Published:Updated:

ஓவல் டெஸ்ட்டில் வரலாற்று வெற்றிபெற்று இந்தியா சாதனை... 2-1 என தொடரில் முன்னிலை! ENGvIND

ENGvIND
ENGvIND

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியை வென்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றிருக்கிறது இந்தியா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

06 Sep 2021 3 PM

291 ரன்களைக் குவிக்குமா இங்கிலாந்து 

இங்கிலாந்து - இந்தியா மோதும் ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் இன்னும் சற்றும் நேரத்தில் தொடங்கயிருக்கிறது. 10 விக்கெட்களை கையில் வைத்திருக்கும் இங்கிலாந்து இன்று 90 ஓவர்களை சந்திக்க இருக்கிறது. இங்கிலாந்து 540 பந்துகளில் 291 ரன்களை எடுத்தால் வெற்றி. 10 விக்கெட்களையும் தூக்கினால் இந்தியா இங்கிலாந்தில் மற்றுமொரு வரலாற்று வெற்றியைப் பெறும்.

06 Sep 2021 3 PM

முக்கியமான முதல் செஷன்!

இன்றைய முதல் செஷன் இரு அணிகளுக்குமே முக்கியமானது. 77 ரன்களுடன் ஒரு விக்கெட்டையும் இழக்காமல் இறுதி நாள் ஆட்டத்தை தொடங்கியிருக்கும் இங்கிலாந்து, விக்கெட் இழக்காமல் இன்னும் ஒரு 50 ரன்களைக் குவித்தால் ஆட்டம் இங்கிலாந்து பக்கம் போக அதிக வாய்ப்பிருக்கிறது. ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உடைத்தால் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்து ஆட்டம் இந்தியா பக்கம் மாறவும் வாய்ப்புகள் அதிகம்.

06 Sep 2021 4 PM

பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்!

ஓவல் பிட்ச் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாக மாறியிருக்கிறது. இன்னும் முதல் விக்கெட்டையே எடுக்கமுடியாமல் இந்திய பெளலர்கள் திணறிவருகிறார்கள். இன்றைய நாளில் இன்னும் 82 ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் 94 ரன்களுடன் விக்கெட் இழக்காமல் ஆடிவருகிறது இங்கிலாந்து. ரோரி பர்ன்ஸ் 44 ரன்களுடனும், ஹமீது 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

06 Sep 2021 4 PM

ரோரி பர்ன்ஸ் 50

இங்கிலாந்தின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோரி பர்ன்ஸ் 50 ரன்கள் அடித்த அடுத்த பந்திலேயே அவுட். இந்தியாவுக்கான திருப்புமுனையை ஏற்படுத்திகொடுத்திருப்பவர் ஷர்துல் தாகூர். ஆஃப் ஸ்டம்புக்கு அருகேபோன பந்தை பர்ன்ஸ் தொட அது பன்ட்டின் கிளவுஸுக்குள் புகுந்தது.

06 Sep 2021 4 PM

ஹமீதுக்கு வாழ்வளித்த சிராஜ்!

ரவீந்திர ஜடேஜா பெளலிங்கில் ஹசீப் ஹமீது கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார் மொகமது சிராஜ். ஹமீது தற்போது 58 ரன்களுடனும், மலான் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து வெற்றிக்கு 252 ரன்கள் தேவை. இன்னும் 73 ஓவர்கள் இன்று வீசப்படவேண்டும்.

06 Sep 2021 4 PM

50-ல் ஆபத்து!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஓவல் டெஸ்ட்டின் நான்கு இன்னிங்ஸ்களிலுமே 50 ரன்களில் 4 பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்திருக்கிறார்கள். முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 50 ரன்களில் ஆட்டம் இழக்க, இரண்டாவது இன்னிங்ஸில் கிறிஸ் வோக்ஸ் 50 ரன்களில் ஆட்டம் இழந்தார். மூன்றாவது இன்னிங்ஸில் ரிஷப் பன்ட் 50 ரன்களில் ஆட்டம் இழக்க, நான்காவது இன்னிங்ஸில் ரோரி பர்ன்ஸ் 50 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

06 Sep 2021 5 PM

டேவிட் மலான் ரன் அவுட்!

டேவிட் மலான் ரன் அவுட்!
டேவிட் மலான் ரன் அவுட்!

எல்பிடபிள்யுவில் இருந்து தப்பித்த டேவிட் மலான் ரன் அவுட் ஆகி விக்கெட்டை இழந்திருக்கிறார். தேவையில்லாமல் ஹமீத் ரன்னுக்கு அழைக்க, அகர்வால் சரியான நேரத்தில் பந்தைத் துரத்திப்பிடித்து பன்ட்டிடம் அடிக்க, டைவ் அடித்தும் மலானால் ரன் அவுட்டில் இருந்து தப்பிக்க முடியவில்லை!

06 Sep 2021 5 PM

களத்தில் அகர்வால், அக்ஸர் பட்டேல்!

ரோஹித் ஷர்மா, புஜாரா இருவரும் காயமடைந்திருப்பதால் சப்ஸ்டிட்யூட் ஃபீல்டர்களாக மயாங்க் அகர்வாலும், அக்ஸர் பட்டேலும் களத்தில் உள்ளனர்.

06 Sep 2021 5 PM

லன்ச்சுக்கு முன் ஜோ ரூட்டின் விக்கெட்?!

மதிய உணவு இடைவேளைக்கு இன்னும் 15 நிமிடங்களே இருப்பதால் அதற்கு முன்னதாக ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்திவிடும் முனைப்பில் விளையாடுகிறது இந்தியா.

06 Sep 2021 5 PM

15 ஓவர்கள்.... 0 பவுண்டரி!

கடைசி 15 ஓவர்களாக இங்கிலாந்து வீரர்கள் பவுண்டரியே அடிக்கவில்லை. இன்றைய நாளை மிகவும் பாசிட்டிவாகத் தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் இரண்டு ஓவருக்கு ஒரு பவுண்டரி என ஆடிக்கொண்டிருந்தார்கள். இப்போது மதிய உணவு இடைவேளை நெருங்குவதால் தற்காப்பு ஆட்டம் ஆடிவருகிறார்கள். தற்போது 124 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து ஆடிவருகிறது இங்கிலாந்து. ஹமீத் 61 ரன்களுடனும், ஜோ ரூட் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

06 Sep 2021 5 PM

102 பந்துகளில் 19 ரன்கள்... யார் இந்த ஹசீப் ஹமீத்?

ஓவல் டெஸ்ட்டின் இறுதி நாளின் முதல் செஷன் இங்கிலாந்து - இந்தியா என இரண்டு அணிகளுக்குமே சாதகமாக முடிந்திருக்கிறது. இங்கிலாந்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 54 ரன்களை குவித்திருக்கிறது. இதன் மூலம் 63 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 237 ரன்களை எடுக்கவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது. இங்கிலாந்தின் இன்றைய ஸ்டார் ஹசீப் ஹமீது. இன்று மட்டும் 102 பந்துகளை சந்தித்திருக்கும் ஹமீது 19 ரன்கள் மட்டுமே அடித்திருந்தாலும் விக்கெட்டுகளை இழந்துவிடாமல் இங்கிலாந்துக்கு நம்பிக்கை அளித்துவருகிறார்.

https://www.vikatan.com/cricket/who-is-haseeb-hameed-and-why-he-celebrated-as-modern-boycott
06 Sep 2021 6 PM

ஹமீத் அவுட்!

ஓவல் டெஸ்ட்டில் வரலாற்று வெற்றிபெற்று இந்தியா சாதனை... 2-1 என தொடரில் முன்னிலை! ENGvIND

மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு கடைசி நாள் ஆட்டம் தொடங்கியிருக்கிறது. இந்திய கேப்டன் கோலி ஹமீத் - ரூட் பார்ட்னர்ஷிப்பை உடைக்க தொடர்ந்து ஜடேஜாவைப் பயன்படுத்தி வந்ததற்கு சரியான பலன் கிடைத்திருக்கிறது. 193 பந்துகளில் 63 ரன்களுடன் விளையாடிவந்த ஹமீத் ஜடேஜாவின் பெளலிங்கில் போல்ட் ஆகியிருக்கிறார். இங்கிலாந்து 142 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருக்கிறது. ஓலி போப் களத்துக்கு வந்திருக்கிறார்.

06 Sep 2021 6 PM

ஓலி போப் அவுட்... பும்ராவின் 100-வது விக்கெட்!

ஓவல் டெஸ்ட்டில் வரலாற்று வெற்றிபெற்று இந்தியா சாதனை... 2-1 என தொடரில் முன்னிலை! ENGvIND

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை மீட்ட ஓலி போப் 2 ரன்களுக்கு ஆட்டம் இழந்திருக்கிறார். போப்பை க்ளீன் போல்டாக்கினார் ஜஸ்பிரித் பும்ரா. இது பும்ராவின் 100வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது! 146 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிவருகிறது இங்கிலாந்து. கேப்டன் ஜோ ரூட்டும், பேர்ஸ்டோவும் களத்தில் உள்ளனர்.

06 Sep 2021 6 PM

பேர்ஸ்ட்டோ அவுட்.... மீண்டும் போல்டாக்கிய பும்ரா! 

ஓவல் டெஸ்ட்டில் வரலாற்று வெற்றிபெற்று இந்தியா சாதனை... 2-1 என தொடரில் முன்னிலை! ENGvIND

ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாற ஆரம்பித்திருக்கிறது இங்கிலாந்து. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்ட்டோ பும்ரா பெளலிங்கில் டக் அவுட் ஆகி வெளியேறியிருக்கிறார். இங்கிலாந்து 146 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தோல்வியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

06 Sep 2021 6 PM

ஆறாவது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து

ஜடேஜாவின் சுழலில் இந்தப் போட்டியில் இரண்டாவது முறையாக வீழ்ந்தார் மொயீன் அலி. அவர் கிளவுஸில் பட்டு ஷார்ட் லெக்கில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ் கைகளில் விழுந்தது பந்து. 147 ரன்களுக்கு ஆறாவது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து.

06 Sep 2021 6 PM
06 Sep 2021 6 PM

மொயீன் அலி விக்கெட்

06 Sep 2021 6 PM
யார்க்கராய் பொழியும் பும்ரா
தன் அசுரத்தன யார்க்கர்களால் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, ரூட்டையும் மிரட்டிப் பார்த்துவிட்டார். ரூட் சரியான நேரத்தில் பேட்டை வைக்காமல் இருந்திருந்தால், அந்தப் பந்து (68.5 ஓவர்) ஸ்டம்புகளைப் பதம் பார்த்திருக்கும்.
Jasprit Bumrah
Jasprit Bumrah
06 Sep 2021 7 PM
06 Sep 2021 7 PM

74 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருக்கிறது இங்கிலாந்து. நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருக்கிறார் ஜோ ரூட்.

06 Sep 2021 7 PM

ஷர்துல் ராஜ்ஜியம்

ஜோ ரூட்டை வெளியேற்றினார் ஷர்துல் தாகுர். வெளியே சென்ற பந்தை அடிக்க நினைத்து இன்சைட் எட்ஜ் ஆகி போல்டானார் ரூட். 38 ரன்களோடு நடையைக் கட்டினார் இங்கிலாந்து கேப்டன். 182-7

06 Sep 2021 7 PM

புதிய பந்தை எடுக்கலாம் என்ற சூழ்நிலை இருந்தும், அதே பந்தோடு தொடர்ந்தது இந்தியா. அந்த முதல் பந்திலேயே விக்கெட்டையும் எடுத்து அசத்தினார் ஷர்துல்!

06 Sep 2021 8 PM

கேட்ச் டிராப்

ஓவர்டனின் கேட்சை மூன்றாவது ஸ்லிப்பில் இருந்த அஜிங்யா ரஹானே தவறவிட்டார். கடினமான வாய்ப்பு தான். பும்ராவுக்கு இன்னொரு விக்கெட் கிடைத்திருக்கும். ஜஸ்ட் மிஸ்!

06 Sep 2021 8 PM

விரக்தியில் ஜோ ரூட்

Joe Root
Joe Root
AP
06 Sep 2021 8 PM

ரிவ்யூவில் தப்பிய ஓவர்டன்

பும்ரா பந்துவீச்சில் ஓவர்டனுக்கு LBW கொடுக்கப்பட்டது. ஆனால், ரிவ்யூ எடுத்து தப்பித்துவிட்டார் ஓவர்டன். பெரிய அளவில் ஸ்விங்கான பந்து லெக் ஸ்டம்ப் லைனுக்கு வெளியே சென்றிருக்கும் என்று ball tracking தொழில்நுட்பம் மூலம் தெரியவந்தது

06 Sep 2021 8 PM

வோக்ஸ் அவுட்

உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கிறிஸ் வோக்ஸ். அட்டகாசமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் கே.எல்.ராகுல்.

06 Sep 2021 8 PM
தேநீர் இடைவேளை: இங்கிலாந்து 193 - 8
06 Sep 2021 9 PM

இந்தியா வெற்றி!

இரண்டாவது இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு இங்கிலாந்தை வீழ்த்தி ஓவல் டெஸ்ட்டை வென்றிருக்கிறது இந்தியா.

06 Sep 2021 9 PM

கேப்டனாகப் பெருமை கொள்கிறேன் - விராட் கோலி!

இந்த அணிக்கு கேப்டனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். லார்ட்ஸில் நான் சொன்னதுபோலவே இந்த அணியிடம் வெற்றிபெறுவதற்கான தனி குணாதிசயம் இருக்கிறது. இந்த பெளலர்களைக் கொண்டு கடைசி நாளில் இங்கிலாந்தின் 10 விக்கெட்களையும் வீழ்த்தமுடியும் என நம்பினோம். அணியாக அதை சாதித்துக்காட்டியிருக்கிறோம்.
விராட் கோலி
06 Sep 2021 9 PM

ஓவல் டெஸ்ட் : 50 ஆண்டுகளில் முதல் வெற்றி!

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தின் 50 ஆண்டுகால வரலாற்றில் இந்தியா முதல் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

06 Sep 2021 9 PM

ரோஹித் ஷர்மாவின் சதம்!

மூன்று இலக்க ஸ்கோர் அடிக்கவேண்டும் என்பது என் மனதிலேயே இல்லை. களத்தில் நீண்ட நேரம் நிற்கவேண்டும் என்றே விரும்பினேன். ஆனால், சதம் கிடைத்தது சிறப்பான அனுபவம். வெளிநாட்டு மைதானத்தில் என்னுடைய முதல் சதம் என்பதால் இதைத்தான் என்னுடைய சிறந்த சதமாகக் கருதுகிறேன்.
ரோஹித் ஷர்மா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு