Published:Updated:

புதிய ஜெர்சியுடன் இந்தியா... புதிய குழப்பத்துடன் இங்கிலாந்து... வெற்றி யாருக்கு? #ENGvIND

புதிய ஜெர்சியுடன் இந்தியா... புதிய குழப்பத்துடன் இங்கிலாந்து... வெற்றி யாருக்கு? #ENGvIND

ஒரு பக்கம் நம்பிக்கை துளிர்விட, மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜோஃப்ரா ஆர்ச்சரின் நிலை.

Published:Updated:

புதிய ஜெர்சியுடன் இந்தியா... புதிய குழப்பத்துடன் இங்கிலாந்து... வெற்றி யாருக்கு? #ENGvIND

ஒரு பக்கம் நம்பிக்கை துளிர்விட, மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜோஃப்ரா ஆர்ச்சரின் நிலை.

புதிய ஜெர்சியுடன் இந்தியா... புதிய குழப்பத்துடன் இங்கிலாந்து... வெற்றி யாருக்கு? #ENGvIND

உலகக் கோப்பை தொடங்கும்போது உலகின் நம்பர் 1 அணி. கோப்பை வெல்வதற்கு நம்பர் 1 ஃபேவரிட்ஸ். ஒருநாள் போட்டி வரலாற்றில் 500 என்ற ஸ்கோரை முதலில் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணி. ஆனால், இப்போது 250 என்ற ஸ்கோரை சேஸ் செய்யத் தடுமாறிக்கொண்டு, அரையிறுதி வாய்ப்புக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது. தரவரிசையிலும் சரிவைச் சந்தித்துவிட்டது. இங்கிலாந்துக்கு இந்த உலகக் கோப்பை எதிர்பார்த்ததுபோல் அமையவில்லை. இந்த கடைசி இரண்டு போட்டிகளையும் வெல்லவேண்டிய கட்டாயத்தில், எந்த அணியாலும் வீழ்த்தமுடியாத இந்தியாவை இன்று சந்திக்கிறது.

பாகிஸ்தான் இங்கிலாந்தைவிட ஒரு புள்ளி இப்போது அதிகம் பெற்றிருப்பதாலும், கடைசிப் போட்டியில் அந்த அணி வங்கதேசத்தை எதிர்கொள்ளவிருப்பதாலும், இங்கிலாந்துக்கு இந்தப் போட்டியில் வேறு சாய்ஸே இல்லை. இந்திய அணியின் பேட்டிங் கடந்த இரண்டு போட்டிகளாக சற்று சரிவைச் சந்தித்துள்ள நிலையில், முதல் 10-15 ஓவர்களில் அவர்கள் எப்படிப் பந்துவீசுகிறார்கள் என்பதே அவர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானித்துவிடும். அதேசமயம், இந்திய அணியின் பந்துவீச்சு மிரட்டலாக இருப்பதால், அவர்களின் பேட்ஸ்மேன்களும் மிகக் கவனமாக விளையாடவேண்டும்.

#ENGvIND
#ENGvIND
இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த பேட்டிங் பிட்சாக இது இருக்கும்
ஆஷ்லி கைல்ஸ்

இந்திய அணி தங்களின் புதிய ஆரஞ்சு ஜெர்சியை அணிந்து முதல் முறையாகக் களமிறங்கப்போகிறது. இந்த புதிய மாற்றம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பிளேயிங் லெவன்

இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கவவே வாய்ப்பு அதிகம். வெற்றிக் கூட்டணியை மாற்ற அணி நிர்வாகம் பெரும்பாலும் விரும்பாது. ஒருவேளை, டெய்லை பலப்படுத்த விரும்பினால் ஒரு ஸ்பின்னருக்குப் பதில் ஜடேஜாவைக் களமிறக்கலாம். ஆனால், இங்கிலாந்து மிடில் ஆர்டரில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், ஜடேஜாவைக் களமிறக்கமாட்டார்கள் என்றே நம்பலாம்.

ENGvIND
ENGvIND

இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையளிக்கிறது ஜேசன் ராய் வருகை. காயம் காரணமாக அவர் ஓய்வில் இருக்க, அவர் இடத்தில் ஆடிய வின்ஸ் ஒரு பெரிய இன்னிங்ஸ்கூட ஆடவில்லை. போக, பேர்ஸ்டோவும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார். ராயின் வருகை ஓப்பனிங் பிரச்னையை சரிசெய்துவிடும். அது சரியானாலே, இங்கிலாந்து மீண்டும் பழைய ஃபார்மில் ஆடத் தொடங்கிவிடும்.

இப்படி ஒரு பக்கம் நம்பிக்கை துளிர்விட, மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜோஃப்ரா ஆர்ச்சரின் நிலை. அவர் காயத்தோடுதான் கடந்த சில போட்டிகளாக விளையாடிக்கொண்டிருக்கிறார் என்று கூறிய மோர்கன், அவரது ஃபிட்னஸை மீண்டும் சோதித்துவிட்டு இந்தப் போட்டிக்கான முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். ஒருவேளை ஆர்ச்சர் ஃபிட்டாக இல்லையெனில், இங்கிலாந்து அணிக்கு அது மிகப்பரிய இழப்பாக அமையும். அவர் ஆடாதபட்சத்தில் பிளங்கட் களமிறக்கப்படலாம்.

England
England

இங்கிலாந்து (உத்தேச அணி) : ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர் / லியாம் பிளங்கட், மார்க் வுட்.

இந்தியா (உத்தேச அணி) : ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, விஜய் சங்கர், எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரீத் பும்ரா.

ENG v IND
ENG v IND

நேருக்கு நேர்

இந்த இரு அணிகளும் மோதும் 100-வது சர்வதேச ஒருநாள் போட்டி இது. இதுவரை நடந்துள்ள 99 போட்டிகளில் இந்தியா 53 வெற்றிகளும், இங்கிலாந்து 41 வெற்றிகளும் பெற்றுள்ளன. 2 போட்டிகள் டை ஆனது. 3 போட்டிகளுக்கு முடிவு கிடைக்கப்படவில்லை. கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில், 6-4 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. உலகக் கோப்பையில் மோதிய 7 போட்டிகளில், இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வென்றுள்ளன. கடைசியாக 2011-ம் ஆண்டு பெங்களூரில் நடந்த போட்டி டை ஆனது.

இதுவரை

இங்கிலாந்து

vs தென்னாப்பிரிக்கா - 104 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி

vs பாகிஸ்தான் - 14 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி

vs வங்கதேசம் - 106 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி

vs வெஸ்ட் இண்டீஸ் - 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி

vs ஆப்கானிஸ்தான் - 150 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி

vs இலங்கை - 20 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி

vs ஆஸ்திரேலியா - 64 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி

Dhoni
Dhoni
இந்தியா

vs தென்னாப்பிரிக்கா - 6 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வெற்றி

vs ஆஸ்திரேலியா - 36 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி

vs நியூசிலாந்து - மழையால் ஆட்டம் ரத்து

vs பாகிஸ்தான் - 89 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி (DLS)

vs ஆப்கானிஸ்தான் - 11 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி

vs வெஸ்ட் இண்டீஸ் - 125 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி