Election bannerElection banner
Published:Updated:

''அகமதாபாத் துயரங்கள்.... ஒரே வாரத்தில் 5 கிலோ குறைந்துவிட்டேன்'' - பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ் - விராட் கோலி
பென் ஸ்டோக்ஸ் - விராட் கோலி

''நான் ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைந்துவிட்டேன். டாம் சிப்லி 4 கிலோ குறைந்துவிட்டார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 கிலோ குறைந்துவிட்டார்.''

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் வரும் மார்ச் 12 முதல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பிக்கிறது. இந்த டி20 போட்டிகளும், கடைசியாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்த அதே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்திலேயே நடைபெற இருக்கிறது என்பதில் கொஞ்சம் கலங்கிப்போயிருக்கிறது இங்கிலாந்து அணி.

அகமதாபாத் நாட்கள் குறித்து இங்கிலாந்தின் முன்னணி வீரரான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து பத்திரிகைக்கு பேட்டியளித்திருக்கிறார். ''அகமதாபாத்தில் 41 டிகிரியில் வெயில் கொளுத்துகிறது. சமாளிக்கவே கஷ்டமாகயிருக்கிறது. நான் ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைந்துவிட்டேன். டாம் சிப்லி 4 கிலோ குறைந்துவிட்டார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 கிலோ குறைந்துவிட்டார். ஜாக் லீச் மைதானத்தில் இருந்த நேரத்தைவிட கழிப்பறையில் இருந்த நேரம்தான் அதிகம்.

அதேசமயம் எங்கள் உடல்நலக்குறைவால் நாங்கள் தோல்வியடையவில்லை. இந்தியாவின் பிரமாதமான பர்ஃபாமென்ஸ், குறிப்பாக ரிஷப் பன்ட்டின் ஆட்டம்தான் எங்களின் தோல்விக்கானக் காரணம்.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் என்னுடைய பர்ஃபாமென்ஸைப் பற்றிப் பல புகார்கள் சொல்கிறார்கள். நான் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அணியின் கேப்டன், பயிற்சியாளர்கள் என் ஆட்டம் குறித்து என்ன சொல்கிறார்களோ அதுதான் எனக்கு முக்கியம்'' என்று சொல்லியிருக்கிறார் ஸ்டோக்ஸ்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு