Published:Updated:

ENG v IND: ஓங்கிய இங்கிலாந்தின் கை; கம்பேக் கொடுத்த இந்தியா... இன்று வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும்?

ENG v IND

ரூட்டின் சதம், பும்ராவின் ஐந்து விக்கெட் ஹால் என ஒரு முழுமையான கிரிக்கெட்டைப் பார்க்க மழை அனுமதிக்க, இந்தியாவுக்கு வெற்றி எட்டித்தொடும் தூரத்தில் வந்திருக்கிறது.

ENG v IND: ஓங்கிய இங்கிலாந்தின் கை; கம்பேக் கொடுத்த இந்தியா... இன்று வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும்?

ரூட்டின் சதம், பும்ராவின் ஐந்து விக்கெட் ஹால் என ஒரு முழுமையான கிரிக்கெட்டைப் பார்க்க மழை அனுமதிக்க, இந்தியாவுக்கு வெற்றி எட்டித்தொடும் தூரத்தில் வந்திருக்கிறது.

Published:Updated:
ENG v IND

இரட்டை விக்கெட்டுகள்

தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகள் என இரட்டைத் தாக்குதல் நடத்தியது இந்தியா. முந்தைய நாள்களைப் போல், பந்து அதிகமாக ஸ்விங் ஆகாமல் போக, சீம் மூவ்மெண்டோடு சற்று பவுன்சையும் நம்பி மட்டுமே பந்து வீசியது. அதில், நாள் தொடங்கி ஆறு ஓவர்களுக்கு உள்ளாகவே சிராஜ், பர்ன்ஸின் விக்கெட்டை வீழ்த்த, பும்ரா, க்ராவ்லியை ஆட்டமிழக்க வைத்தார். இரண்டு கேட்ச்களையும் பண்ட்டே பிடித்திருந்தார். ஓப்பனர்களாக இணைந்து தொடர்ந்து சோபிக்கத் தவறுகிறார்கள் என்பது இங்கிலாந்துக்குச் சோதனை என்றாலும், கடந்த 18 இன்னிங்ஸ்களில் இல்லாத கதையாக, விக்கெட் இழப்பின்றி பத்து ஓவர்களை இங்கிலாந்து கடந்திருந்தது.

இங்கிலாந்து முன்னிலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

70 ரன்கள் பின்னிலையில் தொடங்கிய இங்கிலாந்து, உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அந்த இடைவெளியை நிரப்பி 24 ரன்கள் லீட் எடுத்துவிட்டது. அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது ரூட் - சிப்லிக்கு இடையேயான பார்ட்னர்ஷிப்தான். சிப்லி ஆங்கரிங் ரோலைச் செய்ய, ரூட் அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடினார். இவ்வளவுக்கும் முந்தைய நாளை விட, நான்காவது நாள் இந்தியா ஸ்டம்ப் லைனிலேயே பந்து வீசித் தாக்கியது, குறிப்பாக ஷமியும், பும்ராவும் மிகச் கச்சிதமான லைனில் வீசினர். ஆனாலும் அழகாகவே சமாளித்தனர் ரூட்டும் சிப்லியும்.

ENG v IND
ENG v IND

ரூட் அரைசதம்

மற்ற இங்கிலாந்து வீரர்கள் நிலைத்தன்மை இன்றித் திணற, ரூட் மட்டும் முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடினார். போன இன்னிங்ஸில் ஷாட் செலக்ஷனில் அசத்தியவர், இந்த இன்னிங்ஸில் அதிரடியாகவும் ஆடினார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துகளைக் கூட ரன்களாக மாற்றினார். 2017-ம் ஆண்டுக்குப் பிறகு, இங்கிலாந்தில் வைத்து, இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரூட் 50+ ரன்களைக் கடந்திருப்பது இதுதான் முதல் முறை. 1000 ரன்களை இந்த ஆண்டில் கடந்துள்ள ரூட், 2010-க்குப் பின் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி

உணவு இடைவேளைக்குப் பின், 100-க்கும் அதிகமான பந்துகளைச் சந்தித்து, சோதித்துக் கொண்டிருந்த சிப்லியை, பும்ராவே தூக்கி விட்டார். ஆனால், ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி, சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடி 42 ரன்களைச் சேர்த்தது. இதில் ரூட்டின் பங்கு 12 ரன்கள் மட்டுமே. சிப்லியுடனான கூட்டணியில் ஆதிக்கம் செலுத்திய ரூட், இங்கே சற்றே நிதானித்திருந்தார். கடைசியாக இந்தியாவுடனான 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில், ஆறுமுறை டக் அவுட் ஆகியுள்ள பேர்ஸ்டோவின் சராசரி 7.5 மட்டுமே. ஆனால், இந்த இன்னிங்ஸில் ஒரளவு நம்பிக்கை அளித்தது அவரது ஆட்டம்.

ENG v IND
ENG v IND

இங்கிலாந்து ஆதிக்கம்

இரண்டாவது செஷனில், இந்தியா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆறுதல்பட்டுக் கொண்டாலும், 140 ரன்கள் முன்னிலை பெற்றதுடன் கைவசம் ஐந்து விக்கெட்டுகளையும் வைத்திருந்தால் போட்டியில் அந்நேரம் இங்கிலாந்தின் கையே ஓங்கி இருந்தது.

தாக்கூரின் தடாலடி

தேநீர் இடைவேளைக்குப் முன்னதாகவே லாரன்ஸின் விக்கெட்டை எடுத்திருந்த தாக்கூரிடம்தான் மூன்றாவது செஷனின் ஓப்பனிங் ஓவரை கோலி கொடுத்தார். அவரை ஏமாற்றாமல் வீசிய இரண்டாவது பந்திலேயே அபாயகரமானவரான பட்லரையும், தாக்கூர் வீழ்த்தி இருந்தார். இது இந்தியாவை நம்பிக்கையோடு அந்த இறுதி செஷனைத் தொடங்க வைத்தது.

ENG v IND
ENG v IND

சிராஜ் - சாம் கரண் மோதல்

சிராஜின் பந்தை சாம் கரண் பவுண்டரிக்கு அனுப்ப, அதற்கடுத்த பந்தையே ஷார்ட் பாலாக்கி அதை சாம் கரணின் தலைக்கு மேல் சிராஜ் அனுப்ப, அவர் குனிந்து தப்பித்தார். அதற்கடுத்த இரண்டு பந்துகளிலும் ரன்களைச் சேர்க்க சாம் கரண் தவற, அவர்களுக்குள் வார்த்தை மற்றும் பார்வைப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன.

ரூட்டின் சதம்

தொடக்கம் முதலே அற்புதமாக தனது இன்னிங்ஸைக் கட்டமைத்த ரூட், தனது 21-வது சதத்தினையும் பதிவு செய்தார். இது இந்த ஆண்டு அவருடைய நான்காவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அணி 49 ரன்கள் பின்தங்கி இருந்தபோது, களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் ரூட் ஆட்டமிழந்தும்போது, அணியை 179 ரன்கள் முன்னிலை என்ற நிலைக்கு எடுத்துச் சென்றுவிட்டுத்தான் வெளியேறினார். இதில் 109 ரன்கள் அவர் சேர்த்ததுதான் என்ற ஒன்றே போதும், இது எப்படிப்பட்ட கேப்டன் இன்னிங்ஸ் என்று சொல்வதற்கு!

ENG v IND
ENG v IND

புதுப் பந்தும் கம்பேக்கும்

80 ஓவர்கள் முடிந்த நிலையில், புதுப் பந்து எடுக்கப்பட்ட சமயத்தில், 177 ரன்கள் எடுத்துவிட்ட இங்கிலாந்து, போட்டியை இந்தியாவின் கையில் இருந்து எடுத்துச் செல்ல ஆரம்பித்துவிட்டது. ஆனால், புதுபந்தும் பும்ராவும் இந்தியாவைக் கைவிடவில்லை. அதற்கடுத்த 6 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்தியா.

பும்ரா மேஜிக்

ENG v IND
ENG v IND

முன்னதாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த பும்ரா, புதுப்பந்தோடு திரும்பி வந்தார். அந்த முதல் ஓவரிலேயே, ரூட் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். அதன்பின் அபாரமாக ஆடிக் கொண்டிருந்த சாம் கரணது விக்கெட்டை வீழ்த்திய கையோடு, அதற்கடுத்த பந்திலேயே பிராடையும் போல்டாக்கி தனது ஐந்து விக்கெட் ஹாலைப் பதிவு செய்தார். இது அவரது ஆறாவது ஐந்து விக்கெட் ஹால் ஆகும். அவரது ஹாட்ரிக் வாய்ப்பை ஆண்டர்சன், தடுத்து ஆடித் தடுத்தார். இந்தப் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து டெஸ்ட் வேர்ல்ட் சேம்பியன்சிப் பைனலின் போது தன்மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுக்குத் தற்போது பதிலடி கொடுத்துள்ளார் பும்ரா.

இந்தியா பேட்டிங்

இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியாவிற்கு, சிறப்பான தொடக்கத்தை கே எல் ராகுல் கொடுத்திருந்தார். 26 ரன்களைச் சேர்த்திருந்த அவரது விக்கெட்டை பிராட் வீழ்த்தினார். இந்திய ஸ்கோர் 52/1 என்று இருக்க, களத்தில் ரோஹித்தும் புஜாராவும் இருக்கின்றனர்.

ENG v IND
ENG v IND

வெற்றிக்கான வழிகள் என்னென்ன?

இப்போட்டியை வெல்ல வேண்டுமெனில், இந்தியா...

* ஐந்தாவது நாள் ஆட்டத்தில் முதல் ஒரு மணி நேரம் விக்கெட்டை விடாமல் இந்தியா ஆட வேண்டும்.

* ரூட் செய்ததைப் போலவே தவறான பந்துகளை அடிக்கத் தயங்கவோ, தவறவோ கூடாது.

* மிடில் ஆர்டர், முதல் இன்னிங்ஸைப் போல் இல்லாமல் பொறுப்பாக ஆட வேண்டும்.

இங்கிலாந்தில், இங்கிலாந்துக்கு எதிராக, இந்தியாவின் வெற்றிகரமான நான்காவது இன்னிங்ஸ் ரன் சேஸே 173 மட்டும்தான். இது இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் புள்ளி விவரம். ஏனெனில், நாளின் முடிவு இந்தியாவுக்குச் சாதகமாகவே இருந்தாலும், ஆண்டர்சன் என்னும் விக்கெட் வரம் தரும் அட்சய பாத்திரம், எப்பொழுது என்ன செய்யும் என யாராலும் கணிக்க முடியாது. அந்தக் கண்ணி வெடியிலிருந்து மட்டும் இந்தியா தப்பிவிட்டால், வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்து தொடரிலும் முன்னிலை பெறும்.