Published:Updated:

லாக்டௌன் ஹேங்ஓவரில் ஆஸி... இறங்கி அடிக்கும் இங்கிலாந்து... இன்று என்ன? #EngVsAus

#EngVsAus
#EngVsAus

இன்றைய ஆட்டத்தில் ஆஸிக்கு இந்த மிடில் ஆர்டர்தான் பிரச்னையாக இருக்கும். கேரி, ஸ்டாய்னிஸ் இருவருக்கு ஃபினிஷர் ரோல் கொடுக்கப்பட்டாலும் இருவரும் அதில் பெரிதாக சோபிக்க முடியவில்லை.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி, முதல் ஆட்டம் நடைபெற்ற அதே சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று மாலை நடைபெற இருக்கிறது.

முதல் போட்டியில் ஏறக்குறைய வெற்றி உறுதி என்ற நிலையில் கையிலிருந்த ஆட்டத்தைக் கோட்டைவிட்டு தோல்வியடைந்திருந்தது ஆஸ்திரேலியா. 163 ரன் டார்கெட்டுக்கு முதல் 10 ஓவரிலேயே 90 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. ஓப்பனர்களான ஃபின்ச்சும், வார்னரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்தனர். ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சொதப்பியெடுத்தனர். ஸ்மித், மேக்ஸ்வேல், கேரி, ஸ்டாய்னிஸ் என பலமான பேட்டிங் லைன் அப் இருந்தும் சேஸ் செய்யமுடியாமல் கோட்டைவிட்டனர்.

#EngVsAus
#EngVsAus

இன்றைய ஆட்டத்தில் ஆஸிக்கு இந்த மிடில் ஆர்டர்தான் பிரச்னையாக இருக்கும். கேரி, ஸ்டாய்னிஸ் இருவருக்கு ஃபினிஷர் ரோல் கொடுக்கப்பட்டாலும் இருவரும் அதில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. ஸ்டாய்னிஸ்க்கு நல்ல யார்க்கராக வீசினால் போதும் அவரால் பெரிய ஷாட்டுக்கு செல்ல முடியவில்லை. முதல் போட்டியில் டாம் கரன் இந்த யார்க்கர் யுக்தியைத்தான் கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸுக்கு பயன்படுத்தினார். பிக்பேஷ் லீகில் ஓப்பனராக இறங்கி கலக்கியிருப்பதால் ஃபினிஷர் ரோலில் கொஞ்சம் தடுமாறுகிறார் ஸ்டாய்னிஸ். இந்த ஸ்லாட்டில் அதிகம் இறங்குவதன் மூலம் அவர் ஒரு நல்ல ஃபினிஷராகலாம்.

இதையேதான் ஆஸியின் துணைக்கேப்டன் பேட் கம்மின்ஸும் கூறியிருக்கிறார். ஜோஸ் ஃபிலிப், லாபுசேன் என மிடில் ஆர்டருக்கு ஆப்ஷன்கள் இருந்தும் கேரிக்கும், ஸ்டாய்னிஸுக்கும் தொடர் வாய்ப்புகள் வழங்குவதே சரியாக இருக்கும் என்கிறார் பேட் கம்மின்ஸ். சொதப்பிய பேட்டிங்கிலேயே பெரிய மாற்றம் எதுவும் செய்ய விரும்பாததால் பௌலிங்கிலும் ஆஸியிடம் பெரிய மாற்றம் இருக்காது. ஆவரேஜான பேட்டிங் பலமும் நல்ல பௌலிங்கும் இருப்பதால் ப்ரஷரை குறைக்க நிச்சயம் டாஸ் ஜெயித்தால் ஆஸி முதல் பேட்டிங் செய்வது அவர்களுக்குப் பலமாக இருக்கும்.

வார்னர் வெளுத்தாலும், ஃபின்ச் பின்னியெடுத்தாலும்... அடில் எப்படி ஆட்டத்தை மாற்றினார்?! #EngVsAus

இங்கிலாந்து கடந்த இரண்டு மாதமாகவே ஓய்வின்றி தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பதால் அவர்கள் எதற்கும் தயாராக இருக்கிறார்கள். ஸ்குவாடில் உள்ள எல்லா ப்ளேயர்களுமே நல்ல டச்சிலும் ஃபார்மிலும் இருப்பதால் இங்கிலாந்துக்கு பெரிய தலைவலி இருக்காது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷார்ட் பாலுக்கு அதிகம் தடுமாறுகின்றனர். இந்த விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.

கேப்டன் மார்கனுக்கே ஷார்ட் பாலில் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது. தொடர்ந்து இரண்டு மூன்று ஷார்ட் பால் செட் செய்து விக்கெட் எடுத்து விடுகிறார்கள். பட்லர், பேர்ஸ்ட்டோ இருவருமே பவர்ப்ளேயில் வெளுத்துவிடுவார்கள். டாம் பேன்ட்டன், மாலன், மார்கன், மொயின் அலி என மிடில் ஆர்டர் தரமாக இருக்கிறது. இதில் ஒன்றிரண்டு பேர் நின்றுவிட்டால் போதும் இன்னும் செட் ஆகாத ஆஸியின் பேட்டிங்குக்கு பெரிய டார்கெட்டை கொடுத்துவிடலாம்.

#EngVsAus
#EngVsAus

இன்னும் கொஞ்சம் பலம் சேர்க்க பேட்டிங்கில் சாம் பில்லிங்ஸையும் பெளலிங்கில் சாம் கரனையும் எப்படியாவது உள்ளே கொண்டு வர முடியுமானால் இங்கிலாந்து அணி கச்சிதமாகிவிடும். பௌலிங்கில் வார்னருக்கும் ஃபின்ச்சுக்கும் கடந்த ஆட்டத்தில் ஷார்ட் பாலாக போட்டிருந்தனர். இருவரும் எவ்வித சிரமுமின்றி பவுண்டரியாக அடித்து நொறுக்கினர். இங்கிலாந்து பௌலர்கள் இந்த விஷயத்தில் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வார்னர், ஃபின்ச் இருவரையும் பவர்ப்ளேக்குள் வீழ்த்திவிட்டால் அதன் பிறகு இங்கிலாந்தின் கையே ஓங்கியிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஆஸ்திரேலியா இங்கிலாந்து என்றாலே எப்போதும் பரபரப்புதான். இந்தத் தொடரிலும் பரபரப்புக்கும் த்ரில்லுக்கும் பஞ்சமில்லை. இந்தப் போட்டித் தொடரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்போகும் போட்டி என்பதால் வழக்கத்தைவிட கூடுதல் எமோஷன்கள் உறுதி.
அடுத்த கட்டுரைக்கு