31 ரன்கள் வித்யாசத்தில் வென்றது இங்கிலாந்து... இந்திய அணிக்கு முதல் தோல்வி..! #ENGvIND Live Update

இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதும் உலகக் கோப்பை லீக் போட்டியின் லைவ் அப்டேட்கள் #ENGvIND
ரோஹித் அவுட்
106 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ரோஹித் ஷர்மா. இந்தியா 198 - 3

இந்திய அணி இனி ஒரு டி-20 போட்டியை விளையாடியாகவேண்டும். 102 பந்துகளில் 161 ரன்கள் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட ஓவருக்கு ஒன்பதரை ரன்கள் தேவை. எனவே பவுண்டரிகள் அடித்தே ஆகவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது இந்திய அணி.
பொறுமை பன்ட் பொறுமை..!
கோலி வெளியேறியவுடனே இந்திய அணியில் பதற்றம் தொற்றிக்கொண்டதுபோல. உள்ளே வந்தவேகத்தில் இரண்டு முறை ரன் அவுட் ஆவதிலிருந்து தப்பித்திருக்கிறார் பன்ட். ரோஹித்தின் அணுகுமுறைக்கு ஏற்ப அவர் ஆடவேண்டியது அவசியம். பொறுமை மிக மிக அவசியம்
ரோஹித் ஆன் ஃபயர்
ஸ்டோக்ஸ் ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்து மிரட்டியிருக்கிறார் ஹிட்மேன். வெகுநேரம் டைமிங் சரியாகக் கிடைக்காமல் தடுமாறியவர், இப்போது அடித்து ஆடத் தொடங்கியிருக்கிறார். இந்தியாவின் ரன்ரேட் மெல்ல உயரத் தொடங்கியிருக்கிறது.
ஆரஞ்ச் டூ ஆரஞ்ச்
ரோஹித் 50
கோலியைத் தொடர்ந்து, ரோஹித்தும் 50 ரன்களைக் கடந்தார். 65 பந்துகளைச் சந்தித்த ரோஹித் 9 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார்.
கோலி அரைசதம்
இந்த உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது அரைசதத்தைப் பதிவு செய்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.
கோலி 50 (59)
றோஹித் 33 (52)

விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் ரோஹித் கொஞ்சம் வேகமாக இயங்குவது அவசியம். மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்யும்போது சிங்கிளை டபுளாக்குவதும், இரண்டை மூன்றாக்குவதும் மிகவும் முக்கியம். கோலி, அதில் அதிக முனைப்புடன் செயல்பட்டாலும், ரோஹித்துடைய ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைப்பதில்லை. பவுண்டரி, சிக்ஸர்களால் மட்டும் வென்றுவிட முடியாதே!
இது ரோஹித் ஷர்மாவே இல்லை. இது யாரோ அவரைப் போல் இருந்துகொண்டு, அவரைத் தேடும் ஒரு ஆள்ஹர்ஷா போக்ளே
Predict!
முதல் 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 28 ரன்கள்தான் எடுத்துள்ளது. இன்னும் 40 ஓவர்களில் 310 ரன்கள் தேவை. தேவைப்படும் ரன்ரேட் இப்பொழுதே ஏழுக்கும் அதிகமாக இருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் கியரை மாற்றவேண்டும். அதேசமயம் இந்த 10 ஓவர்கள் விக்கெட் ஏதும் வீழாமலும் ஆடவேண்டும். இந்த 10 ஓவர்களில் குறைந்தபட்சம் 70 ரன்களாவது எடுத்தால்தான் இங்கிலாந்து மீது கொஞ்சமாவது நெருக்கடி கூடும்.
28-1
10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது
மூன்று மெய்டன்
தொடர்ந்து மூன்று ஓவர்களை மெய்டனாக வீசியிருக்கிறார் கிறிஸ் வோக்ஸ். இங்கிலாந்து பௌலர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்திய பேட்ஸ்மேன்களே இடம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ரூ.....ட்...!
ரோஹித் ஷர்மா கொடுத்த மிக எளிதான கேட்சை இரண்டாவது ஸ்லிப்பில் நின்றிருந்த ஜோ ரூட் தவறவிட்டார். இரண்டாவது ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து. கேட்ச் விடப்பட்ட அடுத்த பந்திலேயே பவுண்டரியும் அடித்து, வேரில் வேலைப் பாய்ச்சியிருக்கிறார் ரோஹித். இந்தத் தவறின் விலை என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்.
சரித்திரம் படைக்குமா இந்தியா?!
உலகக் கோப்பை வரலாற்றில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 329. அதற்கு மேல் அடிக்கப்பட்ட ஸ்கோர்கள் ஏதும் சேஸ் செய்யப்பட்டதில்லை. இன்று இங்கிலாந்து 337 ரன்கள் எடுத்துள்ளது. இந்த இலக்கை சேஸ் செய்தால், உலகக் கோப்பை வரலாற்றின் மிகப்பெரிய சேஸிங்கை அரங்கேற்றி சரித்திரம் படைக்கும் மென் இன் ப்ளூ... சாரி மென் இன் ஆரஞ்ச்!
ஸ்டோக்ஸ் அவுட்!
பும்ரா பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஸ்டோக்ஸ்.
5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் ஷமி
கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தி, 5 wicket haul-ஐ நிறைவு செய்தார் முகமது ஷமி. இங்கிலாந்து 319 - 6

4,4,4 ஷமி ராக்ஸ்
47-வது ஓவரின் முதல் 5 பந்துகளில் 17 ரன்கள் கொடுத்த ஷமி, கடைசிப் பந்தில் பட்லர் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 3 போட்டிகளிலும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் ஷமி.
பட்லரைத் தடுப்பது எப்படி?
ஸ்டோக்ஸ் அரைசதம்
இந்த உலகக் கோப்பையில் தன்னுடைய நான்காவது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார் பென் ஸ்டோக்ஸ். 38 பந்துகளில், 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் அரைசதம் கடந்தார்.

பிடிச்சிருக்கா... பிடிக்கலையா..?
அதிரடியைத் தொடங்கிய ஸ்டோக்ஸ்
தொடக்கத்தில் கொஞ்சம் மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கிய ஸ்டோக்ஸ், அடுத்தடுத்து கியர்களை மாற்றி வெளுத்துக்கட்டத் தொடங்கிவிட்டார். ஸ்வின்ட் ஹிட் ஆடி, கவர் திசையில் சிக்ஸர் அடித்தவர், சஹாலின் லெக் ஸ்பின்னர்களை மிகவும் எளிதாகக் கையாளத் தொடங்கிவிட்டார். சஹால் வீசிய 12 பந்துகளில் மட்டும் 27 ரன்கள் எடுத்திருக்கிறார் ஸ்டோக்ஸ். ரன்ரேட் மெதுவாகக் கூடத் தொடங்கிவிட்டது.

ஆறுக்கும் கீழே ரன்ரேட்!
ஓருகட்டத்தில் சுமார் 7.50 வரை சென்ற இங்கிலாந்து அணியின் ரன்ரேட் இப்போது ஆறுக்கும் குறைவாகிவிட்டது. 27-வது ஓவருக்குப் பிறகு பெரிய ஓவரே இல்லை. டாட் பால்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஓவருக்கு இரண்டு பவுண்டரிகள் அடித்துக்கொண்டிருந்தவர்கள், கடைசி ஆறேழு ஓவர்களில் மொத்தமே 2 பவுண்டரிகள்தான் அடித்திருக்கிறார்கள். ரூட் மிகவும் மந்தமாக ஆடிக்கொண்டிருக்கிறார். ஸ்டோக்ஸும் வேகம் காட்டுவதுபோல் தெரியவில்லை. குறைந்தபட்சன், இருவரும் ஸ்டிரைக் ரொடேஷனையாவது சரியாகச் செய்யவேண்டும்.
சூப்பர் ஷமி!
இந்த உலகக் கோப்பையில் தன்னுடைய 10-வது விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி. தன்னுடைய மூன்றாவது போட்டியில்தான் ஆடுகிறார். ஆனால், ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய தாக்கத்தை பலமாக ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகள் வீழ்த்தியவர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகவும் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஷமிக்கு இரண்டாவது விக்கெட்
ஒரு ரன் எடுத்த நிலையில், ஷமியின் பந்துவீச்சில் வெளியேறினார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன். கடந்த போட்டியில் ஸ்டார்க் வீசிய ஷார்ட் பாலில் அவுட்டானவர், இப்போதும் ஷார்ட் பாலில், அதே ஃபைன் லெக் திசையிலேயே கேட்சானார்.
குறையும் ரன்ரேட்
கடைசி சில ஓவர்களாக இங்கிலாந்தின் ரன்ரேட் வெகுவாகக் குறைந்திருக்கிறது. 27-வது ஓவர் முடிவில் 7.07 என இருந்த ரன்ரேட், 33-வது ஓவரின் முடிவில் 6.27 வரை வந்துவிட்டது. இடைப்பட்ட இந்த ஓவர்களில் நிறைய டாட் பால்கள் ஆடப்பட்டுவிட்டன. இங்கிலாந்து அணி அதைச் சரிசெய்துகொண்டு விளையாடவேண்டும்.
ராகுல் காயம் பெரிதோ?!
பேர்ஸ்டோ அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்று காயமடைந்து வெளியேறிய ராகுல், இன்னும் களத்துக்குத் திரும்பவில்லை. 15-வது ஓவரில் சென்றவர், இன்னும் திரும்பவில்லை என்பதால், காயம் பெரிதாக இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது.

பேர்ஸ்டோ சதம்
அதிரடியாக விளையாடி, இந்திய பந்துவீச்சைப் பதம்பார்த்த ஜானி பேர்ஸ்டோ, 90 பந்துகளில் சதமடித்தார். ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் எட்டாவது சதம் இது.
அவர் ஃபீல்டிங்கை மிகவும் எளிதாக்குகிறார். ஃபீல்டிங்கில் சிரமமே இல்லாததுபோல்தான் இருக்கும் அவரது செயல்பாடு. 'நீ ஒற்றை ஸ்டம்பை அடிப்பதைப் பார்க்கவே டிக்கெட் கொடுத்து ரசிகர்களை வரவழைக்கமுடியும்' என்று அவரிடம் நான் சொல்வேன்ஜடேஜாவைப் பற்றி ஸ்ரீதர் (இந்திய ஃபீல்டிங் கோச்)

பும்ரா... ஜாதவ்..?
பாரபட்சமே இல்லாமல் அனைத்து இந்திய பௌலர்களையும் பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறார்கள் இங்கிலாந்து ஓப்பனர்கள். ஹர்திக், சஹால், குல்தீப் என மிடில் ஓவர்களில் அனைவரின் பந்துவீச்சும் பவுண்டரிக்குப் பறக்க, இந்தியா ஒரு மிகப்பெரிய ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும். ஒன்று, மீண்டும் ஒரு சிறிய ஸ்பெல் வீச பும்ராவை அழைக்கவேண்டும். இல்லை, கேதர் ஜாதவைப் பயன்படுத்தவேண்டும்.
145 - 0
20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 145 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து
ஜேசன் ராய் - 62 (51)
ஜானி பேர்ஸ்டோ - 78 (69)
என்ன ஆச்சு தோனிக்கு?
DRS என்பது தோனி ரிவ்யூ சிஸ்டம் எனச் சொல்லுமளவுக்கு தோனியின் அனலட்டிக் ஸ்கில்ஸ் எப்போதும் பக்கா மாஸ். ஆனால், இன்றைய போட்டியில் அப்படி நடைபெறவில்லை. பாண்டியா அவுட் கேட்ட போது, கீப்பர் தோனியிடம் சென்று கேட்டார் கோலி. ஆனால், தோனி அவுட் கேட்டதில் உறுதியாக இல்லை . ராய் அப்போது 21 ரன்கள் எடுத்திருந்தார். தோனிக்கும் DRS சறுக்கும் போல. இந்த உலகக் கோப்பையில் இப்படி தோனி கணிக்கத் தவறியது இரண்டாவது முறை.
ஜேசன் ராய் அரைசதம்
41 பந்துகளைச் சந்தித்த ஜேசன் ராய் அரைசதம் கடந்தார். இந்த உலகக் கோப்பையில் அவர் அடிக்கும் இரண்டாவது அரைசதம் இது. இதுபோக, ஒரு சதம் அடித்திருக்கிறார்.

இந்த உலகக் கோப்பையில் இதுதான் மிகச் சிறந்த பேட்டிங் பிட்சாக இருக்கும்ஆஷ்லி கைல்ஸ்
சஹால் 5-0-45-0
சஹால் பந்துவீச்சை அநியாயத்துக்கும் அடித்து நொறுக்கியிருக்கிறது இங்கிலாந்து அணி. ராய், பேர்ஸ்டோ இருவருமே அவரது லெக் ஸ்பின்னைப் பதம் பார்த்தனர். ஸ்டம்புக்கு வெளியே தொடர்ச்சியாக பந்துவீசியதால், அதை எதிர்கொள்வது அவர்களுக்குக் கடினமாக இல்லை. பெரும்பாலான பௌண்டரிகள் லாங் ஆன் திசையிலேயே அடிக்கப்பட்டன. இந்தியாவிக்கு ஒரு மிகப்பெரிய மாற்றம் தேவை

பேர்ஸ்டோ அரைசதம்
56 பந்துகளைச் சந்தித்த ஜானி பேர்ஸ்டோ அரைசதம் கடந்தார். இந்த உலகக் கோப்பையில் அவர் அடிக்கும் மூன்றாவது அரைசதம் இது.

முதல் 10 ஓவர்கள் நிதானமாக விளையாடிய இங்கிலாந்து ஓப்பனர்கள், இப்போது அதிரடி காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சஹால், ஹர்திக் ஆகியோரின் ஓவர்களை டார்கெட் செய்துள்ளனர். இவர்களின் பந்துவீச்சில், குறைந்தபட்சம் ஓவருக்கு ஒரு பௌண்டரி போய்க்கொண்டிருக்கிறது. அதன் விளைவாக, 15-வது ஓவரிலேயே ஐந்தாவது பௌலரைப் பயன்படுத்தியிருக்கிறது இந்தியா!
தொடர்ந்து தவறும் ரிவ்யூக்கள்
ஹர்திக் வீசிய 11-வது ஓவரின் ஐந்தாவது பந்து, லெக் சைட் வெளியே சென்றது. அதை அடிக்க முற்பட்ட ஜேசன் ராயின் கிளவுசில் பட்டு தோனியிடம் கேட்சானாது. இந்திய வீரர்கள் அப்பீல் செய்ய, அதை மறுத்த நடுவர் அலீம் தார் வைட் கொடுத்தார். ரிவ்யூ கேட்கலாமா என்று ஆலோசித்தபோது, அதை வேண்டாமென்று மறுத்துவிட்டார் தோனி. ஆனால், அதன்பின் Ultra Edge-ல் பந்து கிளவுசில் பட்டது உறுதி செய்யப்பட்டது. சமீபமாக இதுபோன்ற அவுட்டுக்கான நிறைய ரிவ்யூ முடிவுகளை கீப்பர்கள் நிராகரிப்பது அதிகரித்துவருகிறது. டி காக், பட்லர், தோனி (2 முறை) போன்ற அனுபவ கீப்பர்கள் இதைத் தவறவிடுவதுதான் சோகம்!
10.4 ஓவர்கள் முடிவில் 50 ரன்களைக் கடந்தது இங்கிலாந்து. ஜேசன் ராய் - ஜானி பேர்ஸ்டோ கூட்டணி 64 பந்துகளில் அரைசதம் கடந்தது.
47 - 0
10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்துள்ளது.
ஜேசன் ராய் - 20 (23)
ஜானி பேர்ஸ்டோ - 25 (37)
மற்ற அணிகளெல்லாம் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகப் பெரிய ஸ்கோர் எடுக்கத் தவறின. அதனால் ஸ்பின்னர்களை அட்டாக் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு வெளியேறினர். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அந்தத் தவறைச் செய்யாமல், மிகவும் சரியாக போட்டியை அணுகிக்கொண்டிருக்கின்றனர்.சௌரவ் கங்குலி
அடுத்தடுத்த மாற்றங்கள்!
ஏழு ஓவர்களுக்குள் இரண்டு மாற்றங்களைச் செய்திருக்கிறார் கோலி. ஆறாவது ஓவரில் சஹாலைப் பந்துவீச அழைத்தவர், அடுத்து பும்ராவுக்கு 'end'-ஐ மாற்றினார். இதுவரை இந்திய அணிக்கு எதிராக, மற்ற அணிகள் இவ்வளவு திடமாகப் போட்டியைத் தொடங்கவில்லை. இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்யவில்லை. ஆனால், இங்கிலாந்து அப்படிச் செய்துகொண்டிருப்பதால், உடனே விக்கெட் வீழ்த்தவேண்டும் என்பதில் கோலி தீர்க்கமாக இருப்பது தெரிகிறது
ஆறாவது ஓவரிலேயே சஹால்!
அடுத்தடுத்த மாற்றங்கள்!இங்கிலாந்து ஓப்பனர்கள் சுழலுக்கு எதிராகச் சற்று திணறவே செய்வார்கள். குறிப்பாக, லெக் ஸ்பின்னுக்கு எதிராக ஜேசன் ராய் தடுமாறுவார். அதனால் ஆறாவது ஓவரின்போது சஹாலுக்கு ஓவர் கொடுத்துள்ளார் கோலி. ஆரம்பத்திலிருந்து அட்டாக் செய்ய முடிவெடுத்துவிட்டது இந்திய அணி!
28 - 0
5 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.
ஜேசன் ராய் - 8 (8)
ஜானி பேர்ஸ்டோ - 17 (22)
ஓப்பனர்கள் ஏன் முக்கியம்?
ஒரு ஓப்பனரின் இருப்பு, அந்த அணியில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது! ஜேசன் ராய் காயமடைவதற்கு முன்பு இங்கிலாந்து அணியின் பேட்டிங், எந்த அணியாலும் தடுக்க முடியாததாக இருந்தது. அதேபோல், தவான் இருந்தபோது இந்திய பேட்டிங்கும் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், காயத்தால் அவர்கள் இல்லாதபோது இரண்டு அணிகளுமே தடுமாறத் தொடங்கின. இந்தியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடங்கூடத் திணறியது. இங்கிலாந்து, இலங்கையுடன் தோற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தடுமாறியது. அணியின் முக்கியத் தூணாக விளங்கும் ஒரு ஓப்பனர் இல்லாதது, உளவியல் ரீதியாக அந்த அணியில் பெரிய தாக்கம் ஏற்படுத்துகிறது. ஏன், எப்போதுமே ஓப்பனர்களின் பங்களிப்பு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது என்பதற்கு இவையே மிகச் சிறந்த உதாரணங்கள்!
புதிய ஜெர்சி!
டாஸ் வென்றிருந்தால் பேட்டிங்தான் தேர்வு செய்திருப்பேன். விஜய் சங்கருக்குக் காலில் காயம் ஏற்பட்டதால் பன்ட் களமிறங்குகிறார். பயமில்லாமல் ஆடும் அவரது அணுகுமுறை இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம்.விராட் கோலி
இந்தியா vs இங்கிலாந்து பிரிவ்யூ
இங்கிலாந்து
ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் பிளங்கட், மார்க் வுட்
இந்தியா
ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிசப் பன்ட், எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரீத் பும்ரா.
பன்ட் இன்.. விஜய் சங்கர் அவுட்..!
இன்றைய போட்டியில் நான்காவது பேட்ஸ்மேனாக ரிசப் பன்ட் களமிறங்குவார் என்று தெரிகிறது. மிடில் ஆர்டரில் பெரிய தாக்கம் ஏற்படுத்தாத விஜய் சங்கருக்குப் பதில் பன்ட் களமிறங்கவுள்ளார்

இந்தியா, இங்கிலாந்து உலகக் கோப்பைப் போட்டியின் உடனடி அப்டேட்களைத் தெரிந்துகொள்ளுங்கள். ஸ்கோர் மட்டுமல்லாமல், அனாலசிஸ், Facts போன்ற விஷயங்களைப் பற்றியும் இங்கு உரையாடலாம்.