Published:Updated:

Ashes : ஆறுதல் இன்னிங்ஸ் ஆடிய பட்லர்... அடைக்க முடியா ஓட்டைகளால் மீண்டும் வீழ்ந்த இங்கிலாந்து!

ஆஸ்திரேலியா ( Cricket Australia )

இங்கிலாந்து 275 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை அடைந்திருக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியையே தோற்றிருப்பதால் 0-2 என தொடரில் மேலும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.

Ashes : ஆறுதல் இன்னிங்ஸ் ஆடிய பட்லர்... அடைக்க முடியா ஓட்டைகளால் மீண்டும் வீழ்ந்த இங்கிலாந்து!

இங்கிலாந்து 275 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை அடைந்திருக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியையே தோற்றிருப்பதால் 0-2 என தொடரில் மேலும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.

Published:Updated:
ஆஸ்திரேலியா ( Cricket Australia )

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டிகளை தோற்றதே இல்லை என்கிற ரெக்கார்டை ஆஸ்திரேலியா இந்தப் போட்டியிலும் நீட்டித்துள்ளது.

275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா பெரிதாக வென்றிருக்கிறது. இங்கிலாந்து தோற்றிருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு மோசமாகத் தோற்கவில்லை. பட்லரின் போராட்டத்தால் ஆஸ்திரேலியாவிற்கு சிறிய பயத்தை காட்டியே தோற்றிருக்கிறது

கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி 386 ரன்களை எடுக்க வேண்டும் அல்லது 90 ஓவர்களும் நின்று ஆடி போட்டியை டிரா செய்ய வேண்டும். ஆனால், கையில் 6 விக்கெட் மட்டுமே இருந்தது. முக்கிய வீரர்களான டேவிட் மலானும் ஜோ ரூட்டும் நேற்றே அவுட்டும் ஆகியிருந்தனர்.

அசாத்தியமான சவாலை எதிர்கொள்ள ஸ்டோக்ஸும் ஆலி போப்பும் களமிறங்கினர். போட்டி ஆரம்பித்த மூன்றாவது ஓவரிலேயே போப் ஸ்டார்க்கின் பந்தில் ஸ்லிப்பில் நின்ற ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறியிருந்தார். ரவுண்ட் தி விக்கெட்டில் வீசிக்கொண்டிருந்த ஸ்டார்க்கை ஓவர் தி விக்கெட்டில் வருமாறு கூறி தனது கேப்டன்சி மூளையைப் பயன்படுத்தி ஸ்மித் இந்த விக்கெட்டை விழ வைத்திருந்தார். இதன்பிறகு, பட்லரும் ஸ்டோக்ஸும் கூட்டணி சேர்ந்தனர். க்ரீஸுக்குள் வந்த வேகத்திலேயே எட்ஜ் ஆகி பட்லர் ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். ஆனால், இந்த வாய்ப்பை முதல் ஸ்லிப்பான வார்னர் பிடிப்பாரென அலெக்ஸ் கேரியும் அலெக்ஸ் கேரி பிடிப்பாரென வார்னரும் விலகி ஓடியதால் சுலபமான கேட்ச்சை கோட்டைவிட்டனர். ஒரு கேட்ச் வாய்ப்பை விரயம் செய்தால் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் என்பதை ஆஸ்திரேலியா கொஞ்ச நேரத்திலேயே உணரத் தொடங்கியது. ஆஃப் ஸ்பின்னரான நேதன் லயனை வைத்து ஸ்டோக்ஸுக்கு கட்டம் கட்டியிருந்தனர். கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்த ஸ்டோக்ஸ் ஒரு கட்டத்தில் லயனிடமே வீழ்ந்தார். தனது வழக்கமான பாணியின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேவே வீசி பந்தை திருப்பிக் கொண்டிருந்த லயன் திடீரென பந்தை திருப்பாமல் மிடில் & லெக் ஸ்டம்ப் லைனில் வீசத் தடுமாறிப்போன ஸ்டோக்ஸ் பந்தை பேடில் வாங்கி Lbw ஆகினார். ஸ்டோக்ஸே காலியாகிவிட்டார் அவ்வளவுதான் இங்கிலாந்தின் கதை முடிந்தது என்றே தோன்றியது. ஆனால், அப்படி நடக்கவில்லை.

Stokes
Stokes
ECB
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவ்வளவு சீக்கிரமாக ஆஸ்திரேலியாவிற்கு வெற்றியை விட்டுக்கொடுக்காமல் பட்லரும் வோக்ஸும் நின்று போராடினர். ஒரே வழிதான் நின்று அத்தனை பந்துகளையும் தடுத்தாட வேண்டும் என்ற சூழலில் இருவருமே சூழலை சிறப்பாக சமாளித்து ஆடினர். ஸ்மித் விதவிதமாக ஃபீல்ட் செட்டப் செய்து பார்த்தும் எதுவும் வேலைக்காகவில்லை.

இருவரும் கிட்டத்தட்ட 30 ஓவர்கள் சரியாக ஒரு செஷனுக்கு விக்கெட்டே விடாமல் நின்று சிறு நம்பிக்கையை ஏற்படுத்தினர்.

97 பந்துகளில் 44 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரிச்சர்ட்சனின் பந்தில் வோக்ஸ் போல்டானார். இதன்பிறகு, வந்த ராபின்சனும் பட்லருடன் கூட்டணி போட்டு ஓரளவுக்கு தாக்குப்பிடித்தார். காபாவில் அஷ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆடியதை போன்ற ஒரு இன்னிங்ஸை டெய்ல் எண்டர்களை வைத்துக்கொண்டு பட்லர் ஆடிவிடுவாரோ என்று தோன்றியது. ஆனால், அது நடக்கவில்லை. கடைசி செஷனின் தொடக்கத்திலேயே ரிச்சர்ட்சன் ஓவரில் பட்லர் ஹிட் விக்கெட்டாகி வெளியேறினார். சில ஓவர்களிலேயே கடைசி விக்கெட்டையும் இழந்து இங்கிலாந்து தோல்வியை தழுவியது.

Buttler
Buttler
ECB
பட்லர் 207 பந்துகளில் 26 ரன்களை அடித்திருந்தார். அணியைக் காப்பாற்ற முடியவில்லை என்றாலும் அவருடைய டெஸ்ட் கரியரிலேயே மிகச்சிறந்த ஒரு இன்னிங்ஸ்களில் ஒன்றை ஆடியிருக்கிறார் என்கிற ஒரு ஆறுதல் அவருக்கு கிடைத்திருக்கும்.

ஒயிட்பால் ஹேங் ஓவரோடு டெஸ்ட் கிரிக்கெட் ஆடுபவர் என்கிற பெயரை இந்த இன்னிங்ஸ் கொஞ்சமேனும் மட்டுப்படுத்தும். இங்கிலாந்து 275 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை அடைந்திருக்கிறது. ஏற்கெனவே முதல் போட்டியையே தோற்றிருப்பதால் 2-0 என தொடரில் மேலும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. முதல் டெஸ்ட்டில் என்னவெல்லாம் தவறு செய்தார்களோ அத்தோடு சேர்த்து கூடுதலாகவே இந்த டெஸ்ட்டிலும் தவறு செய்தார்கள். அணித்தேர்விலிருந்தே பிரச்னை தொடங்கிவிட்டது. ஸ்பின்னரே தேவையில்லை என 5 வேகப்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கினார்கள். ப்ராட், ஆண்டர்சன், ராபின்சன், ஸ்டோக்ஸ், வோக்ஸ் எல்லாருமே சராசரியாக 130 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசக்கூடியவர்கள். 150 கி.மீ வேகத்தில் வீசி பேட்ஸ்மேனை திணறடிக்கக்கூடிய மார்க் வுட்டை டிராப் செய்திருந்தார்கள். அவர் இருந்தால் மட்டும் தனியாக எதுவும் செய்திருக்க முடியாது. ஆனால், முதல் போட்டியில் வார்னரை திணறடித்த ஒரே ஆள் மார்க் வுட் தான். இந்தப் போட்டியில் அவர் இருந்திருந்தால் கூடுதலாக சில விக்கெட் வாய்ப்புகளையாவது உருவாக்கியிருக்க முடியும். ஸ்பின்னரே வேண்டாம் என முடிவெடுத்து இறங்கியிருந்தார்கள். ஆனால்,

Robinson
Robinson
ICC
முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் மட்டும் 20 ஓவரை வீசியிருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ராபின்சனையே ஸ்பின்னராக மாற்றி கொடுமை செய்திருந்தார்கள். டேவிட் மலானை பந்து வீச வைத்திருந்தார்கள்.

ஒரு மெயின் ஸ்பின்னர் இல்லாமல் போனது எவ்வளவு பின்னடைவாக அமைந்தது என்பதற்கு இவையெல்லாம்தான் சாட்சி. பேட்டிங்கில் இன்னமும் ஜோ ரூட் மற்றும் மலான் இருவரும்தான் பிரதானமாக பங்களிக்க வேண்டியிருக்கிறது. ஓப்பனர்களான ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பர்ன்ஸ் இருவருமே ஸ்டார்க்கின் முதல் ஸ்பெல்லை தாண்டுவதே அதிசயமாக இருக்கிறது. ஓய்விலிருந்து வந்திருக்கும் ஸ்டோக்ஸ் இன்னமும் ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடவில்லை. ஆலி போப், பட்லர் ஆகியோர் சீரான பெர்ஃபார்மென்ஸை கொடுப்பதில்லை. பேட்டிங் ஆர்டர் படு வீக்காக இருப்பதால் கிறிஸ் வோக்ஸையும் ரூட்டால் டிராப் செய்ய முடியவில்லை. அவர் அடித்துக் கொடுக்கும் ரன்களுக்காக அவரின் சுமாரான பந்துவீச்சை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அணிக்கட்டமைப்பிலேயே இத்தனை ஓட்டைகள்! இதைத்தாண்டி ஃபீல்டிங்கில் இவர்கள் செய்யும் தவறுகள் எல்லாம் எண்ணிலடங்காதவை. கைக்கு வந்த கேட்ச்சுகளை முறையாக பிடித்திருந்தாலே இவ்வளவு மோசமான தோல்விகளை இங்கிலாந்தால் தவிர்த்திருக்க முடியும்.

ஒவ்வொரு வீரரும் அணியில் தான் இடம்பெற்றிருப்பதற்கான ஞாயத்தை செய்ய வேண்டும் என்ற மனநிலையோடு வெற்றிக்கான கூட்டு உத்வேகத்தோடு களமிறங்கினால் மட்டுமே இங்கிலாந்து இந்த தொடரில் ஆறுதல் வெற்றியையாவது பெற முடியும்.