Published:Updated:

Ashes: பரிதாபமாகத் தோற்ற இங்கிலாந்து... ஆஷஸைத் தக்கவைத்துக் கொண்ட ஆஸ்திரேலியா!

Australia ( ICC )

இங்கிலாந்து அணியின் தேர்வு முறை, ரொட்டேஷன் பாலிசி, கேப்டனின் ஆளுமை, கவுன்ட்டி கிரிக்கெட்டின் தரம் என இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த சிஸ்டத்தின் மீதுமே இந்தத் தோல்வி கேள்விக்கணைகளை பாய்ச்சியிருக்கிறது.

Ashes: பரிதாபமாகத் தோற்ற இங்கிலாந்து... ஆஷஸைத் தக்கவைத்துக் கொண்ட ஆஸ்திரேலியா!

இங்கிலாந்து அணியின் தேர்வு முறை, ரொட்டேஷன் பாலிசி, கேப்டனின் ஆளுமை, கவுன்ட்டி கிரிக்கெட்டின் தரம் என இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த சிஸ்டத்தின் மீதுமே இந்தத் தோல்வி கேள்விக்கணைகளை பாய்ச்சியிருக்கிறது.

Published:Updated:
Australia ( ICC )
ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ஹோபர்ட்டில் பகலிரவு ஆட்டமாக நடந்த இந்தப் போட்டியையும் ஆஸ்திரேலிய அணியே வென்றிருக்கிறது. ஒரே ஒரு போட்டியை மட்டுமே டிரா செய்த நிலையில் ஆறுதல் வெற்றி கூட கிடைக்காமல் 0 - 4 என இந்தத் தொடரை இங்கிலாந்து அணி பரிதாபமாக இழந்திருக்கிறது.

இங்கிலாந்து அணியில் இந்தப் போட்டியில் ஓப்பனரான ஹசீப் ஹமீது டிராப் செய்யப்பட்டு, ரோரி பர்ன்ஸ் மீண்டும் ப்ளேயங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். காயம் காரணமாக விலகியிருந்த பட்லருக்கு பதில் சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டிருந்தார். ஜானி பேர்ஸ்ட்டோ, ஆண்டர்சன் ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலிய அணியில் ஓப்பனரான மார்கஸ் ஹாரிஸ் ட்ராப் செய்யப்பட்டு கவாஜா ஓப்பனராக்கப்பட்டிருந்தார். கொரோனாவிலிருந்து மீண்டு வந்த ட்ராவிஸ் ஹெட்டிற்கும் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்திருந்தது.

ஜோ ரூட்
ஜோ ரூட்
ICC

டாஸை வென்று இங்கிலாந்து அணியே முதலில் பந்து வீசியிருந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 303 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. வார்னர், கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சொதப்பிய நிலையில் லபுஷான், ஹெட், க்ரீன் ஆகியோர் நன்றாக ஆடியிருந்தனர். வேகமாக 44 ரன்களை அடித்து லபுஷான் அவுட் ஆக ட்ராவிஸ் ஹெட் சதத்தையும் க்ரீன் அரைசதத்தையும் அடித்திருந்தார். இவர்கள் இருவரின் சிறப்பான ஆட்டத்தாலும் தொடக்க வீழ்ச்சிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி மீண்டு 300 ரன்களைக் கடந்தது. ப்ராட், மார்க்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ராபின்சன், வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி வழக்கம்போல சொதப்பியது. ரோரி பர்ன்ஸ் டக் அவுட் ஆகி வீழ்ச்சியைத் தொடங்கி வைக்க இங்கிலாந்து 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் முன்னிலை பெற்றது. பெரிய முன்னிலையை எடுத்திருந்தாலும் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாம் இன்னிங்ஸில் சொதப்பியது. 155 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் மார்க்வுட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

இங்கிலாந்து அணிக்கு 270 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டரை நாள்களுக்கு மேல் மீதமிருந்தது. இங்கிலாந்து அணி போராடினால் வென்றுவிடலாம் எனும் சூழலில் அதைப்பற்றியெல்லாம் யோசிக்கவே செய்யாமல் மீண்டும் சொதப்பி 124 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகி 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியை வென்றதோடு 4-0 என இந்த தொடரையும் வென்றது. ஆஷஸையும் தக்கவைத்துக் கொண்டது.
England
England
ICC

ஹோபர்ட்டில் நடந்த இந்தக் கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் பயங்கரமாகச் சொதப்பியிருந்தது. நிறைய கேட்ச்களை டிராப் செய்திருந்தது. டி.ஆர்.எஸ் ஐ சரியான நேரத்தில் உபயோகிக்கத் தவறியிருந்தது. இத்தனை தடுமாற்றங்களுக்கு பிறகும் ஆஸ்திரேலிய அணியால் இந்தப் போட்டியை மிகப்பெரிய வித்தியாசத்தில் வெல்ல முடிகிறது. எனில், இங்கிலாந்து அணி அத்தனை மோசமாக ஆடியிருக்கிறது.

இந்தப் போட்டி என்றில்லை இந்தத் தொடர் முழுக்கவுமே இங்கிலாந்து அப்படித்தான் படுமோசமாக ஆடியிருந்தது. டிரா செய்த நான்காவது போட்டியை கடந்து வேறெந்த போட்டியிலும் போராட்ட குணத்தைக்கூட வெளிப்படுத்தியிருக்கவில்லை. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் அத்தனையுமே சொதப்பல். உத்வேகமேயின்றி ஆஷஸை ஆஸ்திரேலியாவிற்கு பரிசளிப்பதற்காக மட்டுமே இங்கிலாந்திலிருந்து கிளம்பி வந்ததை போல் ஆடி முடித்திருக்கின்றனர். டெஸ்ட் போட்டிகளில் மிக வலிமையான அணியாக ஒரு காலத்தில் அறியப்பட்ட இங்கிலாந்து இப்போது இவ்வளவு மோசமாக ஆடிக்கொண்டிருப்பது வேதனையே!

இங்கிலாந்து அணியின் தேர்வு முறை, ரொட்டேஷன் பாலிசி, கேப்டனின் ஆளுமை, கவுன்ட்டி கிரிக்கெட்டின் தரம் என இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த சிஸ்டத்தின் மீதுமே இந்தத் தோல்வி கேள்விக்கணைகளை பாய்ச்சியிருக்கிறது.
2015க்கு பிறகு லிமிட்டெட் ஓவர் போட்டிகளுக்காக இங்கிலாந்து அணியில் நிகழ்த்தப்பட்ட மாற்றங்களை போன்று டெஸ்ட் போட்டிகளுக்காகவும் பிரத்யேக மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும். அணியை ரீசெட் செய்ய வேண்டும் என கேப்டன் ஜோ ரூட்டே பேசியிருக்கிறார். மாற்றங்கள் நிகழுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Pat Cummins
Pat Cummins
ICC

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரைக்கும் இந்தத் தொடர் முழுக்கவும் தங்களின் ஆதிக்கத்தை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். நம்பர் 5 இல் டிராவிஸ் ஹெட் செட் ஆகி வெளுத்து வாங்கி தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த கவாஜா அட்டகாசமான சதங்களை அடித்து தனக்கான இடத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக க்ரீன் அசத்தியிருக்கிறார். ஸ்காட் போலண்ட், மைக்கேல் நீஸர் ஆகியோரின் அறிமுகமும் அவர்களின் பெர்ஃபார்மென்ஸும் ஹைலைட்டாக அமைந்தது.

கேப்டனாக அறிமுகமாகியிருந்த பேட் கம்மின்ஸும் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி ஆஷஸ் தொடரை வென்று கொடுத்திருக்கிறார். இந்தத் தொடர் முழுவதுமே ஆஸ்திரேலிய அணிக்கு இப்படித் தொடர்ச்சியாக பாசிட்டிவ்வான சம்பவங்கள் நிறையவே அரங்கேறியிருந்தது. உலகக்கோப்பை, ஆஷஸ் என அடுத்தடுத்து மிகப்பெரிய தொடர்களை வென்று ஆஸ்திரேலிய அணி அசத்தியிருக்கிறது.

வாழ்த்துகள் ஆஸி!