெற்றுள்ளது. கனடா-ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய நாடுகள் விளையாடும் போட்டிகளுக்குக்கூட மைதானத்தில் ஓரளவுக்கு பார்வையாளர் வருகை இருக்கும். ஆனால், இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் போன்ற பெரிய அணிகள் விளையாடும் முக்கியமான டெஸ்ட் போட்டியைப் பார்வையாளர்கள் இல்லாமல் ஆராவாரம் எதுவுமின்றி பார்ப்பதற்கு புது அனுபவமாக இருக்கிறது. ரசிகர்களின் ஆரவாரத்தை அவார்ட் ஷோக்களில் விசில் கைத்தட்டல் சவுண்ட்களைப் போடுவது போல் ஸ்பீக்கரில் போட்டு மேட்ச் செய்ய முயன்றிருக்கின்றனர்.

இரண்டு அணிகளின் கேப்டன் மற்றும் அம்பயர் என மூவர் மட்டுமே டாஸில் இடம்பெற்றிருந்தனர். டாஸுக்கு பிறகு வழக்கம்போல ஜேசன் ஹோல்டர் பென் ஸ்டோக்ஸ்க்கு கைகுலுக்க முயல் ஸ்டோக்ஸ் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டார். இந்தக் குழப்பம் ஹோல்டருக்கு ஆட்டம் முழுவதுமே இருந்தது. எப்போதும்போல வீரர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடாது என்பது அறிவுரை. ஆனால், ஹோல்டர், விக்கெட் எடுத்த குஷியில் சில தடவை சக வீரர்களைக் கட்டியும் பிடித்தார். இந்த விஷயத்தில் ஸ்டோக்ஸும் இங்கிலாந்து வீரர்களும் கொஞ்சம் உஷாராகவே இருந்தனர். ஆண்டர்சன் இரண்டு மூன்று ரிவ்யூக்களுக்குப் பிறகு முதல் விக்கெட்டை எடுத்த போதிலும் இங்கிலாந்து வீரர்கள் கொஞ்சம் இடைவெளிவிட்டு நின்று கைதட்டியே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வாட்டர் பாட்டில் தூக்கி வரும் சப்ஸ்டிட்யூட் வீரர்களும் கைகளில் கிளவுஸ் மாட்டியே இருந்தனர்.

#ENGVsWI
#ENGVsWI
ENGLAND CRICKET

முதல் நாள் போட்டி மழை காரணமாகத் தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். 17 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் கேப்ரியல் மட்டும் ஹோல்டரின் லைன் & லென்த்தைக் கணிக்க முடியாமல் திணறியது இங்கிலாந்து. முதல் மூன்று விக்கெட்டையும் கேப்ரியல் காலி செய்தார். ஸ்டோக்ஸ் மட்டுமே கொஞ்சம் ப்ளானிங்கோடு வெஸ்ட் இண்டீஸ் பெளலர்களை சரியான லைன் & லென்த்தை பிடிக்க விடாமல் செய்ய நகர்ந்து நகர்ந்து பேட்டிங் ஆடினார். சில பந்துகளை கிரீஸிலிருந்து இரண்டு மூன்று ஸ்டெப் வெளியே நடந்து வந்து ஷாட் ஆடி பவுண்டரியாக்கினார். ஸ்டோக்ஸின் யூகத்தை முறியடிக்கும் வகையில் அதிகம் ஸ்விங் இல்லாமல் ஸ்டம்ப் லைனில் ஒரு ஷாட் பிட்ச் பாலை ஹோல்டர் போட எட்ஜ் ஆகி நடையை கட்டினார் ஸ்டோக்ஸ். அடுத்த ஓவரிலே பட்லரும் ஹோல்டர் பந்திலே எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் கொடுத்துவிட்டார். ஹோல்டர் மட்டும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டினார். இங்கிலாந்து 204 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

மழை பெய்கிற நேரத்தில் இங்கிலாந்து பிட்ச்சில் பேட்டிங் செய்ய எந்த அணியும் விரும்பாது. நிலைமை தெரிந்தும் ஸ்டோக்ஸ் முதல் பேட்டிங் எடுத்ததே முதல் சொதப்பல். ஆண்டர்ஸன் மாதிரியான பௌலரை வைத்துக்கொண்டு முதலில் பெளலிங் எடுத்திருந்தால் இரண்டு நாள் ஆட்டமும் இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்திருக்கும். இந்த டாஸ் முடிவு ஸ்டோக்ஸ் செய்த முதல் தவறு என்றால் இரண்டாவது அவர் செய்த தவறு பெளலிங் சேஞ்ச். வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கின் போது முதல் 16 ஓவர்களில் 4 பெளலர்களைப் பயன்படுத்திவிட்டார். ஆண்டர்சனின் ஸ்விங்கை கணிக்க முடியாமல் கேம்பெல் திணறி ஒரு வழியாக மூன்றாவது முறையாக ஆண்டர்சன் அப்பீல் செய்ததில் அவுட் ஆனார். அந்தச் சூழலில் அப்படியே ஆண்டர்சன்-மார்க் வுட் என மாறி மாறி பெளலிங் செய்ய வைத்திருக்கலாம். அதைவிட்டு விட்டு ஸ்டோக்ஸ் பந்தை கையில் எடுத்ததை தவிர்த்திருந்தால் ஆட்டம் முடிவதற்குள் இன்னொரு விக்கெட்டை எடுத்திருக்கலாம். வெஸ்ட் இண்டீஸ் 57 ரன்களில் ஒரு விக்கெட் இழந்திருந்த நிலையில் சரியான வெளிச்சம் இல்லாததால் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதுவரை வெஸ்ட் இண்டீஸின் கையே ஓங்கியிருக்கிறது.

JASON HOLDER
JASON HOLDER
WINDIES CRICKET

டாஸ் போடும்போது எப்படி கேப்டன்களிடம் வீடியோ மூலம் பேட்டி எடுக்கப்பட்டதோ அதே போன்றே ஆட்டத்துக்குப் பிறகான பிரஸ் மீட்டும் நடைபெற்றது. கொரோனா மட்டுமல்லாமல் #BlackLivesMatter மூவ்மென்ட்டுக்குப் பிறகு நடைபெறுவதாலும் இந்த ஆட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆட்டத்துக்கு முன்பு மைக்கேல் ஹோல்டிங் ரேஸிஸம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியதும் வைரலாகி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு